(Reading time: 20 - 39 minutes)

னவு முடிந்த நேரத்திலிருந்து இவள் இதயத்தை ஏற்கனவே இறுக பிசைந்திருந்த அந்த வலியும் சேர…..

சட்டென புரிகிறது….இந்த எல்லாத்துக்கும் அர்த்தம் ‘விவன் உயிருக்கு ஆபத்து!!!!!’….. அவன் இல்லாம போக போறான்!!!!! …அதுதான் ருயம்மாவோட அழுகை…. தாலியில் மோதிரம் ரத்தமாகுதுன்னா…. வேற என்ன அர்த்தம் இருக்க முடியும் இதுக்கு…. அதான் இவள் அடி மனதில் இத்தனை வேதனை…

எத்தனை செகண்டில் அவனை சென்றடைந்தாள் என்றும் தெரியாது…எப்படி செய்தாள் எனவும் தெரியாது…… என்ன செய்தாள் எனவும் தெரியாது….அவன் காலிலிருந்த பாம்பை உருவி தூக்கி தூற எரிந்திருந்தாள்….

“ஹேய் லூ….என்ன ……என்ன செய்துட்ட நீ….?” என தத்ததளித்தபடி விவன் அவளை இறுக்கி அணைக்கும் போது பாதியும்……

அவன் ““ஏன்டி என்ன இப்டி படுத்ற….?” என்ற போது கொஞ்சமும்…

“கைட்ட போய் பாம்ப……” என்ற போது முக்காலும்

“சார் பாம்ப அடிச்சுட்டேன் சார் ….நீங்க அம்மாவ உள்ள கூட்டிட்டுப் போங்க…. “ என்ற செக்யூரிட்டியின் வார்த்தையில்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

 தான் நொறுக்கப் போவது போல் விவனை இறுக்கி அணைத்திருந்த பிடியை மெல்ல தளர்த்தும் போது முழுவதுமாய் .புரிந்தது இவளுக்கு தான் என்ன செய்து வைத்திறுக்கிறோம் என்று….

ஆனாலும் விவன் இஸ் சேஃப்…..  என்பதைத் தவிர வேறு எதையும் அந்நேரம் அவளுக்கு நினைக்க பிடிக்கவில்லை…..

பலகைகளில் பாம்பு என்பது சாதாரண விஷயம் தான் எனினும் இப்படி ஒரு அட்டாக்கை விவனுமே எதிர்பார்த்திருக்கவில்லை….

ஆக எதிர்பாரா நொடியில் இப்படி காலை சுற்றவும் அந்த சூழ்நிலையில் செய்யதக்க ஒரே விஷயம் காலை அசைக்காமல் வைத்திருப்பதுதான் என்பதால்….அவன் அதைத்தான் முயன்று கொண்டிருந்தான்……

இதில் ரியா இப்படி வந்து நிற்பாள் என்றோ இப்படி ஒரு காரியத்தை செய்து வைப்பாள் என்றோ அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை…. அவனுக்கு தெரிஞ்ச ப்ரியா ஒரு கராப்பான் பூச்சிக்கே கால் கிலோ மீட்டர் ஓடுற டைப்….. இதில் இன்னைக்கு இப்படி நடந்துக்கிறான்னா என்ன அர்த்தம்??

நின்றிருந்த பலகையிலிருந்து சட்டென குதித்தவன் அவசரமாக பாம்பை பிடித்த அவளது கையை பற்றி பரிசோதிக்க முயல…..அவனையும் விட வேகமாக அவனை அசையவிடாது இறுக்கி அணைத்துக் கொண்டாள் அவள்…. எதிலிருந்தோ காக்க போராடும் அணைப்பு….

தவித்துப் போனான் இவன்….

இப்போதும் ரியா அவன் மீதிருந்த பிடியை விட்டிருந்தாலும் இன்னுமே இவளை பிடித்திருந்த விவன்…..தன்னோடு சேர்த்தபடி இவளை உள் நோக்கி நடத்த யத்தனிக்க…..

அவள் கால்கள் இன்னுமே நடுங்கிக் கொண்டிருப்பது  புரியவும் ஒரு கணம் குனிந்து அவள் முகத்தைப் பார்த்தான்…..

அவள் இவனைப் பிடித்திருக்கவில்லைதான்….

ஆனால் அவள் அவனது பிடியை விலக்கவும் இல்லை…..அதைவிடவும் அவன் பிடியையே…அவனையே ஆதரமாக கொண்டு அவனில் சாய்ந்திருந்தாள்…..

நடுங்கிக் கொண்டிருந்தவளை மெல்ல தன் கைகளில் அள்ளிக் கொண்டான் அவன்….மறுக்கவில்லை அவளும்…...

சென்று தனது படுக்கை அறை பெட்டில் அவளை விட்ட விவன், நனைந்த கோழி குஞ்சாய் வெலவெலத்துக் கொண்டிருந்தவள் வலக்கையைப் பற்றி மேலும் கீழுமாய் திருப்பி, திருப்தி வர மீண்டுமாய் பரிசோதித்துக் கொண்டான்….

எதற்கும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காது இவன் இழுத்த இழுப்புக்கு வருவது போல் ஓய்ந்து கிடந்தாள் அவள்.  தன் படுக்கையில் புயலை சந்தித்துவிட்டு வந்த சருகு போல கிடந்தவளை சில நொடிகள் பார்த்தபடி நின்றவன்…

இப்போது படுக்கையில் அவள் அருகில் அமர்ந்தான்….

“ரியு….”

விழிகளை மட்டும் நிமிர்த்தி இவனைப் பார்த்தாள்…. நடந்த எதைப் பற்றியும் அவளுக்கே யோசிக்க தெரியவில்லை….. இவனுக்காக அவ போய் பாம்ப கைல பிடிச்சிறுக்கா??? வொய்…??

இதுல அவன் அதுக்கு காரணம் கேட்டாலோ….இல்ல உனக்கு என் மீது காதல் அது இது என தத்து பித்தென உளறினாலோ தாங்கும் சக்தி இவளுக்கு இல்லை…..

ஆக அவனை வாயடைக்க என்ன சொல்ல வேண்டுமோ அதை சொன்னாள்…

“எனக்கு பசிக்குது விவன்…”

நிச்சயமாய் இதன் பின் அவன் அங்கு  நிற்கமாட்டான் எனத் தெரியும்….

அவனும் அவளை ஏமாற்றவில்லை…சட்டென எழுந்து கொண்டான்தான்….. அதற்கும் இவளுக்கு மனதுக்கு வலித்தது…..அவன நான் மனுபுலேட் செய்றேன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.