(Reading time: 14 - 27 minutes)

'!! நத்திங் டாக்டர்... சாரி டு டிஸ்டர்ப் யூ... நான் அப்புறம் வரேன்..' சொல்லிவிட்டு விலகி நடந்தான். உள்ளே சென்று இவரிடம் யார் பாட்டு வாங்குவதாம்!!! ஆனால் மனம் மட்டும் நிலைக்கொள்ளவில்லை.

விஷ்வா மருத்துவமனையின் வரவேற்பை அடைய பரத்தின் முகம் இன்னமும் தனசரியின் உள்ளேயே புதைந்திருக்க, அவனை இன்னமும் கவனிக்கவில்லை அருண்.

'ஹாய் ... விஷ்வா...' விஷ்வாவை பார்த்ததும் அருண் குரல் கொஞ்சம் உற்சாகம் கலந்து ஒலித்தது. அவன் குரலில் யோசனைகளில் இருந்து தன்னிலை பெற்றவனாக திரும்பினான் விஷ்வா. அவர்கள் பேசுவது தெளிவாக விழுந்தது பரத்தின் காதுகளில்.

'ஓ... அ...ருண்... வா...ங்க..' கஷ்டபட்டு புன்னகையை வரவழைத்துக்கொண்டான் விஷ்வா.

அன்று பெங்களுர் மருத்தவமனையில் அருண் பரத்தை பார்த்த பார்வை, அவன் எதிரிலேயே அபர்ணாவின் அப்பாவிடம் இவன் பெண் கேட்ட காட்சி, இவையெல்லாம்  இப்போது விஷ்வாவின் மனத்திரையை விட்டு ஏனோ விலக மறுத்தது.

'நீங்க இங்கே தான் வொர்க் பண்றீங்களா???' என்றான் அருண்.

'எஸ். அருண்... ' என்றான் மெதுவாக  'சொல்லுங்க அருண் எப்படி இருக்கீங்க??? என்ன இந்த பக்கம்???' என்றான் எதுவுமே தெரியாதது போல்...

'இங்கே என் சிஸ்டர் அட்மிட் ஆகி இருக்காங்க. .டான்சர் இந்துஜா!!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'ஓ... அப்படியா??? டான்சர் இந்துஜா.. ஐ யாம் நாட் ஷூர். நான் அட்டென்ட் பண்ணலை அவங்களை..' என்றான் அவளை பார்த்ததே இல்லை என்பதை போல். இதையெல்லாம் அந்த தினசரியின் பின்னால் இருந்த கண்கள் படித்துக்கொண்டே இருந்தன.

'நாளைக்கு ஏதோ சர்ஜரின்னு சொன்னாங்க விஷ்வா... கொஞ்சம் என்ன ஏதுன்னு பார்க்க முடியுமா உங்களாலே ..'

'ஸீ.. மிஸ்டர் அருண்...' என்றான் நிதானமாக வார்த்தைகளை தேடியபடியே. 'இன்னொரு டாக்டர் ட்ரீட்மென்ட்லே என்னாலே தலையிட முடியாது... அதுதான் ப்ரோஃபஷனல் எதிக்ஸ் அண்ட் டோன்ட் வொர்ரி இங்கே இருக்கிற டாக்டர்ஸ் எல்லாரும் தி பெஸ்ட் டாக்டர்ஸ்.. தே வில் டேக் கேர் ஒண்ணும் ப்ராப்ளம் இருக்காது.. சரியா.. எனக்கு இப்போ டைம் ஆச்சு நான் கிளம்பறேன்...' சட்டென பேச்சை முடித்துக்கொண்டு நகர்ந்தான் விஷ்வா.

அந்த நர்ஸ்களின் பேச்சில் துவங்கி இப்போது விஷ்வாவின் பேச்சு வரை சிதறிக்கிடந்த புள்ளிகளை இணைத்துக்கொண்டே வந்தது பரத்தின் மனம்.

'எனக்காக ஏதாவது பைத்தியக்காரத்தனம் செய்கிறானா என்ன இந்த விஷ்வா????

'அன்று அத்தனை தூரம் உதவி செய்து அஸ்வினியின் உயிரை காப்பாற்றியவனிடம் இப்படி பேசியது தவறுதான். பெரிய தவறுதான். ஆனாலும்...........' யோசித்தபடியே விஷ்வா நடக்க......

விறுவிறுவென ஒரு வேகத்தில் சென்று கொண்டிருந்த அவனது கால்களையும், சிந்தனையையும் தடுத்து நிறுத்தியது அந்த கரம். பாசத்துடன் அவன் தோளில் விழுந்த பரத்தின் கரம்.

'ஹாய்... ப்ரதர் ...' பளீரென புன்னகைத்தான் பரத்!!!!

சாரி மை டியர் ஃப்ரெண்ட்ஸ். ஒரு டீசர் அனுப்பினேன். ஆனால் அந்த சீன் இந்த அத்தியாயத்தில் கொண்டு வர முடியவில்லை. பையனுக்கு எக்ஸாம் டைம் என்பதால் சின்ன எபி தான் கொடுக்க முடிஞ்சது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. அடுத்த எபிலே நிறைய சொல்றேன். எப்போதும் போல் உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். Thanks Thanks.

Episode # 10

Episode # 12

தொடரும்......

{kunena_discuss:982}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.