(Reading time: 27 - 54 minutes)

22. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

வளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்
அவளும் நானும் தவமும் அருளும்
அவளும் நானும் வேரும் மரமும்
ஆளும் நிழலும் அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும் அவளும் நானும்

அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும் அளித்தாலும் புகழும்
மீனும் புனலும் விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும் வேலும் கூறும்
ஆறும் கரையும் அம்பும் வில்லும்
பாட்டும் உறையும் நானும் அவளும்

நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மனமும்
நானும் அவளும் உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும் பூவும் மனமும்
அவளும் நானும் தேனும் இனிப்பும்
அவளும் நானும் சிரிப்பும் மகிழ்வும்

அவளும் நானும் திங்களும் குளிரும்
அவளும் நானும் கதிரும் ஒளியும்
அவளும் நானும் அமுதும் தமிழும்
அவளும் நானும் அலையும் கடலும்

கி ரெடியா போலாமா என்றவாறே உள்ளே வந்தான் ராம்..அவள் மெதுவாய் கட்டிலிலிருந்து எழுந்தாள்..போலாம் ராம்..

குட்டிமா ரொம்ப டயர்டா தெரியுற ப்ளீஸ் இங்கேயே இருக்கலாமே??

ராம் அதெல்லாம் ஒண்ணுமில்லை வெயிட் ஏறிட்டேன்ல சோ கொஞ்சம் பொறுமையாதான் எழுந்துக்க முடியுது வேற ஒண்ணுமில்ல வாங்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

பரணியை மாப்ளையழைத்து அனைவரும் ஒரு காரில் செல்ல மகியும் ராமும் தனியே அவர்களை பின் தொடர்ந்தனர்..கல்யாணத்திற்கே உரிய ஆனந்தமும் ஆர்பரிப்பும் அந்த மண்டபத்தை நிறைக்க,அமர்நாத்தே வாசலில் வந்து மாப்பிளை வீட்டாரை வரவேற்றார்..பரணி கண்களால் சாக்ட்சியை தேட அவனை மிகவும் சோதிக்காமல் அறையிலிருந்து எட்டிபார்த்தாள் அவள்..கண்ணாலே அவளின் ஒப்பனை பற்றி கேட்க பரணியோ கண்களாலே பருகி கொண்டிருந்தான்..என்னதான் லவ் பண்ற அப்போ ஊர் ஊரா சுத்திருந்தாலும்,எத்தனையோ ட்ரெஸ்ல பாத்திருந்தாலும்..மணகோலத்தில் காதலர்களின் சந்திப்பு என்றுமே அழகான ஒன்றுதான்..அனைத்து தடைகளையும் தாண்டி என்னவள்,என்னவன் என ஏற்க போகும் சந்தோஷமே தனி அழகூட்டும்..

மச்சி போதும் கொஞ்சம் உன்ன போட்டோ எடுக்குற போட்டோக்ராபரையும் பாரு அவரு நீ எப்போடா பாப்பநு வெயிட் பண்ணிட்டு இருக்காரு..என் தங்கச்சி உன் பக்கத்துல தான் உக்கார போறா கவலபடாத..-ராம்..

டேய் என் தங்கச்சிய நீ சைட் அடிச்சத நினைச்சா இதெல்லாம் ஒண்ணுமேயில்ல..

மகி தேவையா என்பது போல் ராமை பார்த்தாள்..அதன் பின் ஒவ்வொரு சடங்காக ஆரம்பித்து மணமக்கள் மேடையில் நிறுத்தப்பட்டனர்..அமர்நாத் நிச்சயத்திற்கே நிறைய பேரை அழைக்காததால் இப்போது கூட்டம் நிரம்பி வழிந்தது..ராம் தான் பரணி அருகிலேயே நின்றான் எனினும் அவ்வப்போது மகியை கவனிக்க தவறவில்லை..அவள் முகம் சற்று வாடினாலும் உடனே கீழிறங்கி வந்து அவளை பார்த்துவிட்டு சென்றான்..மகியோ தன் திருமண கனவுகளில் மூழ்கியிருந்தாள்..அன்று நடந்த இனிமையான நிகழ்வுகளை அவ்வப்போது அசை போட்டு கொண்டிருந்தாள்..சிறிது நேரத்தில் ஆட்டம் பாட்டம் என அரங்கமே அதிர ஆரம்பித்தது..சாக்ட்சியின் தோழிகள் அவளுக்காகவே பாடல்களை தேர்ந்தெடுத்து ஆடி கொண்டிருந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.