(Reading time: 27 - 54 minutes)

கியின் கண்கள் தானாக கலங்குகிறது..ராமிற்கோ யாராவது வந்து தன்னை வெளியே போக சொல்லிவிட மாட்டார்களா என்று இருக்கிறது..தன்னவளை அந்த நிலையில் அவனால் பார்க்க முடியவில்லை..அப்படி இப்படியென்று 5 மணி நேரத்தை கடத்த இப்போது டாக்டர் வந்தீதுவிட்டார்..மகியோ பற்றிய ராமின் கையை விடவேயில்லை அவனின் கை மறத்தே போய்விட்டது..அவன் டாக்டரை பார்க்க,நீங்க இருக்கலாம் ராம் நோ இஷுஸ்..மகி நாங்க சொல்றப்போ புஷ் பண்ணுங்க இவ்ளோ நேரமும் நல்ல ப்ராக்ரஸ்ல தான் இருக்கு சோ இத மட்டும் பண்ணிடுங்க..ராமிற்கோ ஏதோ வேற்று கிரகத்தில் இருப்பதாய் தோன்றியது..மகியின் தலையருகில் நின்றான்..டாக்டர் புஷ் புஷ் என ககூற மகி தன் முழு பலத்தையும் சேர்த்து முயற்சி செய்கிறாள்..டாக்டரோ,பத்தாது மிஸஸ் ராம்...ட்ரை பண்ணுங்க..என்று கூற அதே நேரம் நர்ஸ் ஒருவர் மகியின் வயிறருகே வந்து குழந்தையை கீழ் நோக்கி அழுத்துகிறாள்..மகியோ ராமை பிடித்து கொண்டு முடிலப்பா..இதுக்கு மேல முடில என அரற்றுகிறாள்..

குட்டிமா ஒண்ணுமில்லடா..கொஞ்சம் பொறுத்துக்கோடா இப்போ வந்துருவான்டா ஜீனியர்..அவன் கண்களில் நீர் வரவா வேண்டாமா என்றிருக்க..மறுபடியும் டாக்டர்,மகி ட்ரை பண்ணு இல்னா இவ்ளோ நேரம் நீ கஷ்டபட்டதுக்கு ப்ரோஜனமேயில்ல சிசேரியன் தான் பண்ணணும் பேபி ஹெட் இறங்கவேயில்ல..

சட்டென பதில் வந்தது ராமிடமிருந்து..ப்ளீஸ் கோ ஹெட் வித் சிசேரியன் டாக்டர்..வேண்டாம் இதுக்கு மேல அவள ரணப்படுத்த வேண்டாம்..என்னால பாக்க முடில ப்ளீஸ்..

கூல்டவுண் ராம்..வில் கிவ் அ லாஸ்ட் ட்ரை..அவங்கள கொஞ்சம் என்கரேஜ் பண்ணுங்க..ஷி கேன் டூ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

குட்டிமா ஒரே தடவை ட்ரை பண்ணுடா நா உன் பக்கத்துலயே இருக்கேன்டீ..நீ பட்ற அவஸ்தைய பாக்க முடில..ப்ளீஸ்டீ..சீக்கிரமா பாப்பா வந்துடட்டும்..எனக்காக மகி..நா அவ்ளோ வொர்த்லா இல்ல..இன்னும் கொஞ்ச நேரம் போச்சுனா சத்தியமா நா காலி ட்ரை பண்ணுடீ…அழுகையை அடக்கிக் கொண்டு ஏதேதோ கூறினான்..

இறுதியாய் தன் ஒட்டுமொத்த பலத்தையும் சேர்த்து மகி எடுத்த முயற்சியில் வீவீவீவீல்ல்ல் என்று தன் தேன் குரலில் கத்தியவாறே இந்த பூமியை வந்தடைந்தான் அவர்களின் ஜுனியர்..மகி சிரிப்போடு சற்று கண்ணயர ராம் அவள் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு விறுவிறுவென வெளியே சென்றுவிட்டான்..அத்தனை நேரம் தன்னவளுக்காக அடக்கி வைத்திருந்த ஒட்டு மொத்த உணர்ச்சியும் கண்ணீராய் வெளிப்பட சேரில் அமர்ந்து முகத்தை கைகளுக்குள் புதைத்து கொண்டான்..

அதற்குள் அங்கு பரணி சாக்ட்சி உட்பட  அனைவரும் வந்திருக்க ராமை உலுக்கினார் ராஜி..ராம் என்னடா மகி எப்படியிருக்கா ஏன்டா அழற???

அவன் வாய் திறப்பதற்குள் உள்ளிருந்து குழந்தையை குளிப்பாட்ட நர்ஸ் எடுத்து செல்ல ராம் சிரித்து கொண்டே உன் பேரன் தான்ம்மா குளிக்க போறாரு என கூறி கண்சிமிட்ட அனைவரும் மகிழ்ச்சியில் ராமிற்கு வாழ்த்து சொல்ல விஜிக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் தன் கணவனே தன் மகளுக்கு மறுபடியும் வந்து பிறந்திருப்பதாய் எண்ணிணார்..அதற்குள் அவர்களின் மகிழ்ச்சியை ரெட்டிப்பாக்க ஜுனியர் ப்ரெஷ் ஆய்ட்டு வந்துவிட..அந்த பிஞ்சு கை கால்களை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அனைவருக்கும்..அப்படியே அச்சு அசல் மகியின் நகலாயிருந்தான்..ராஜி விஜி எடுத்து கொஞ்சியபடியே ராமை அழைக்க அவனோ அய்யோ இவ்ளோ குட்டியா இருக்கான் இவனலா நா தூக்க மாட்டேன்..பயம்மாயிருக்கும்மா..

என்னடா போலீஸ் நீ குழந்தைய தூக்குறதுக்கே இப்படி பயப்படுற என்று கூறி சிரிக்க அதெல்லாம் அவன் பிக் பாய் ஆனப்பறம் நானே பாத்துப்பேன்..ம்மாமா நீ அவன தூக்கிட்டு வா மகிய பாத்துட்டு வரலாம் என்று உள்ளே சென்றான்..ராஜி குழந்தையை அவள் கையில் கொடுத்து உச்சி முகர்ந்தார்..ரொம்ப படுத்திட்டானாடா??அப்படியே அப்பாவ மாறி வந்துருக்கான் போல என்று சில நொடிகள் பேசிவிட்டு அவர்களுக்கு தனிமை கொடுத்து நகர்ந்தார்..

ராம் அவளருகில் அமர்ந்து தலையை கோதிவிட்டவாறே குழந்தையை ஏறிட்டான்..சிறிய பேபி பிங்க் ரோஜா பூவை தன்னருகில் பார்ப்பது போலிருந்தது..மகி பிறந்ந அன்று நிச்சமாய் இப்படிதான் இருந்திருப்பாள் எனுமளவிற்கு உருவ ஒற்றுமை..தன்னவளை பார்த்து,எப்படிடாயிருக்க??

பேசாமல் அவள் அவனையே பார்க்க,கொஞ்ச நேரத்துல அம்மாவும் புள்ளையும் என்ன பாடு படுத்தீட்டீங்க டீ..உயிர் போய் திரும்ப வந்தமாறி இருக்கு தெரியுமா..

லவ் யு ராம்…அவள் நெற்றியில் இதழ்பதித்து அவள் கையை எடுத்து தன்னோடு வைத்து கொண்டான்..ஏன் டீ நீ இப்படியிருக்க.. அதற்கும் சிரிப்பையே பதிலளித்தவள் ஏதோ கூற வாயெடுக்க ஜீனியர் லேசாய் சிணுங்கி அவர்களின் கவனத்தை தன் புறம் திருப்பி கொண்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.