(Reading time: 14 - 27 minutes)

'காபி எப்படி???" ... அஸ்வினி

'சான்ஸ்லெஸ்.. இப்படி ஒரு நல்ல காபி குடிச்சு நாளாச்சு..' என்றான் அவன்.

'எங்கக்கா சமையலும் ரொம்ப நல்லா இருக்கும். நைட் சாப்பிட்டு கிளம்புங்க...'

'ஹேய்... வாய்ப்பே இல்லை .. எனக்கு ஒரு முக்கியமான அப்பாய்ன்ட்மென்ட் இருக்கு ...'

'அதெல்லாம் இருக்கட்டும் சாப்பிட்டு போய் பார்க்கலாம்..' அம்மாவும் சொல்ல.. அவன் மறுக்க..

'நாமெல்லாம் சொன்னா கேட்பாரா??? சொல்ல வேண்டியவங்க சொல்லணும்னு எதிர்பார்க்கிறார்...' பட்டென  சொல்லியே விட்டாள் அஸ்வினி.

நிமிரவில்லை அவன். கப்பில் மிச்சமிருந்த காபியை நிதானமாக சுவைத்துக்கொண்டிருந்தான். 'ஆமாம்!!!! சொல்ல வேண்டியவள் சொல்லட்டுமே!!!' என்பதை போல.

அபர்ணாவிடமிருந்து எந்த பேச்சும் இல்லை. கொஞ்சமாக வலிக்கத்தான் செய்தது அவனுக்கு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

'ஏன் சொல்ல மாட்டாளாம்??? ஏன் நான் ஆரத்தி எடுக்க சொன்னேன் என்ற கோபமா என்ன??? ஒரு வேளை திடீரென அப்படி இருவரும் சேர்ந்து ஆரத்தி எடுத்துக்கொள்ளும் சூழ்நிலை வாழ்க்கையில் வந்து விட்டால் என்ன செய்வாளாம்?? அவன் மனதின் மறைவான பிரதேசம் அதன் தவிப்பில் கேள்விக்கேட்டு கூவிக்கொண்டிருக்க...

அங்கே சில நொடி மௌனம் நிலவ... எல்லார் பார்வையும் அபர்ணாவை தொட்டு திரும்ப, பேசாமலே நின்றிருந்தாள் அவள்.

'நான் எதற்காக சொல்ல வேண்டும்??? சாப்பிடாவிட்டால் போகட்டும்..' தனக்குள்ளே சொல்லிகொண்டவளின் மனம் மட்டும் நிலைக்கொள்ளவில்லை. காபியை முடித்துவிட்டு சட்டென எழுந்து விட்டான் பரத்.

'நான் கிளம்பறேன் அஷோக் டைம் ஆச்சு...'

'ஏன் பரத்??? ... நைட் சாப்பிட்டு போகலாம் இல்ல அஸ்வினிக்கு அடிப்பட்டிருந்தப்போ நீங்க நிறைய ஹெல்ப் செய்திருக்கீங்க.. இப்போ இங்கே வந்து சாப்பிடாம போனா எங்க எல்லாருக்கும் கஷ்டமா இருக்கும்' அஷோக் சொல்ல அவன் மறுத்து ஏதோ சொல்ல வாயெடுக்க

'நீ விடு அஷோக்.. சார் நம்ம வீட்டிலேயெல்லாம் சாப்பிட மாட்டார். அவர் பெரிய ஆளு பணக்காரர்...'  நறுக்கென வெட்டினாள் அபர்ணா. அந்த வார்த்தைகளில் ஒரு நொடி கண்களை மூடி திறந்த பரத். அவளை நோக்கி திரும்பினான். மெல்ல அவள் அருகில் வந்தவன்...

'எப்படிங்க மேடம்???. நான் பெரிய ஆளு.. பணக்காரனா???" அழகாய் சிரித்தான். அந்த சிரிப்பிலும் அவள் கண்களை ஊடுருவிய பார்வையிலும் ஆயிரம் கேள்விகள்.

'எல்லாம் உன்னாலேதானேடி??? உனக்காகதானேடி???'  

ஏனோ எத்தனை முயன்றும் அவன் கண்களை விட்டு பார்வையை மட்டும் விலக்கிகொள்ள முடியவில்லை அவளால். அவள் கண்ணோரம் சின்னதாய் சேர்ந்தது ஒரு நீர் முத்து.

சட்டென சுதாரித்து 'ஒகே.. அபர்ணா.. நான் கிளம்பறேன். தேங்க்ஸ் ஃபார் தி காஃபி. .' சொல்லிவிட்டு நகர்ப்போனவனை நிறுத்தியது அவள் குரல். அதற்கு மேல் தாக்கு பிடிக்க இயவில்லையோ???  

'ப்ளீஸ் பரத்.. நைட் சாப்பிட்டு போங்களேன்...'எது செலுத்தியதோ சொல்லியேவிட்டாள் அபர்ணா!!!

நின்றுவிட்டான் பரத்!!! 'ஷூர். அபர்ணா வார்த்தைக்கு மறுப்பே கிடையாது...'

அம்மாவின் இதழ்களிலும், அஸ்வினியின் இதழ்களிலும் சின்னதாக ஒரு புன்னகை. அவன் வார்த்தைகளில் இருந்த உறுதியும், காதலும் அஷோக்கிற்கு பல விஷயங்களை உணர்த்தியது. ஏனென்றே தெரியாமல் அவன் மனம் ஒரு முறை அருண் இடத்தில் பரத்தை நிறுத்தி பார்த்தது!!!

அவன் இரவு உணவை முடித்துவிட்டு கிளம்பும் வரை அந்த வீட்டின் காற்றில் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்தது. அஷோக்கும், அஸ்வினியும் அவனுடன் மனதால் நிறையவே நெருங்கி விட்டிருந்தனர். அவன் கிளம்பும் வரை அப்பா மட்டும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

'அங்கிள்ளை மட்டும் பார்க்க முடியலையே...' என்றான் பரத். 'சரி ஒண்ணு பண்றேன்.. நாளைக்கு மார்னிங் எனக்கு ரெண்டு பிசினஸ் மீட் இருக்கு. அது முடிச்சிட்டு நைட் தான் பிளைட். கிளம்பறதுக்கு முன்னாடி வந்து அவரை பார்த்துட்டு போறேன்...' சொல்லிவிட்டு எல்லாரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான்.

அவனெங்கே அறிந்தான். நாளை அவன் வரும் நேரத்தில் பூ பழ தட்டுக்களுடன் குடும்ப சகிதமாக அபர்ணாவின் வீட்டுக்கு வரப்போகிறான் அருண் என!!!'

நேரம் இரவு ஒன்பதை தொட்டிருக்க அந்த மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தான் பரத். அது விஷ்வாவின் மருத்துவமனை. இந்த முறை அவன் சென்னை  வருவதை கூட விஷ்வாவிடம் தெரிவிக்கவில்லை. இரண்டு நாட்களாக விஷ்வாவும் அவனை அழைக்கவில்லை.

தினமும் அவன் மருத்துவமனை விட்டு கிளம்ப இரவு ஒன்பது ஆகிவிடும் என்பதை அறிந்திருந்த படியால் திடீரென அவன் முன்னால் சென்று நிற்கும் உத்தேசத்துடன் வந்து நின்றான் அங்கே!!!

அந்தக் மருத்துவமனையின் வரவேற்பை நெருங்கி 'நான் டாக்டர் விஷ்வாவை பார்க்கணுமே அவர் இருக்காரா வீட்டுக்கு கிளம்பிட்டாரா???.' என்றான் பரத்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.