(Reading time: 8 - 15 minutes)

"................"

"தம்மை நோக்கி என்னை ஈர்த்தது...!"

"ஏதுமல்ல..!"-அவள் கூறுவதற்கு முன் இவர் கூறி முடித்தார்.

"விதியின் விளையாட்டை நிதர்சனம் என்று எண்ணாதே!"-துடித்துப் பேனாள் யாத்ரீகா!

"இளவரசே..!"

"என்ன நினைத்தாய் நீ?அரசகுமாரனான நான் சேனாதிபதி கன்னிகை உன்னிடத்தில் ஈர்க்கப்பட்டேன் என்ற மாயையை உருவாக்கிக் கொண்டாயா?"

"....................."

"உடனடியாய் இவ்விடம் நீங்கி செல்வாயாக!மனம் குடிக்கொண்ட பிரமைக்கு அஸ்திவாரமிடாதே!இங்கிருந்து விலகி விடு!!"-யாத்ரீகையின் மனம் மாண்டே போனது எனலாம்!அவள் கண்ணீரோடு அவ்விடம் விட்டு ஓடினாள்.அவள் சென்றதும் அப்படியே நதிக்கரையில் மண்டியிட்டார் இளவரசர்.

"எனை மன்னித்தருள் தேவி!என்னால் இப்பிறப்பில் உன் கரம் பற்ற இயலாது!எனை மன்னித்தருள்வாயாக!ஆதித்யவர்மன் தனது வாழ்வினில் இக்கணம் தோற்றவனாகிறான்!என்னை மன்னித்தருள்வாயாக!"-மனமுடைந்து கண்ணீர் வடித்தார் இளவரசர்.

றுநாள் காலை.....

இதோ இனி ஏதுவும் பிரயோஜனப்பட போவதில்லை!!இன்னும் சில நாழிகைக்குள் இளவரசர் அனைத்தையும் துறக்க போகிறார்.அங்கு அதே சமயம்,சபா மண்டபம் தன்னில் குருக்ஷேத்திரன் முடிச்சூடி கொள்ள போகிறான்.அவனது மகாராணியாக,பைரவக்கோட்டையின் சக்கரவர்த்தினியாக பிரக்யாயினி அறிவிக்கப்பட போகிறாள்.காலம் நகராமல் நின்றிருக்கலாம்!அனர்த்தங்கள் பல நிகழாமல் தடுக்கப்பட்டிருக்கும்!!ஆனால்,இயற்கையின் விதி!!

வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் சரி,காலமானது நகர்ந்தப்படி தான் இருக்க வேண்டும் என்பது!!!அவ்விதிக்கு கட்டுப்பட்டு காலம் உழல தான் வேண்டும்!!

வாழ்வோ,வாகனமோ அழுத்தத்தினால்  புவியில் புதைக்கப்பட்டால் அவ்வளவு எளிதிலோ,அல்லது துணை ஏதுமின்றியோ வெளி வர இயலாது!!

என்ன செய்வது,வாழ்வோ!வாகனமோ!சுமைகள் அதிகமாகுமாயின் புதைந்தே தீரும்!!(ஸ்ரீமத் பகவதம்)

இங்கு தடுப்பதற்கு உபாயம் இல்லாத சமயத்தில் விதியை வெற்றிக் கொள்ள சத்திய நெறியே சிறந்ததாகிறது!!

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:969}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.