“நீங்களும் கோவிலுக்குள்ள வந்திருக்கலாம்… இப்படி வராம இருந்துட்டீங்களே?...”
பிரசுதி தன் மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்த,
தட்சேஷ்வரரோ, “போகலாமா?...” என்றார் அலட்சியமாக….
“எல்லாரும் வண்டியில ஏறுங்க…” என பிரம்மரிஷி சொன்னதும், அனைவரும் ஏறி அமர, தட்சேஷ்வர் மட்டும் நின்று கொண்டிருந்தார்…
மகனின் அருகே வந்தவர்,
“தட்சா... உன்னுடைய இந்த பிடிவாத குணம் எதையும் இழக்க வச்சிடக்கூடாது… அதை புரிஞ்சி நடந்துக்கப் பழகு…”
“இதுவரை உங்க பேச்சுக்கு மறுபேச்சு நான் பேசினது இல்ல… ஆனா இந்த ஒரு விஷயத்துல என்னால உங்க கட்டுப்பாட்டுக்குள்ள வர முடியலைப்பா… என்னை மாத்திக்க என்னால முடியலை.. என்னை மன்னிச்சிடுங்க…”
சொல்லிவிட்டு வேகமாக சென்ற மகனையே இமைக்காமல் பார்த்திருந்தார் பிரம்மரிஷி…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பிய பிரம்மரிஷியின் விழிகள் ஜெய்யிடத்தில் நிலைக்க, அவனது முகத்தில் இருந்த பொலிவும், சதியின் முகத்தில் விரவி பரவியிருந்த நாணமும் அவர் கண்களில் பட,
“ஈஸ்வரா… நீயே துணை….” என்றார் வாய்திறந்து….
அதன் பின், மனம் எங்கும் நிறைந்துவிட்ட நிம்மதியில் அனைவருமே மயிலாடுதுறை திரும்பினர் மகிழ்வுடன்…
மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்து சேர்ந்தவர்கள், நாங்கள் கிளம்புகிறோம் என்று கூறி புறப்பட்டனர் சென்னையை நோக்கி…
ஜெய்யின் விழிகள் சாலையிலும், நிலைக்கண்ணாடி வழி தன்னவள் மீதும் மாறி மாறி நிலைத்திருக்க, அவள் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பது புரிந்தது…
“உமையாள் சிவபெருமானையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் புரிந்து அவரை தன் பதியாக மணமுடித்துக்கொண்ட ஸ்தலம் இது...”
திரும்ப திரும்ப பிரம்மரிஷி சொன்ன வார்த்தைகளே அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது…
அவளின் சிந்தனை எங்குள்ளது என அறியமுற்பட்டான் ஜெய்…
“தாத்தா… தூக்கம் வந்தா தூங்குங்க… சென்னை போக நேரமாகும்….”
அவன் எதை எதிர்பார்த்து சொன்னானோ அதற்கான விடையை அவளே கொடுத்தாள் அவனிடம்…
“தாத்தா… நாம அந்த கோவிலுக்கு மறுபடியும் போகலாமா?.. ப்ளீஸ்…”
நடக்க விருப்பதை அறிந்து கொண்ட பிரம்மரிஷியின் இதழ்களில் விரக்தி புன்னகை ஒன்று உதிக்க, அவர் மௌனமாக இருந்தார்…
“சொல்லுங்க தாத்தா… ப்ளீஸ்… ஒரே ஒரு தடவை போகலாம்…”
அவள் கெஞ்சிக்கொண்டிருக்கையிலே,
“சதி… இப்போ தான அங்க போயிட்டு வந்தோம்?... அதுக்குள்ள என்ன மறுபடியும்?...”
இஷான் சற்றே அதட்டினான் அவளை…
“ப்ளீஸ் அண்ணா.. எனக்கு அங்க போகணும்… மறுபடியும்… ப்ளீஸ்...”
அவள் கெஞ்சல் நீடித்தது அதிகமாய்….
“இன்னொரு நாள் போகலாம் சதி… இப்போ நாம ஊருக்கு போறது தான் சரி…”
தைஜூ அவளிடம் மெதுவாக கூற, அவள் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை…
“ப்ளீஸ்… தாத்தா… அங்க போகலாம்… நீங்களாச்சும் சொல்லுங்க…”
பிரம்மரிஷியை அவள் தஞ்சம் புக, அவரோ ஜெய்யைப் பார்த்தார்…
அவர் பார்வை போகும் திசை உணர்ந்து, அவளும் ஜெய்யைப் பார்த்தாள்…
“என்னை அங்க கூட்டிட்டு போங்க… ப்ளீஸ்….”
விழி நீர் இப்பவோ அப்பவோ என விழத் தயாராக, அதரங்களில் இருந்து வந்த வார்த்தைகள் அவனை எதுவோ செய்ய, அவன் தவித்தான்…
“என்னை கூட்டிட்டு போங்க நீங்க… ஒருதடவை மட்டும்… ஒரே ஒரு தடவை கூட்டிட்டு போங்க…”
அவள் கெஞ்சலை அதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியாதவன், காரை திருப்பினான், யாரும் எதிர்பாராத வண்ணம்…
அனைவரும் வியப்போடு ஜெய்யைப் பார்த்திருக்க, அவன் விழிகளோ, தன்னைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்த சதியின் முகத்தில் நிலைத்திருந்தது…
“என்னடா இது?... அவதான் கேட்குறான்னா, நீயும் இப்படி அங்க கிளம்புற?...”
இஷான் கேட்க, அவன் அமைதியாக இருந்தான்…
பின் அரை மணி நேரத்தில் கோவிலுக்கும் சென்றுவிட்டு திரும்ப, சதியின் விழிகள் ஜெய்யின் மேல் காதலுடன் பதிந்தது…
அந்நேரம், அவனுக்கு ஒரு போன் வர, அதில் வந்த தகவல் கேட்டு, சதியிடம் திரும்பினான் அவன் வேகமாய்…
“சீக்கிரம் கிளம்பணும் நாம… வா… போகலாம்…”
அவளும் அவன் மனதறிந்து, அவனுடன் கிளம்ப, கார் அங்கிருந்து புறப்பட்ட சற்று நேரத்திலேயே, சதி உறங்கி போனாள்…
அவளையேப் பார்த்திருந்தவனுக்குள் துயரமும், வேதனையும் மீண்டும் ஆக்கிரமிக்க தொடங்க, அவன் முகத்தில் கவலை படர்ந்தது…
தன் பணியை முடித்துவிட்ட கடமையில் மறையலானான் ஆதவன்…
கோவிலை விட்டு சற்று தொலைவே சென்றிருப்பார்கள்… ஜெய்யின் கார் சட்டென நின்றது…
என்னாயிற்று என்ற எண்ணத்துடன், அவன் காரை விட்டு இறங்கி பார்த்து அதனை பழுது செய்ய முற்பட, இஷானும், அவனுக்கு உதவி புரிந்தான்…
“என்னாச்சு அண்ணா?...”
என காரிலிருந்து இறங்கி தைஜூ விசாரிக்க,
“ஒன்னுமில்லம்மா… இப்போ சரி ஆகிடும்…” என்றான் ஜெய்….
“சரி…” என்றபடி அங்கிருந்தபடி சுற்றி இருப்பவற்றை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் தைஜூ காரை விட்டு சற்று தள்ளிச் சென்றபடி…
பிரம்மரிஷியும் அங்கிருந்த பாறையின் மீது அமர்ந்து கொண்டு கண்களை மூடி தியானத்தில் ஆழ, உள்ளே இருந்த சதியின் மீது பார்வையை அவ்வப்போது பதித்திருந்தான் ஜெய்…
பத்து நிமிடங்களுக்குப் பிறகு பழுதை நீக்கி சரி செய்துவிட்டு, காரினுள் பார்க்க, சப்தமும் அடங்கிப்போனது ஜெய்க்கு…
வேகமாக காரைத் தாண்டிச் சென்று அவன் ஓட, இஷான் வந்து அவனைத் தடுத்தான்…
“மச்சான்… என்ன ஆச்சுடா?..” என அவன் கேட்க, ஜெய்யோ காரை கைகாட்டினான்…
“காரில என்ன?...” என யோசித்துக்கொண்டே காரினுள் பார்த்த இஷான், சதியைக் காணாது அரண்டு போனான்…
“சதி…..” என இஷான் கத்த, அவனின் சத்தம் கேட்டு அவனருகில் வந்தாள் தைஜூ…
“என்னாச்சு இஷான்?... ஏன் சத்தம் போடுறீங்க?...”
“சதியைக் காணோம் தைஜூ…”
“என்ன?.................” மிரட்சியுடன் அவள் விழிக்க, ஜெய்யின் விழிகளிலோ சினம் பரவியது…
மனதில் ஆக்கிரமித்துக்கொண்ட கவலை, அவனைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது அவனுக்கு…
வேகமாக ஓடிச்சென்று பிரம்மரிஷியிடம் அவர்கள் இருவரும் விவரத்தை சொல்லிவிட்டு திரும்பிய வேளை, ஜெய் அங்கே இல்லை…
“ஜெய்………………” என்று கத்திய இஷானுக்கு, அவனது குரலே பதிலாக எதிரொலித்தது…
{kunena_discuss:1001}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.