(Reading time: 20 - 39 minutes)

ரியாவுக்கு இன்னுமே மனம் அதற்கு ஒப்பவில்லை…..

இவள் முழியைப் பார்த்து அவருக்குமே புரிந்திருக்கும் போல… சிரித்தபடி

“மோளே…அது வெறும் சொத்து பத்ரம்….….இந்தா இருக்கு உன் மொத்த சொத்தும்….” என்றபடி இவளைவிட்டு சற்று தள்ளி சேரில் அமர்ந்திருந்த விவன் கையை இவளுக்கு எட்டும் அளவிற்கு அதிகமாய் இழுத்து இவள் கையில் வைத்தார்….

“இத கைக்குள்ளயே வச்சுகிட்டு அத ரெண்டு நாளைக்கு மட்டுமா தா….. “

அவர் இழுப்புக்குட்பட்டு விவனுமே இவள் புறமாக சாய்ந்தவன்….. இன்னும் கூட இவன் கை அவளை எட்டும் தொலைவில் இல்லை எனவும் எழுந்து கொண்டான்….

ஆக இவள் சேரில் அமர்ந்திருக்க…..விவன் இவள் அருகில் எழுந்து நின்றபடி அவன் கையை இவள் கைக்குள் வைத்திருந்தான்…..அதாவது அப்படி வைக்க வைத்திருந்தார் ஆதிரன்… அவருமே இதற்காக எழுந்திருக்க….

இப்போது இவளுக்கு  தான் மட்டும் உட்கார்ந்திருப்பதும்…… நடந்து கொண்டிருக்கும் செயலும்  ஒரு சங்கோஜத்தை தர….இவளூமே எழுந்து நின்றாள்….

அதே நேரம் இவளுக்கு கொடுப்பதற்காய் பூசரம் எடுத்துக் கொண்டு அங்கு வந்த மிசர்ஸ் ஆதிரனோ….

“என்ன…எல்லோரும் உட்காராம நின்னுட்டு இருக்கீங்க…?” என கேட்க…

தன் மனைவிக்கு காரணம் சொல்லாமல் காரியம் மட்டும்  சொன்னார் அந்த ஆதிரன்.

“ஒரு சின்ன இன்வெஸ்டிகேஷன்….. அதுக்கு செயின் தேவைப்படுது…” என மட்டுமாய் சொல்லி விளக்கினார்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

விஷயம் புரியவும்….

“நேத்து தான் கல்யாணம் ஆகி இருக்கு….இன்னைக்கு போய் கழட்ட கேட்டா …..” என ரியாவுக்கு சப்போர்ட் செய்த அந்த மிசர்ஸ் ஆதிரன்…

“இங்க வாங்க விவன்….செயின் போட்றுக்கீங்க தானே….” என அவனை கேட்ட விததிலேயே அவன் தன்னுடயதை கழட்டி கொடுக்க….

ரியா செயினிலிருந்த ஹூக்கில் ஆடிக் கொண்டிருந்த பெண்டன்டை மட்டும் முதலில் கழற்றி…விவனோட செயினில் மாட்டி…

“இப்போ உங்க வைஃபுக்கு போடுங்க…” என அவன் கையில் கொடுக்க…

அதை வாங்கிய விவன் தன்னவள் கண்களைப் பார்த்துக் கொண்டே அதை அவளுக்கு அணிவிக்க….விழி தட்டாமல் அவனையே பார்த்திருந்தாள் அவள்….

Friends due to strom and power cut இப்போதைக்கு இவ்ளவு சின்ன எப்பி தான் முடியுதுஅடுத்த எப்பி பெரிய எப்பியா தர ட்ரைப் பண்றேன்…. நன்றி

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.