(Reading time: 20 - 39 minutes)

ங்க நீ தனியா மேனேஜ் செய்துபியா….இல்ல நான் கூட வரவா…?” அடுத்து அவன் கேட்க…..

 இருக்கும் மன நிலையில் ரியாவுக்கு அவளுக்கு துணையாக யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றுகிறது….. அதோடு கனவில் இருந்த அழு மூஞ்சி மூடு வேற சேர்ந்து விவன் பக்கத்தில் இருந்தால் பெட்டரா இருக்குமேன்னு ஒரு ஃபீல் இருக்குதுதான்…..ஆனாலும் இதற்கு எப்படி சரி என சொல்லவாம்…?

என்னதான் அங்க தனியா ட்ரெஸிங் ரூம் இருந்தாலும்….இப்பதான் தனியா ரூம் வேணும் என கேட்டு தனி ரூம் வந்திருக்கிறாள்….இதில் அவன இங்க எப்படி வர சொல்லவாம்….முறைத்தாள்…

“வேண்டாம்னு வாய திறந்து சொன்னா கூட புரிஞ்சுப்போம்…” என்றபடி எழுந்து போனான் அவன்….

அடுத்து ரியா குளித்து முடித்து சாப்பிட என வெளியில் வந்தவள்  கிட்சனைப் பார்த்து போனாள்….

வீட்டோட செர்வென்ட்ஸ் எல்லொருக்கும் இன்னைக்கு லீவு என இவளுக்கு தெரியும்….. விவன்  அரேஞ்ச்மென்ட்தான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

இவள் வாமிட் அது இது என தள்ளாடும் போது பார்க்கும் மெயிட்ஸ் என்ன நினைப்பார்களோ என்ற கவலை இவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் இருப்பதின் வெளிப்பாடு இது…. இந்த மாதம் முழுவதுக்குமே இப்படி எதோ ப்ளான் சொல்லி இருக்கிறான் அவன்…..

ஃப்யூ டேஸ் இங்க இருந்துட்டு அடுத்து வேற எதோ வீட்டுக்கு போய் தங்கி இருந்துட்டு வரலாம் என்பது அவன் ஏற்பாடு…. ஊர் கண்ணுக்கு அது ஹனி மூன்….இவளைப் பொறுத்தவரை அது ஹைடிங்……

அதற்கு மேல் அதை நினைக்கவும் மனதை பிசைவதால் நடப்புக்கு வந்தாள். எப்டியும் வீட்ல வேலைக்கு ஆள் இல்லை….

ஆக சாப்டலாம்னு சொல்லிட்டு போனவனுக்கும் சேர்த்து எதையாவது செய்து வைக்கலாம் எனதான் கிட்சனை நோக்கி இவள் போனதே….

ஆனால் இவள் அங்கு போகும் போதே ஸ்டவில் ஒரு பக்கம் இட்லி குக்கர் ஸ்ஸிக் கொண்டிருக்க…… அடுத்த பர்னர் மீது ஒரு குட்டி கடாயில் தக்காளிச் சட்னி ரெடியாக இருந்தது….

அதை திறந்து பார்த்து மூடி வைத்தவள் முகத்தில் அவளையும் அந்த நேர சூழலையும் மீறி சின்னதாய் புன்னகை….

‘இவர் இட்லிப் பாண்டியர் போலயே….. எப்பவும் இட்லியா கண்ல காமிக்கிறார்…’ மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், கிட்சனில் ஒரு ஓரமாய் திறந்து கிடந்த பின் வாசலை எட்டிப் பார்த்தாள்…

இவள் நினைத்தபடி அங்குதான் நின்றிருந்தான் அவன்….. ஆனால் வெகு அருகில் இல்லாமல் சற்று தொலைவாய்…..

மர பலகைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஷெட்டில் வெளியே தெரியுமாறு நீட்டிக் கொண்டிருந்த மர பலகைகள் மீது ராட்சச சைஸ் பாலீதீன் கவர்களை போட்டு  மூட முயற்சித்துக் கொண்டிருந்தான் அவன்…. ஷெட்டின் மேல் பாகம் ஸ்டீல் ஷீட்டால் ஆகி இருந்தாலும் பக்கவாட்டு புறம் எல்லாம் எந்த மறைப்பும் அற்ற திறப்புதான்….

வானம் சற்றாய் கருத்திருப்பது இப்போதுதான் இவளது கவனத்தில் படுகிறது….. இன்னைக்கு ஏதோ புயல் அலர்ட் கேள்விப்பட்ட நியாபகம்….

 இந்த யார்ட் வேலைக்கு ஆட்கள இன்னைக்கு வர சொல்லி இருக்கானா,  இல்லை அவங்க வர்ற நேரம் இன்னும் வரலையா தெரியலை….. இவனே இதையெல்லாம்  மூடி வச்சுடலாம்னு  பார்க்கான் போல…..

மனதில் சின்னதாய் ஒரு உரசல்….. இப்ப அவன் இருக்ற ஸ்டேட்டஸோட எந்த பந்தாவும் இல்லாமல் இன்னும் லேபர்ஸ் செய்ற வேலையை இறங்கி செய்து கொண்டு….. பழைய சைக்கிள் பார்ட்டி விவன்….

டிஃபன் ரெடி செய்துறுப்பது கூட அவன்தான்….

ஒரு மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டவள்…… அந்த நினைவையும் துரத்திவிட்டு…..சூழ்நிலையை படித்தபடியே  அவனை நோக்கி சென்றாள்….

அந்த ஷெட் ஏறக் குறைய 15 அடி உயரமாவது இருக்கும்…… அதில் கிட்டதட்ட ஒரு 12 அடி உயரத்திற்காவது மர பலகைகள் அடுக்கி வைக்கப் பட்டிருக்குமாயிருக்கும்……

அதில் ஒரு 10 அடி  அளவில் அங்கும் இங்குமாய் வரிசையிலிருந்து நீட்டிக் கொண்டிருந்த பலகை முனைகளின் மீது நின்று கொண்டு….. மேலே 12 அடியிலிருந்து கீழ் நோக்கி அந்த பாலீதீன் கவரை விரிக்க முயன்று கொண்டிருந்தான் அவன்…..

இவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே…. அந்த பலகை இடுக்கில் இருந்தது போலும் அது…..சரேலென தலையை வெளியே நீட்டிய அது அவனது முட்டு வரை மட்டுமே ஷார்ட்ஸ் அணிந்துருந்த அவனது கணுக்காலுக்கு மேலாக  விர்ரென சுற்றியது………கருநாகம் !!!

அவ்வளவுதான்….அவ்வளவேதான்….வீல்ல்ல்ல்ல்ல்ல்ல் என அலறியபடி அவனை நோக்கி  தலை தெறிக்க ஓடத் துவங்கினாள் ரியா…..

பாண்டியர் பராக்கிரமரை நான் விவாஹம் செய்ய கூடாது என ருயம்மா அழுத சீன் ஒரு நொடி….. இவள் தாலியில் தெறிந்த பராக்கிரமனின் மோதிரம் அடுத்த நொடி……அது ரத்தமாய் மாறிப்போன மாயம் மூன்றாவது செகண்ட்……இப்படி ஒன்றொன்றும் ஒவ்வொரு விதமாய் இவள் மனதில் தெரிய….

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.