(Reading time: 20 - 39 minutes)

சியில பேச வேண்டாம்னு பார்க்கிறேன்…” என இவள் நினைவை புரிந்தே தான் செல்வதாக காண்பித்துவிட்டே கிளம்பினான் அவன்….

இவளும் இப்போது எழுந்து கொள்ள முனைய….

“இங்கயே எடுத்துட்டு வர்றேன் வெயிட் பண்ணு…” என்றுவிட்டுப் போனான் அவன்….

இவள் பார்வைக்கு அவன் மறையவும் மீண்டுமாய் அந்த தாலியில் ரத்தம் அதன் அமனுஷ்யத்துடன் நியாபகம் வருகிறது இவளுக்கு……அவனுக்கு ஆபத்து என்ற நினைவு இப்போது மீண்டுமாய் விஸ்வரூபமெடுக்கிறது இவள் மனதில்….

ருயம்மாவோட அழுகை, ரத்தமா மாறின மோதிரம்….விவன் காலில் பம்பு என ஒவ்வொன்றும் மெகா சைஃஸ் ஃப்ரேமில் மனகண்ணில் மாறி மாறி தெரிய துவங்குகிறது…..

பயம் திடும் திடும்

அவன் போய் எத்தனை செகண்ட்ஸ் சென்றதோ தெரியவில்லை…….இவளுக்கு ஒவ்வொரு நொடியும் இதயத்தில் இடி விழும் ஓர் யுகமாய் கழிய….

ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் எழுந்து போய்விட்டாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அங்கு தட்டில் ஆவி பறக்க இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவனைப் பார்க்கவும்தான் அந்த திடும் திடும் கிரவ்ண்ட் லெவலுக்கு இறங்கி வந்தது…. சற்று நிம்மதியாய் உணர்ந்தாள்.

இப்ப ஏன் இங்க வந்தன்னு அவன் கேட்பானே….. அடுத்து அவன் எதுவும் கேட்கும் முன்னும் “பெட்ல வச்சு சாப்ட கஷ்டம்…” என வாய்க்கு வந்த ஒரு காரணத்தை சொல்லி வைத்தாள்….

அங்க அவன் ரூம்லயே டேபிள் சேர் உண்டு என்றாலும் விவனும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை….. முதல்ல சாப்டட்டும் அப்றம் பார்க்கலாம் என்பது அவன் மனது….

ஆக பக்கத்தில் இருந்த டைனிங் ரூமுக்கு அவன் கூடவே சேர்ந்து சாப்பாடு தண்ணி என எடுத்துக் கொண்டு போய் அமர்ந்து ஒரு வழியாய் சாப்பிட்டு முடித்தாள் ரியா….

அதற்குள் விவனுக்கு சொல்ல ஒரு பதிலை கண்டு பிடித்திருந்தாள்…. அவள் அது தான் உண்மை என்றும் நம்பினாள்….

“ நீ என்ன வேண்டா வெறுப்பா இந்த பேபிக்காக மட்டுமா மேரேஜ் செய்துறுக்கன்னு நான் நம்பனும்னு நீ எதிர்பார்த்தா எனக்கு இது ரெண்டுக்கும் ரீஸன் சொல்லு…”  என அவன் கேட்பான் என எதிர்பார்த்தாள்….

 “பீச்ல வச்சு என்ன பிடிச்சுறுக்குன்னு சொன்ன……நேத்து நம்ம ரூம்ல அப்டி நடந்துகிட்ட…அதெல்லாம் கனவுன்னு சொல்லிடுவ…சரி…. ஆனா..” என அவன் இன்னைக்கு கதை மட்டும் இல்லாம பழசையும் கோட் செய்து ஆரம்பிப்பான்….. அப்டி ஆரம்பிக்கவும்

“அது போல இன்னைக்குள்ளது கனவுல செய்தது இல்லதான்……ஆனா கண் முன்னால ஒரு உயிருக்கு ஆபத்து…அதுவும் என்ன எதிரியா இருந்துட்டு போகட்டும் அனாதைய நின்ன என்ன  கூப்ட்டு வந்து சாப்பாடு போடுற ஒரு ஜீவனுக்கு ஆபத்துன்னதும் ஹெல்ப் பண்ண அதா வந்துட்டு…..மத்தபடி இதுக்கு வேறு எதுவும் காரணம் கிடையாது….” அப்படின்னு பதில் சொல்லனும் என மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள் ரியா…..

கண் முன் ஒரு உயிர் ஆபத்திலிருக்கு என்ற நினைவு தான் தன்னை உந்தி தள்ளி இருக்கும் என பூரணமாக நம்பினாள் அவள்…

ஆனால் விவனோ அப்படி எதையும் கேட்கவே இல்லை….. இன்ஃபேக்ட் உடனே எதையும் கேட்கவே இல்லை அவன்…..

இத்தனை நேரம் அவளை கவனித்ததில் அவனுக்கு ஒன்று புரிந்திருந்தது……..அவ கண்டிப்பா உன்னை பிடிச்சிறுக்குன்னு இவன்ட்ட ஒத்துக்கிற மன நிலையில் இல்ல……அதை அவளா உணர்ந்து வரனுமே தவிர இப்ப இவன் கன்வின்ஸ் செய்ய ட்ரைப் பண்ணா அவ அது அப்டி இல்லைனு  ப்ரூவ் செய்ய ஆர்க்யூ பண்ணுவா….ஸ்ட்ரெஸ் ஆவா…..மத்தபடி ஒத்துக்கல்லாம் மாட்டா…...இது தேவையில்லாம அவள ஸ்ட்ரெஸ் ஆக்குமே தவிர மத்தபடி எந்த நல்லதும் இந்த பேச்சு வார்த்தையால நடக்க போறது இல்ல…. என முடித்திருந்தான் அவன்….

அதனால் சாப்பாடு முடியவும்

“நீ வேணா போய் ரெஸ்ட் எடு ரியு…. எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்குது….நெக்‌ஸ்ட் ரூம்லதான் இருப்பேன் சின்னதா எதுனாலும் கூப்டு உடனே வந்துடுவேன்….” என இவளை அனுப்பிவிடவே முனைந்தான்….

பரீட்சையில ஆன்ஸ்வர் தெரிஞ்ச க்வெஸ்டியன அட்டென் செய்யாம  வர்ற ஃபீல் இவளுக்கு…… நான் என்னமோ இவனுக்காக உருகிப் போய் இப்டி செய்துட்டதா நினச்சுட்டு இருப்பானே…… என  எரிச்சலாக வருகிறது ரியாவுக்கு…..

ஆனாலும் இந்த டாபிக்கை அவளா எடுத்து எப்படிப் பேச என்றும் இருக்கிறது….. மெதுவாக நடந்து தனக்கான அறைக்குள் போனால்….

போக எங்க போக… போக நினைத்தாள்…..

அந்த ரூம்ல வச்சுதானே  மோதிரம் ரத்தமா மாறிச்சு…… அவள் கண் அதுவாக அவள் கழுத்திலிருந்த தாலிக்குப் போக….

அப்றம் என்ன ஆட்ட்மெட்டிக்கா அந்த அழும் ருயம்மா, ரத்த மோதிரம், காலில் சுற்றிய பாம்பு எல்லாம் விஸ்வரூபம்…. அடுத்த நிமிடம் விழுந்தடித்து ஓடியது போல் காண்பித்துக் கொள்ளாமல் விவன் அருகில் போய் நின்றிருந்தாள் ரியா…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.