(Reading time: 8 - 15 minutes)

"னக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை...அவ எனக்கு வேணும்!"-ஆக்ரோஷரமாக வந்தது ராகவின் பதில்!!!

"ராகவ்!அவ வேற ஒருத்தனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணுப்பா!"

"ஸோ வாட்?எனக்கு அவ வேணும்னு முடிவு பண்ணிட்டேன்!அவ எனக்கு கிடைத்தே ஆகணும்!"

"எந்த பாவம் செய்தாலும் பிராயசித்தம் பண்ணலாம்!ஆனா,ஒரு பெண்ணை அவமானப்படுத்துறது மரணத்தை கூட கொடூரமா நமக்கு தரும்!வேணாம்பா!"

"இதோ பார்..!என் முன்னாடி மரணமே பயந்து ஓடும்!எனக்கு அவ வேணும்!அதுக்காக என்ன விலை வேணும்னாலும் கொடுப்பேன்!"

பைராகி நதி வழக்கத்திற்கு மாறாக சலசலத்து கொண்டிருந்தது.

என்றுமில்லாத சலசலப்பு!!!

அதன் கரையில்....

புன்னகை ததும்பும் முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தார் அப்பெண்மணி!!அன்று ஆதித்யாவிற்கு பாதை காட்டிய அதே பெண்மணி!!

அதே காவி நிற வஸ்திரம்!நீண்டு வளர்ந்த கூந்தல் பின்னாமல் அவிழ்ந்திருந்தது!!கழுத்தில் ருத்திராட்சம்!!முகத்தில் புன்னகை!கரத்தில் ருத்திர காப்பு!ஆனால்,நெற்றி வகிட்டில் குங்குமம்!ராஜகலையோடு,தெய்வீகமாய் இருந்தார்.

"ஏங்க!"-நதியையே கவனித்து கொண்டிருந்தவரின் கவனத்தை ஈர்த்தது யாத்ராவின் குரல்!!

மெல்ல திரும்பினார்.அவரை பார்த்த மாத்திரத்திலே அவள் மனம் நிர்மூலமானது!!

"என்னம்மா?"

"ஆ...!உங்களுக்கு யாரை பார்க்கணும்?ஏன் தனியா நிற்கிறீங்க?நீங்க யாரும்மா?"-பைராகி அதற்கு புன்னகை பூத்தார்.

"என்னோட பெயர் பைராகி!நான் இந்த நதி பிறக்கிற மலை தேசத்துக்காரி!சதா சர்வ நேரமும் ஈசனோட நாமத்தையே மூச்சா சுவாசிக்கிறவ!சின்ன வயசுலே துறவறம் ஏற்றுக்கிட்டேன்!இந்த ஊர்ல இன்னும் கொஞ்ச நாள்ல சங்கர நாராயணனுக்கு உற்சவம் நடக்கப் போகுதுன்னு கேள்விப்பட்டேன்!அதான்,அதைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்!வர வழியில இந்த சிவ லிங்கத்தைப் பார்த்து இங்கேயே நின்னுட்டேன்!"-கூறிக்கொண்டே போனார் அவர்.

"ஆனா,இங்கே தான் ஈஸ்வரர் கோவிலே இல்லையே!"

"பூட்டின கோவில் இருக்கே!அது திறக்க சரியான காலம் வந்துடுச்சே!"

"உங்களை பார்த்தா சாதாரண பெண் மாதிரியே தெரியலை...!"

"வேற எப்படி தெரியுது?"-யாத்ரா பதிலுரைக்காமல் அவர் முகத்தையே பார்த்தாள்.

"ஏ..யாத்ரா!எவ்வளவு நேரம் கூப்பிடுவேன்.காது கேட்கலை?"-கூவியப்படி வந்தவன்,எதிரில் புன்னகைத்தப்படி நின்ற பைராகியை பார்த்து சிலையானான்.

"ஏங்க...இவங்க பெயர் பைராகி!"-என்று  மீண்டும் ஒருமுறை அறிமுகப்படுத்தி வைத்தாள் அவள்.

"உங்களுக்கு எவ்வளவு காலம் இங்கே தங்கணும்னு தோணுதோ!அவ்வளவு காலம் இங்கேயே தங்கலாம்!"-அவரிடமிருந்து பதிலாய் புன்னகை!!

"யாத்ரா!அவங்களை கூட்டிட்டு வா!"

"சரிங்க..."

"நீங்கப் போங்க...நான் வரேன்!"

"சரிங்கம்மா!"-அவர்கள் சென்றதும்,திரும்பி அவர் தன் கை விரல்களால் ஏதோ செய்ய,பைராகி நதி அவரது விரல் அசைவிற்கு ஏற்ப நர்த்தனமாடியது!!

எஞ்சிய ஆதித்யரின் நினைவுகளையும் முடிக்க வேண்டியது அவசியம் அல்லவா??கூறுகிறேன்...

ன்று மாலை...யாத்ரீகை தனது மன எண்ணத்தினை ராஜகுமாரரிடம் உரைப்பதற்காக நதிக்கரைக்கு வந்திருந்தாள்.

அவளின் வருகையை அறிந்த இளவரசரின் மனம் விளக்க இயலாத வேதனையில் துடித்தது...

"கன்னிகையே..!"-இளவரசரின் குரலில் சிலிர்த்துப் போனவளின் இதயத்தில் ஆயிரமாயிரம் உணர்வுகள்...!

"எனை காண தாங்கள் எண்ணம் கொண்டதன் காரணம்?"-திடீரென அவர் உரைத்த தாங்கள் அவள் மனதை குழப்பியது.

"என் மீது கோபம் கொண்டுள்ளாரா?"-என்று மனதில் எண்ணியவள் தொடர்ந்தாள்,

"இளவரசே!நான் தம்மிடம் ஒன்று உரைக்கவே இவ்விடம் வருகை தந்தேன்!"

"தயை கூர்ந்து கூறாதே...!உனது விருப்பத்தை ஈடேற்ற இயலாத நிலையில் உள்ளேன்!"-மனதில் எண்ணியவர் வெளியில்,

"எண்ணிய எண்ணம் யாதாயினும் தயங்காமல் கூறுங்கள்!"என்றார்.

"இளவரசே..!அன்று தாம் என்னை அந்தக் கொடிய சிம்மத்திடமிருந்து ரட்சித்தீர்கள்..!!அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுகிறீர்கள்!யாராயினும் தம்மிடத்தில் எளிதாய் ஈர்க்கப்படுவர்.நானும் அதற்கு விதிவிலக்கல்ல!!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.