(Reading time: 27 - 54 minutes)

தேதோ பேசி கொண்டிருந்தான் ராம்..அது அவன் பயத்தின் வெளிப்பாடு என நன்றாகவே புரிந்தது..ஆனால் இருவருக்குமே என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை..அவரவர் சிந்தனையிலிருக்க மகி லேசாய் கண்விழித்தாள்..சட்டென மூவரும் நடப்புலகிற்கு வர அவர்களின் முன் ராம் தன் காலை பிடித்திருந்து கூச்சத்தை தர மெதுவாய் எழுந்தமர்ந்தாள்..

சாரி அண்ணி பேசி உங்கள எழுப்பிட்டோமோ..

அதெல்லாம் இல்லடா இப்போலா அடிக்கடி இந்த மாறி தூக்கம் கலைஞ்சு எழுந்துருவேன் டாக்டர் நார்மல் தான் இதெல்லாம்நு சொன்னாங்க..ஆமா நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க காலைல உங்களுக்கு தான் கல்யாணம் நியாபகம் இருக்கட்டும் என்று கூறி சிரித்தாள்..

அட ஏன் மகிம்மா அந்த சோகத்தை நியாபகப்படுத்துற என பரணி போலியாய் அலுத்து கொள்ள சாக்ட்சியிடமிருந்து நாலு அடியை பெற்று கொண்டான்..சிறிது நேரத்தில் மகி அவர்களிருவரையும் தூங்க சொல்லி அனுப்பிவிட்டு ராமை பார்த்தாள்..

தூங்கலயா ராம்??

தூங்கனும்டா ஏனோ தூக்கம் வரும்நு தோணல எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல முழிக்கனும் அதான் அப்படியே டைம் ஓட்டிரலாமாநு பாக்குறேன்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

ம்ம் எனக்கும் தான்..வெளில லான்ல கொஞ்ச நேரம் வாக் போய்ட்டு வரலாமா??

இந்த நேரத்துலயா??இப்போ தானடா கால் வலிச்சுதுநு சொன்ன??

இல்ல இப்போ பெட்டர் ராம்..நடந்தா நல்லாயிருக்குமோநு தோணுது..

சரி வா என்று அவளை அழைத்து கொண்டு வெளியே வந்தான்..இதமான குளிரோடு இரவின் நிசப்தம் ஏனோ ரம்மியமாய் தோன்றியது..ராமின் கையை பிடித்தவாறே மெதுவாய் நடக்க ஆரம்பித்தாள்..

ராம்..

ம்ம்ம்

நா ஒண்ணு கேக்கவா??

ஆரம்பிச்சுட்டியா நீ இந்த கேள்விய கேட்டாலே எனக்கு அள்ளு கெளம்புது குட்டிமா என்ன சொல்லு..

நாம்ம குட்டிய நீங்க நல்லா பாத்துப்பீங்கள??

ஏன் உன்னையும்தான் நல்லா பாத்துப்பேன்..உனக்கப்பறம் தான்டி ஜுனியர்..

இல்ல எனக்கேதாவது ஆய்ட்டா கூட..

மகி..என்ன பேச்சு இது..கோவமாய் கத்தினான்..

ராம் கத்தாதீங்க யாராவது வந்துர போறாங்க..

பின்ன நீ தான் என்ன கத்த வைக்குற..எந்த காலத்துலடீ இருக்க..சைன்ஸ் எவ்ளவோ முன்னேறிடுஞச்சு எதெதுக்கோ மருந்து கண்டுபிடிக்குறான் நீ என்னவோ வீட்ல டெலிவரி பாக்குறா மாறி கேக்குற..எவ்ளோ பெரிய ஹாஸ்பிட்டல் தெரியுமா அது..

இல்லப்பா சாரி ஏதோ தெரியாம கேட்டுட்டேன்..

யாரு நீ..தெரியாம..நம்பீட்டேன்..மகி எதையோ மனசுல போட்டு குழம்பிட்டு இருக்க என்னனு சொல்லு..

அது வந்து ரெண்டு நாள் முன்னாடி பேஸ்புக்ல ஒரு போஸ்ட் படிச்சேன்..ஒரு டாக்டர் பண்ண தப்பால டெலிவரில ஒரு பொண்ணு இறந்துபோச்சாம்..அந்த குட்டிபாப்பா எவ்ளோ க்யூட்டா இருந்தது தெரியுமா..பாவமா இருந்தது ராம்..ஒரு வேளை எனக்கும் அதுமாறி ஆய்டுச்சுநா..

அப்படியே நாலு வச்சேன்னா தெரியும்..பேஸ்புக்ல படிக்க எவ்ளவோ இருக்கு அதெப்படி உனக்குநு இப்படி வந்து மாட்டுதுநு தான் தெரில..ஏன் அதே பேஸ்புக்ல ஒரு லேடி ஒரே டெலிவரில 11 குழந்தைங்க பெத்துகிட்டாங்கநு வந்ததே அத பாக்கலையா..மகி ஏன் நீ இப்படி இருக்க..கண்டத நினைச்சு உள்ள இருக்குற என் ஜுனியரையும் பயமுறுத்தாத..அதெல்லாம் குட் பேபியா வெளில வந்துடுவா..

ம்ம்ம் ஏனோ நாள் நெருங்க நெருங்க ரொம்ப பயமாயிருக்கு ராம்..

ஒன்றும் பேசாமல் அவளை தன்னோடு சாய்த்து கொண்டான்.எதை நினைச்சும் மனச குழப்பிக்காத குட்டிமா இந்த நேரத்துல இந்த பயம் எல்லாம் நார்மல் தான்..இருந்தாலும் நா உன்கூடவே இருக்கும் போது இந்த மாறி தேவையில்லாத பயமெல்லாம் உனக்கு வரவே கூடாது என்றவாறே சிறிது நேரம் அப்படியே நடந்துவிட்டு அவளை உறங்க செய்துவிட்டுஅவளருகிலேயே அமர்ந்திருந்தான்..பின் எழுந்து குளித்து திருமண வேலைகளை கவனிக்கலானான்..முகூர்த்த நேரம் நெருங்க மகியை அழைப்பதற்காக உள்ளே வந்தவன் தன் திருமண புடவையில் தேவதையாய் நின்றவளை கண்டு அந்நாளின் நினைவுகளில் கரைந்தான்..மகி நாமளும் பேசாம இப்போ இன்னோரு தடவ கல்யாணம் பண்ணிக்கலாமா??

ஓ..பண்ணிட்டா போச்சு..என அவளும் சிரிக்க அந்த சிரிப்பையும் மீறிய சோர்வு அவள் முகத்தில் தெரிந்தது..அதை கவனித்தும் அவளிடம் எதையும் கேட்டு கொள்ளவில்லை..குறித்த சுப நேரத்தில் பரணி சாக்ட்சியின் கழுத்தில் தாலியை கட்டினான்..சாக்ட்சியின் கண்களும் அமர்நாத்தின் கண்களும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது..மகி கீழிருந்தே தன் வாழ்த்தை செய்கையில் தெரிவிக்க மணமக்கள் அழகாய் ஏற்று கொண்டனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.