நாட்கள் மாதங்களாய் ஓட,இன்று ராம் ராம் IPS ஆக பதவியேற்கவிருக்கிறான்..குளித்து முடித்து வந்தவனிடம் முகத்தில் பெருமை பொங்க அவனது சீருடையை எடுத்து கொடுத்தாள் மகி..அவனையே அவள் பார்த்துக் கொண்டிருக்க இழுத்து தன்னருகில் நிறுத்தி இடுப்பை சுற்றி வளைத்தான்..
என்னடீ போலீஸ்காரனயே சைட் அடிக்குறியா??
அவன் சட்டை பட்டனை போட்டுவிட்ட படியே கண்களை நேராய் நோக்கியவள்,என் புருஷன நா சைட் அடிக்காம??
தங்க் யு சோ மச் குட்டிமா..
எதுக்கு??
எனக்கு பிடிச்ச இந்த யூனிபார்ம்ம போடவே முடியாதோநு நெனைச்சேன்..எனக்காக அம்மாகிட்ட பேசி அவங்கள புரிஞ்சுக்க வச்சதுக்கு..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
ராம்..அத்தம்மாக்கு மட்டும் உங்கள இப்படி பார்க்க ஆசையிருக்காதா என்ன..உங்க மேலயிருக்குற பாசத்துல ஏனோ ரொம்ப பயப்பட்டாங்க..இப்போ புரிஞ்சுகிட்டாங்க..இதுல நா ஒண்ணுமே பண்ணல..
உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா..நீ இப்படியே உன் முட்டகண்ண உருட்டிட்டே இருந்தநு வை நா இன்னைக்கு வேலைல சேர்ந்தா மாறி தான்..என மேலும் அவளை தன்னோடு இறுக்க..
ஆஆஆ போதும் போதும் மொதல்ல கிளம்புங்க நீங்க என வெளியே இழுத்து வந்தாள்..
அந்நேரம் பரணியும் உள்ளே வர இருவரையும் பார்த்த அனைவருக்கும் மனம் நிறைந்து போனது… ராஜசேகருக்கோ கண்கள் கசிந்தது..எத்தனை வருட கனவு இது அவருக்கும்கூட..அவனை வாஞ்சையாய் தழுவி கொண்டார்..ஆல் த பெஸ்ட் ராம்..நினைச்சத சாதிச்சுட்ட பெருமையாயிருக்குடா..இதெல்லாத்துக்கும் எங்க வீட்டு குட்டி பொண்ணுதான் காரணம் என மகியின் தலையில் கை வைத்து சிரித்தார்..ஆல் த பெஸ்ட் பரணி..
தேங்க்ஸ்ப்பா..இது மட்டுமில்லாம இன்னோரு ப்ரோமோஷனும் கிடைச்சுருக்கு..நீங்க மறுபடியும் தாத்தாவாக போறீங்க..
டேய் வாழ்த்துக்கள் மச்சி..சாக்ட்சி எங்க??
நேத்து தான்டா டாக்டர்ட்ட கன்பார்ம் பண்ணிணோம் நைட் லேட் ஆனதால வர முடில..இப்போ வீட்ல தான் இருக்காடா ரொம்ப டயர்டா இருக்குநு சொன்னா அதான் கூட்டிட்டு வரல..
டேய் அண்ணா நல்லபடியா ஒரு மருமகள பெத்து குடுக்க சொல்லு எனக்கு என்ன புரியுதா??அப்போதான் அத்தைமடி மெத்தையடிநு நா தாலாட்டு பாட முடியும்..அதுவும் போக என் பையன்க்கு பொண்ணு பாக்குற வேலை மிச்சம் பாருங்க..
அடிப்பாவி இப்போதான்டி விஷயத்தையே சொன்னான் அதுக்குள்ள நீ அதுக்கு கல்யாணம் வர போய்ட்டியே உன் ஸ்பீடுக்கு சான்ஸேயில்ல போ என்று ராம் கூற அனைவரும் சிரித்தனர்..
அவார்களின் சிரிப்பில் கலந்து கொண்டு ராஜியிடமிருந்து தன் அப்பாவிடம் தாவினான் குட்டி க்ருஷ்....
இரண்டு வருடத்திற்கு பிறகு…
மகி டீவியில் பாடல் கேட்டு கொண்டே மாலை நேர வேலைகளை கவனித்து கொண்டிருக்க,மெதுவாய் பின் வழியாய் கிச்சனில் நுழைந்து அவளை அணைத்தான் அவளின் ராம்..ஒரு நொடி தூக்கிப் போட திரும்பியவள்..என்னப்பா இது எத்தனை தடவை சொல்லிருக்கேன் இப்படி எதாவது பண்ணாதீங்கநு…
என்ன பண்றது குட்டிமா உன்கூட வம்பு இழுக்காம இருக்க முடில..ஆமா நம்ம க்ருஷ் எங்க சத்தத்தையே காணும்??
அதை ஏன் கேக்குறீங்க இப்போலா அவன பரணி அண்ணா வீட்லயிருந்து கூட்டிட்டு வரதுக்குள்ள போதும் போதும்நு ஆய்டுது..வர்ஷா குட்டி கூடவேதான் இருப்பானாம்..ஒரே அடம் சாக்ட்சிதான் சரி நீங்க வேலையை முடிச்சுட்டு வந்து கூட்டிட்டு போங்கநு சொன்னா..வர வர ரொம்ப அடம் அப்பாவ மாதிரியே என கூறி அவனை பார்க்க..
ம்ம் நீ தான் எங்களுக்கு இப்படி செல்லம் குடுத்து கெடுத்து வச்சுருக்க நாங்க என்ன பண்றது குட்டிமா.??
அது சரி சார்க்கு நேத்துதான் கல்யாணம் ஆனதா நினைப்பா…
ஹே எத்தனை வருஷம் ஆனாலும் நீ எனக்கு புது பொண்டாட்டி தான்..நா இப்படி தான் இருப்பேன்..என்றவாறே அவளை மேடையின் மேல் அமர்த்தினான்..அவனுக்கான உணவை அவள் ஊட்டிவிட குழந்தையாய் கதை பேசியபடி சாப்பிட்டு முடித்தான்..
ஆனாப்பா IPS ஆபீஸர்நு வெளில சொல்லாதீங்க நம்ம க்ருஷ்ஷே பரவால்ல..நீங்க ரொம்ப மோசம்..என்று கூறி சிரித்தாள்..
யார் என்ன சொல்றது ஊருக்கே ராஜானாலும் என் பொண்டாட்டிக்கு நா குழந்தை தான்..உனக்கு ஏன் பொறாம எனும் போதே டீவியில் பாடல் ஒலிக்க,
“உன்னால காக்கி சட்டை கலர் ஆச்சே
போலிசும் திருடனாக மாறி போச்சே
பக்கம் நீ இருந்தா போதும் தூக்கம் போச்சு
வர போகும் தூக்கம் எல்லாம்
தூள் தூள் ஆச்சு
உன்னால உலகம் அழகாச்சு
ஹவா ஹவா ஹவா
இருப்போமா லவ் லவ்ஆ
இனிப்போ அட கசப்போ
வா என்ஜாய் பண்லாம் வா
ஹவா ஹவா ஹவா
வாழ்வோமா லவ் லவ்ஆ
எதுவா இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா
நேத்து என்ன ஆச்சு
அது நேத்தே போயே போச்சு
நேற்று இன்று நாளை என்றும்
நீ தான் என் மூச்சு
பாப்பா போட்டி இல்ல
அட வாழ்க்கை waste’u இல்ல
எல்லை தாண்டி போடும்
ஆட்டம் என்றும் ஓயவில்லை
நீயும் நானும் சேர்ந்தே வாழும் நேரம்
போகும் தூரம் முடியாம நீளும்
உன்னால உலகம் அழகாச்சே”
பாத்தல..எனக்காகவே போடுறாங்க பாரு என்று கண் சிமிட்டி சிரித்தான்..அவன் சிரிப்பில் தன்னை தொலைத்தவள் மேலும் மேலும் அவனை தன்னுள் நிறைத்து தொலையவே விரும்புகிறாள்..இன்று போல் என்றுமே அவளவனின் காதலில் முங்கி திளைத்திடவே ஆசைபடுகிறாள்..ஆண்டவனும் அதையே நினைத்து அவர்களை பார்த்து தன் அழகு புன்னகையை பரிசளிக்கிறான்.இனி எல்லாம் சுகமே…
ஹாய் ப்ரெண்ட்ஸ்..என்னுள் நிறைந்தவனே என்னுடைய முதல் தொடர்கதை..தனிப்பட்ட முறையிலும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதை..அது முடிஞ்சுதுநு நினைக்கும் போது ரொம்பவே கஷ்டமா இருக்கு..மகி அண்ட் ராமை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்..இந்த கதையை எழுத வாய்ப்பு கொடுத்த சீல்சிக்கு எவ்ளோ தேங்க்ஸ் சொன்னாலும் பத்தாது..ஆனா நா தேங்க்ஸ் சொல்லமாட்டேன் இதுக்கு அப்பறம் நா கதைகள் எவ்ளோ எழுதுவேனோ வாய்ப்புகள் கிடைக்குமோ தெரியாது ஆனா ஒரு கதாசிரியரா சீல்சி எனக்கு தாய்வீடு மாதிரி..இன்னும் இன்னும் எழுதானும்ங்கிற ஆர்வத்தை எனக்குள்ள விதைச்சுட்டே இருக்கும்..கிட்டத்தட்ட கடந்த 3 வருடங்களாக சில்சீயோட வாசகி நான்..அதன் கதைகளை படித்து படித்து வந்த ஆர்வம் தான் நாமளும் கதை எழுதலாமேநு நினைச்சது..எங்களை போன்ற சாதாரண பெண்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு சீல்சி ரொம்பவே சப்போர்ட்ஆ இருக்கு..இன்னும் இன்னும் பல பல எழுத்தாளர்களை உருவாக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
அடுத்ததாக என்னுடைய சீல்சி ப்ரெண்ட்ஸ்..உங்க சப்போர்ட்க்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி..ஒவ்வொரு எபிசோடுக்கும் நீங்க தர்ற ரிவ்யூஸ்தான் என்னோட எழுத்துக்களுக்கு கிடைத்த மரியாதை..சித்ரா,தேவி,ஜான்சி,கிருத்திகா,ப்ரீத்தி,தேன்ஸ்,மதுமதி,சஜு இவங்களுக்கு என்னோட ஸ்பெஷல் தேங்க்ஸ்..உங்கள யாராவது ஒருத்தர் கமெண்ட் வரலனாலும் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும்..அந்த அளவுக்கு ப்ராம்ட் ரெஸ்பான்ஸ் இருக்கும் உங்ககிட்ட..ப்ளீஸ் கீப் சப்போட்டிங்..
அடுத்ததா என் ப்ரெண்ட்ஸ் அம்பிகா,சத்யா,கல்யாணி,சௌமியா என்னோட பெஸ்டீஸ் அப்பார்ட் ப்ரம் சீல்சி இவங்க எல்லாரும்தான் நா தேங்க்ஸ் சொல்ல வேண்டிய நபர்கள்..கண்டிப்பா தேங்க்ஸ் சொல்றதுக்காக திட்டு விழும் இருந்தாலும் நா சொல்லிதான் ஆகனும்..எல்லாருமே ஒவ்வொரு விதத்துல பிசி பீபுள் பட் என் எபி பப்ளிஷ் ஆகி வித் இன் டூ டேஸ் மேக்சிமம் எனக்கு பீட்பேக் தந்துருவாங்க..இது நல்லாயிருக்கு இத இப்படி பண்ணிருக்கலாம்நு..இன்பக்ட் அவங்க கமெண்ட்ஸ் வச்சு சில சேன்ஞ்சஸ் கூட பண்ணிருக்கேன்..லாஸ்ட் எபில சொல்லிருந்தேன்,” என்னோட எல்லா ஸ்டேஜ்லயுமே எனக்கு தேவையான உறவுகளை பாத்து பாத்து கடவுள் அமைச்சு குடுக்குறாரு..அந்த விதத்துல நா ரொம்ப ரொம்ப லக்கிநு அது இவங்க எல்லாரையும் மனசுல வச்சுதான்..தீஸ் ப்யூட்டிபுல் லேடீஸ் ஆர் வித் மீ ப்ரம் அண்ட் இன் மை ஆல் வொர்ஸ்ட் சுச்சுவேஷன்ஸ் ஆப் லைப்..பீ வித் மீ ஆல்வேஸ் கைஸ்…
கூடிய விரைவில் என்னோட அடுத்த தொடர்கதை “நின்னை சரணடைந்தேன்” மூலமா உங்க எல்லாரையும் மீட் பண்ண வரேன்..அதுவரைக்கும் நா உங்களையும் நீங்க என்னையும் மிஸ் பண்ணாம இருக்க இருக்கவே இருக்கு நம்ம ஷார்ட் ஸ்டோரிகான்டெஸ்ட் அதுல குட்டி குட்டி கதையோட அப்பப்போ கெஸ்ட் பெர்பார்மெண்ஸ் குடுத்துட்டு போறேன்..நன்றி மக்களே!!!!!
*****முற்றும்*****
{kunena_discuss:952}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.