(Reading time: 27 - 54 minutes)

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி கோலாவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி

எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
என்னை ஊற்றி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடிஒரு போன்னுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
அடி விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்ப
அடி உறவு மட்டுமே நினைப்ப
உடுத்தி போன சேலை மறந்து
வெடி உடுத்தி நடப்ப
அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லி கொடுப்ப
தான தனதான தந்தானே ...

அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்

ரு எல்லைக்கு மேல் மகியும் சேரில் அமர்ந்த படியே கைகளை அசைப்பதும் தட்டுவதுமாய் ஆட்டபாட்டத்தோடு ஒன்றிவிட்டாள்..ராமும் விஜியுமாய் அவளை அடக்க முயன்று சிறிது நேரத்தில் வெற்றியும் கண்டனர்..அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அவளை உக்கார வைத்துவிட்டு அவளுக்கு உணவு எடுத்து வந்தான் ராம்..

ப்பா,ப்ளீஸ் எனக்கு வேண்டாம்..என்னால சாப்ட முடியும்நு தோணல..

குட்டிமா தயிர்சாதம் மட்டுமாவது வாங்குடா..ரெண்டே வாய்தான்..நல்ல பொண்ணுல..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ராம் சத்தீயமா முடில..இல்லனா நானே சாப்டுவேன் தான..என்றாள் பாவமாய் அதற்கு மேல் வற்புறுத்த தோன்றாமல் இளஞ்சூட்டில் பால் எடுத்து வந்து கட்டாயபடுத்தி அவளை குடிக்க வைத்துவிட்டு வெளியில் சென்று அவனும் பால் அருந்திவிட்டு வந்தான்..கடந்த ஒன்பது மாதங்களாகவே இதுதான் வாடிக்கை..மசக்கையின் காரணமாகவோ இல்லை வயிறு ஏதோ போன்று இருந்தாலோ மகி சாப்பிடாமல் படுத்துவிடுவாள் அந்த தினங்களெல்லாம் ராமும் சாப்பிடாமல் படுத்துவிடுவான்..

சரி படுத்துக்கோ மகி ரொம்ப டைம் ஆயிடுச்சு..மெதுவாய் படுத்தவளுக்கு கால்கள் ரெண்டும் இழுப்பதாய் தோன்ற அருகிலிருந்த ராமின் கையை லேசாய் அழுத்தி பிடித்தாள்..குட்டிமா என்னாச்சு??

இல்லப்பா கால் இழுக்குறமாறி இருக்கு..வேற ஒண்ணுமில்லை..அவள் கால்களையெடுத்து தன் மேல் வைத்தவன் இதமாய் பிடித்துவிட ஆரம்பித்தான்..மகிக்கும் அது தேவையாய் இருந்ததாலோ என்னவோ ஒன்றும் கூறவில்லை..அப்படியே உறங்கியும் போனாள்..சிறிது நேரத்தில் பரணியும் சாக்ட்சியும் அவளை காண உள்ளே வர அப்போதும் ராம் அப்படியே அமர்ந்திருந்தான்..கண்கள் லேசாய் சிவந்திருப்பதாய் தோன்றியது பரணிக்கு..

அண்ணி தூங்கிட்டாங்களா..சரியா பேசவே முடியலயேநு வந்தேண்ணா..

டேய் ராம் ஏன்டா உன் முகமே ஒருமாறி இருக்கு??

அதெல்லாம் ஒண்ணுமில்ல மச்சி..

டேய் உன் மூஞ்சிய பாத்தாலே தெரியுது எதாவது ப்ராப்ளமா??

ஹே ச்சச்ச அதெல்லாம் ஒண்ணுமில்ல டா..ஏனோ ஒரு மாறி பயமாயிருக்கு மச்சி..

ஆதரவாய் அவன் தோளை பிடித்தான் பரணி சாக்ட்சியும் அவனருகில் அமர்ந்தாள்..

அண்ணா நீங்க தான் தைரியமா இருக்கனும் ஆம்பள நீங்களே இப்படி பயந்தா அண்ணிக்கு யாரு தைரியம் சொல்லுவா??

இல்ல சாக்ட்சி..பிரசவம்ங்கிறது ஒரு மறுபிறப்புநு சொல்லுவாங்க..இதே யாரோ சொல்லி கேக்கும் போது ஒண்ணும் தோணாது ஆனா பத்து மாசம் தன் மனைவி படுற கஷ்டத்தையெல்லாம் கூட இருந்து பாக்குற தன் மனைவிய நேசிக்குற எந்த புருஷனுக்குமே மனசு வலிக்கத்தான் செய்யும்..அஞ்சு மாசம் வரை மசக்கை,ஆறாம் மாததிலிரோந்து குழந்தையோட அசைவுகள்,சரியா சாப்ட முடியாது நிறனைச்சத சாப்ட முடியாது,படுத்தா தூக்கம் வராது..நிமிந்து படுக்க கூடாது..இன்னும் எவ்வளவோ..இதெல்லாம் பாக்கும் போது ஆம்பள என்னம்மா பெரிய ஆம்பள..அந்த கடவுளுக்கே கண் கலங்கதான் செய்யும்..ஆம்பளைங்க நாங்க உடலளவுல தான் பலசாலிங்க ஆனா பொண்ணுங்க மனசளவுல எங்கேயோ இருக்குறவங்கடா..ஒரு பொண்ணுக்கு ஏற்படுற பிரசவ வலிங்கிறது ஒரே நேரத்துல 20 எலும்புகள் ப்ராக்சர் ஆறதுக்கு சமமாம்..நினைச்சாலே நடுங்குது எனக்கு..இதுல இவ வேற என்ன அவ பக்கத்துலயே இருக்க சொல்றா..நா எந்த அளவு பயந்து போய்ருக்கேன்னு எனக்கே சொல்ல முடில பரணி..இந்த மாறி நிறைய நாள் அவ தூங்கினப்பறம் உக்காந்து ஏதேதோ யோசிச்ட்டு இருந்துருக்கேன்..சாதாரணமா அவ சின்னதா முகம் சுளிச்சா கூட நினைப்பு எங்கெங்கேயோ போயிருதுடா..ஆனா ஒண்ணு மச்சி ஒரு பொண்ணோட கர்ப்ப காலத்தையும் பிரசவத்தையும் நேர்ல பாக்குற எந்த ஆணுக்குமே பொண்ணுங்களை தப்பா நினைக்க தோணாதுடா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.