(Reading time: 27 - 54 minutes)

ரு விழியோ சிறகடிக்கும்
இமைகளிலோ வெடிவெடிக்கும்
இதயத்திலே ஒரு கனவு
உதயத்திலே வடம் பிடிக்கும்
காதலால்தானே....
ஒரு பாறை மெல்ல மெழுகானதென்ன
உனை கண்ட வேலை உயிர் பூத்ததென்ன
மழையாய் விழுந்தாய்
மூக்குத்திப் போலே ஆடாத நெஞ்சம்
நீ பார்த்த தாலே தோடாச்சு நெஞ்சம்
புயலாய் ஆனாயே..

சங்கில் ஓசைப் போலே
உன்னில் தங்கிக் கொள்ள ஆசை
மின்ன்ல் போல கண்ணில்
உந்தன் பிம்பம் பூக்கும் ஆசை
உயிரோடு உயிர் பேச
அடிக் காதல் தானே பாஷை
இது வரமா...
மரங்களில் ஏங்கி கிரங்கிடும் தேகம்
கரங்களைத் தீண்டி உறங்கிடும் மாயம்
வெறும் சுகமா...

சாக்ட்சியின் கண்கள் ஆனந்தத்தில் நிறைந்திருக்க ஆதரவாய் அவள் கரம் பற்றினான் பரணி..லேசாய் அவனை ஏறிட்டு பார்க்க அவன் அவள் காதருகில் மெதுவாய் என்ன சாக்ட்சிம்மா என்ன கல்யாணம் பண்ணிக்குறத நினைச்சு இவ்ளோ பீல் பண்ற நியாயமா  நா தான் அழணும்,..என சீரீயஸாய் கூற அவன்  காலை லேசாய் திருகினாள்..ஸ்ஸ்ஆஆ..வலிக்குதுடா..பாத்தியா நா சொன்னது கரெக்ட் தான இனி லைவ் புல்லா எத்தனை அடி வாங்க போறேனோ தெரில..என்று சிரிக்க..அருகிலிருந்த ராமிற்கு அவர்களை கண்டு மனம் நிறைந்தது..சிறிது நேரத்தில் மேடையிலிருந்து வந்த ராம் மகியை தேட சரியாக அவன் கைப்பேசி ஒலித்தது..ராம் கொஞ்சம் ரூம்க்கு வாங்களேன்..அவள் குரலிலேயே ஏதோ பிரச்சனை என உணர்ந்தவன் அங்கு விரைந்து செல்ல,கண்களில் நீர் கோர்க்க கட்டிலை பிடித்து நின்று கொண்டிருந்தாள் மகி..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

குட்டிமா..

முடிலப்பா..ரொம்ப வலிக்குது என அவனை இறுக பற்றி கொள்ள ராமின் முகமோ பேயறைந்தாற் போல் ஆகிவிட்டது அவன் எந்த நாளை நினைந்து உள்ளுக்குள் கலங்கி கொண்டிருந்தானோ அது வந்தேவிட்டது..இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அவனின் ஜுனியர் இந்த பூமியை பார்க்க போகிறான்..என்ன பண்ணுவது என்று தெரியாமல் தன் அன்னையையும் விஜியையும் அழைத்து விஷயத்தை கூறி விஜியை மட்டும் தன்னுடன் அழைத்து கொண்டு ராஜி மற்ற திருமண சடங்குகளை முடித்து வர சொன்னான்..

அருகிலேயே மருத்துவமனை என்பதால் விரைந்து சென்று டாக்டரை அழைத்து நிலைமையை கூற பரிசோதிவிட்டு,லேபர் பெயின் ஸ்டார்ட்டட் ராம்..அடுத்த ஒன் அவர் ப்ராக்ரெஸ் பாத்ட்டு சொல்றேன்..ஷி இஸ் இன் அப்ஸர்வேஷன் நவ் நீங்க போய் பாக்குறதுனா பாருங்க என்று அவர் கூறிவிட்டு நகர்ந்தார்..விஜி அவசரமாய் உள் நுழைய எத்தனிக்க ராமோ அப்படியே நின்றான்..

வாங்க மாப்ள..என்ன விட மகி உங்கள பாக்கனும்நு தான் நினைப்பா..

கஷ்டப்பட்டு கால்களை நகர்த்தி உள்ளே நுழைந்தான்..அங்கு குழந்தையின் இதயதுடிப்பை கண்காணிக்க,அதன் அசைவுகளை கண்காணிக்கவென ஏதேதோ மகியின் வயிற்றில் வைத்திருந்தனர்..அவனை பார்த்தவளின் கண்களில் ஒரு சிறு நிம்மதி..விஜி இரண்டோரு வார்த்தை தைரியம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்று தேவையானதை எடுத்து வருவதாய் கூறிவிட்டு நகர..ராமை நோக்கி கையை நிட்டினாள் மகி..அவனோ கைகள் நடுங்க அவளை பற்றினான்..வலி வருவதும் போவதுமாயிருக்க வலி வரும் நிமிடங்களெல்லாம் அவனை அழுத்திப் பிடித்து வலியை பொறுத்து கொண்டாள்…அவளின் இறுக்கமே வலியின் வீரியத்தை உணர்த்தியது..ஒவ்வொரு நிமிடமும் யுகமாய் கழிந்தது..டாக்டர் வந்து பார்த்துவிட்டு ராம் நல்ல ப்ராக்ரஸ் இருக்கு 5 டு 6 ஹவர்ஸ்ல டெலிவரி ஆய்டும் நா அப்பப்போ வந்து பாக்குறேன்..நர்ஸ் எனக்கு அப்டேட் பண்ணிட்டே தான் இருப்பாங்க ஸோ டோன்ட் வொரி..

இன்னும் ஆறு மணி நேரமா??என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தான்..ராஜிக்கு போன் செய்து நிலைமையை கூறி பொறுமையாகவே வருமாறு கூறினான்..இதில் அங்கிருந்த நர்ஸ் ஆச்சரியமாய் கூறினாள்,என்ன மேடம் உங்களுக்கு இவ்ளோ ப்ரீக்குவண்ட்டா பெயின் வருது அதுவும் ஒவ்வொண்ணும் ஹை ப்ரீக்குவன்ஸில வேறயிருக்கு…

ராம்ப்பா கொஞ்சம் எழுந்து உக்காரேன்னே என்னால முடில..

சிஸ்டர் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்..-ராம்..

இல்ல சார் பேபி ஹார்ட் பீட் கண்டினியுஸ் மானிடரிங்ல இருக்கனும்..உக்காரலா கூடாது..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.