(Reading time: 14 - 27 minutes)

'வர் இன்னும் கிளம்பலை சார். பேஷண்ட்ஸ் பார்த்திட்டு இருக்கார். உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் இருக்கா???'

'நான் அவரை பெர்சனலா பார்க்கணும். நான் அவரோட ப்ரதர்..' என்றான் பரத்.

'ஓ.. சாரி சார்... நீங்க உள்ளே போங்க நான் அவருக்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன்..' படபடத்தாள் அந்த பெண் வரவேற்பாளர்.

'இல்ல இல்ல நோ ப்ராப்ளம். இப்போ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். வீட்டுக்கு கிளம்பிட்டாரான்னு தெரிஞ்சுக்கதான் கேட்டேன். லெட் ஹிம் கம். நான் இங்கேயே வெயிட் பண்றேன்..' வேலையின் இடையே அவனை தொந்தரவு செய்ய விரும்பாதவனாக அங்கேயே  அமர்ந்து காத்திருக்க துவங்கினான் பரத்.

உள்ளே அன்றைய வேலைகளை முடித்துவிட்ட பிறகும் கிளம்ப மனமில்லாமல்தான் தனது அறையில் அமர்ந்திருந்தான் விஷ்வா.

நாளை மாலை இந்துவுக்கு அறுவை சிகிச்சை. என்னதான் அவள் அறைக்கு செல்லவில்லை என்றாலும் அங்கே என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்பதை இவனால் அறிந்துக்கொள்ள முடிகிறது. காரணம் இல்லாமல் கால்கள் அவள் அறையின் அருகில் இரண்டு மூன்று முறை சென்று சென்று திரும்பி இருக்கிறது.

நாளை நடக்கவிருக்கும் அறுவை சிகிச்சைக்கு அவள் உடல் நிலை தயாராக இருக்கிறதா என்பதற்கான பரிசோதனைகளை மயக்க மருந்து நிபுணர்கள் செய்துக்கொண்டிருக்கின்றனர். இவன் உள்ளம் இங்கே பரிதவித்துக்கொண்டிருக்கிறது.

'ஒரு வேளை ரொம்பவும் பயந்து போயிருக்குமோ அந்த நிலாப்பொண்ணு!!!'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அதே நேரத்தில் அங்கே வரவேற்பில் பரத் ஒரு தினசரியை புரட்டிக்கொண்டிருக்க அப்போது காதில் விழுந்தது அங்கே இருந்த இரண்டு நர்ஸ்களின் பேச்சு.

'நாளைக்கு சர்ஜரி அந்த டான்சர் இந்துஜாவுக்கு..

'யாரு அன்னைக்கு நம்ம ஹாஸ்பிடல் டான்ஸ் ஆடிட்டு இங்கே வாசல்லே அடிப்பட்டுச்சே.. விஷ்வா டாக்டர் தூக்கிட்டு ஓடி வந்தாரே அந்த டான்சர்தானே..'

'ஆமாம்... அவங்கதான்... எப்படி தூக்கிட்டு ஓடி வந்தார் அந்த பொண்ணை... இதுவரைக்கும் எதுக்கும் அவர் இப்படி பதறி நான் பார்த்ததே இல்லை..'

'ஆமாம் நான் கூட அந்த பொண்ணுக்கும் அவருக்கும் ஏதோ இருக்கும்னு நினைச்சேன்..' அவர்கள் பேசிக்கொண்டிருக்க தினசரியின் பக்கத்தை திருப்பும் சாக்கில் அவர்கள் மீது ஒரு முறை பார்வையை பதித்து திருப்பிக்கொண்டான் பரத்.

'அட இது என்ன கதை???' சின்னதாக ஒரு ஆர்வம் தொற்றிக்கொண்டது அவனிடம். யாராம் அந்த டான்சர் இந்துஜா???

'ஆமாம் முதல்லே அந்த ஒரு நாள் அவர் அந்த பொண்ணு மேலே காட்டின அக்கறை, ராத்திரி பூரா அந்த ரூம்லேயே இருந்தது இதெல்லாம் பார்த்ததும் எனக்கும் அப்படிதான் தோணிச்சு. ஆனா இப்போ திடீர்னு அந்த ரூம் பக்கமே இவர் வர்றது இல்லையே. டாக்டர் புவனா தானே அட்டென்ட் பண்றாங்க இந்த பேஷண்ட்டை..' தினசரியின் மீதே பார்வையை பதித்திருந்தவனின் புருவங்கள் ஒரு முறை உயர்ந்து இறங்கின.

இத்தனையும் பேசிவிட்டு அவனுக்கு சின்னதாக ஒரு புதிரை போட்டுவிட்டு 'சரி நமக்கு ஏன் அடுத்தவங்க விஷயம்..' என நகர்ந்தனர் அந்த இரண்டு நர்ஸ்களும். அவர்கள் நகர்ந்ததும் கொஞ்சமாக சிரித்துக்கொண்டான் பரத்.

'மருத்துவமனைகளை கூட விடுவதில்லையா இது போன்ற கிசுகிசுக்கள்!!!'

ஆனால் யார் அந்த இந்துஜா என்ற கேள்விக்கு அடுத்த இரண்டாம் நிமிடமே பதில் கிடைக்கும் என அவனுக்கு தெரியவில்லை அப்போது, அடுத்த இரண்டாம் நிமிடம் அந்த மருத்துவமனையின் வரவேற்பில் வந்து நின்றான் அவன். அருண்!!!

'டான்சர் இந்துஜா எந்த ரூம்லே இருக்காங்க. நான் அவங்க பிரதர்!!!' அவன் வார்த்தைகள் தெளிவாக காதில் விழ  கொஞ்சம் திடுக்கிட்டு போய் நிமிர்ந்தான் பரத்.

'உங்க கிட்டே விசிட்டர் பாஸ் இருக்கா. இல்லைனா நீங்க உள்ளே போக முடியாது..உள்ளே அவங்க அட்டெண்டர்ஸ் யாரவது இருந்தாங்கன்னா போன் பண்ணி அவங்களை பாஸோட இங்க வரச்சொல்லுங்க...' என. அந்த மருத்துவமனையின் விதிமுறைகளை அவனுக்கு அந்த வரவேற்பாளர் விளக்கிக்கொண்டிருக்க..

அந்த நர்ஸ்களின் பேச்சில் இருந்த புதிருக்கான விடையின் நூலிழை தெரிவது போல் இருக்க கொஞ்சம் திகைப்பில் விழுந்தவனாக பரத் அருணையே பார்த்திருந்தான். அருண் இவனை கவனிக்கவில்லை.

அதே நேரத்தில் தனது அறையை விட்டு வெளியே வந்த விஷ்வா இந்துவின் அறையின் அருகில் வந்த போது இதுவரை இருந்த அவனது  உறுதி கொஞ்சம் தளர்ந்து போயிருந்தது.

'நிச்சியமாக பயந்து தளர்ந்து போயிருக்கும் அந்த பெண். ஒரு முறை அவளிடம் சென்று பயப்பட ஒன்றுமில்லை என்பதை மட்டும் சொல்லிவிட்டு சென்று விடலாம்.' ஒரு முடிவுடன் அறையின் கதவை தட்டிவிட்டு உள்ளே கொஞ்சமாக எட்டிப்பார்த்தவனுக்கு கொஞ்சம் திடுக்கென்றது.

உள்ளே நின்றிருந்தார் டாக்டர் புவனா!!!

'யெஸ்... விஷ்வா...' என்றார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.