(Reading time: 25 - 50 minutes)

08. மார்பில் ஊறும் உயிரே!!! - மது

அஸ்தமன வாழ்வினில் விடியல் நீ

Marbil oorum uyire

பூர்வா சித்தார்த் கை பிடித்து அவனை ஹாலுக்கு இழுத்துக் கொண்டு வந்தாள்.

"சித்து நீ ரொம்ப ரொம்ப குட் பாய் அதனால காட் உனக்கு கிப்ட் குடுத்தார்"

அங்கு மேஜை மேல் இருந்த செய்தித்தாளை கசக்கிக் கொண்டிருந்த குழந்தை நிலாவை தன் இரு கைகளால் பின்னோடு அணைத்து தூக்கி கொண்டு வந்து சித்தார்த்தின் கைகளில் திணித்தாள்.

அந்த ஹாலில் இருந்த இருவரின் பெற்றோரும் அபூர்வாவின் செயல் கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்தே போயினர்.

சித்தார்த் கையில் இருந்த நிலா தனது அக்காவைப் போலவே பட்டுப் பாவாடை சட்டை ஸ்வட்டர் அணிந்திருந்தாள். சித்தார்த்தைப் பார்த்து குழந்தை சிரிக்கவும் சித்தார்த் நிலாவை தன்னிச்சையாக அணைத்துக் கொண்டான்.

சித்தார்த் நிலாவை அணைத்த படியே அபூர்வாவைப் பார்க்க அவள் மலர்ந்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்திலேயே இக்குழந்தை அபூர்வாவின் தங்கை என்று புரிந்து கொண்டிருந்தான் சித்தார்த்.

"இந்த பாப்பா உன்னோட தங்கச்சி பாப்பால. உனக்கு தானே காட் கிப்ட் கொடுத்தார் "

அவ்வாறு   சித்தார்த் அபூர்வாவிடம் கேட்ட போதும் நிலாவை விடாமல் அணைத்துக் கொண்டே தான் இருந்தான்.

காவ்யாவிற்கு காட் கொடுத்த கிப்ட் கார்த்திக் தம்பி பாப்பா என்றும் அவனது தங்கச்சி பாப்பா சிந்துவை காட் திரும்ப அவர்கிட்டேயே கூப்பிட்டுக் கொண்டார் என்றும் சித்தார்த் நினைவில் ஆழப் பதிந்து போயிருந்தனவே .

“அபியும் குட் கேர்ள் சித்துவும் குட் பாய். காட் உன்னோட தங்கச்சி பாப்பாவ அவர்கிட்டேயே வச்சுகிட்டார்ல. அதுனால நாம நிலா பாப்பாவ நம்ம தங்கச்சி பாப்பாவா ஷேர் பண்ணிக்கலாம் சித்து"

அன்று இருவரும் பர்ஸ்ட் ரேங்க் ஷேர் பண்ணிக்கோங்க என்று சொன்னதை ஞாபகம் வைத்து இன்று சித்தார்த்துடன்  தங்கை என்ற உறவை ஷேர் செய்ய முன் வந்தாள் அபூர்வா.

சித்தார்த் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவன் குட் பாய் ஆகி விட்டான். அவனுக்கு தங்கச்சி பாப்பா கிடைத்து விட்டாள். அதை அபூர்வா தான் கொண்டு வந்து தந்திருக்கிறாள். 

முகம் நிறைய சந்தோஷமாய் அபூர்வாவின் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டான். இருவரும் சேர்ந்து குழந்தை நிலாவை கட்டி அணைத்துக் கொண்டனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ர் வரியில் ஓர் செயலில் அவனை அவள் உயிர்ப்பித்திருந்தாள். அந்நாள் வரை அவன் தனக்கு தானே எழுப்பி வைத்திருந்த இறுக்கத்தை தகர்த்து எறிந்தாள்.

அபூர்வாவை பில்லியாக அவனுக்கு ஏற்கனவே பிடித்திருந்தது. இப்போது அவள் மீது தனி பிரியம் ஏற்பட்டது. பின்னாளில் விவரம் அறிந்த பின் அபூர்வா மீது அபிமானமும் ஆழ்ந்த நேசமும் கொண்டான் சித்தார்த். வாழ்நாள் முழுவதும் அவளை அவன் பொக்கிஷமாய் கொண்டாட அவனது எல்லாவற்றையும் அவளுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க இந்த ஓர் செயலே காரணமாகி இருந்தது

சுசீலா  ஓடி வந்து அபூர்வாவை வாரி அணைத்து முத்தமழை பொழிந்தார்.

“நீ தான்மா எங்க குல தெய்வம். எங்க தேவதை" அபூர்வாவை அணைத்துக் கொண்டு சொன்னார் சுசீலா.  

எதுவுமே சித்தார்த் மனதில் ஆழ பதிந்து விடுவது புதிதல்லவே. தன் அன்னையின் இந்த கூற்றும் அவன் மனதில் கல்வெட்டென பதிந்து போனது. அன்றிலிருந்து அபூர்வா தான் அவனுக்கும் கடவுள் அனுப்பிய ஏஞ்சல்.

கிருஷ்ணமூர்த்தியுமே விஜயகுமாரின் கைகளைப் பற்றிக் கொண்டு உணர்ச்சிவசப்பட்டார். சுசீலாவைப் போல அவர் வார்த்தைகளால் கூறவில்லை எனினும் அவரின் முகமே அவர் அகத்தின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டியது.

"நேரமாச்சே...நல்ல நாள் அதுவுமா கோயிலுக்குப் போயிட்டு வந்திரலாமே" சூழ்நிலையை இலகுவாக்க ரத்னாவதி கூறவும் எல்லோரும் சரி என்று மலை மந்திருக்கு சென்று சுவாமிநாதனை தரிசனம் செய்தனர்.

இரு குடும்பமும் ஒன்றாக கோயிலுக்கு சென்று வந்த போதும் சித்தார்த் வீட்டினிலே மதியம் உணவை அருந்திய போதும் சித்தார்த் நிலாவை விட்டு நீங்கவே இல்லை. அபூர்வா சித்தார்த் கைப் பிடித்துக் கொண்டே திரிந்தாள்.

"ம்மா காவ்யாக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லணும்" சித்தார்த் சுசீலாவிடம் கூற அந்நாளில் அது இன்னோர் ஆச்சரியம்.

"காவ்யா மெட்ராஸ்ல இருக்கா. கார்த்திக் தம்பி பாப்பா இருக்கான். பத்மா அத்தை ராமு மாமா அப்புறம் பாட்டியும் அங்க தான் இருக்காங்க" அபூர்வாவிற்கு சித்தார்த் இந்த விவரங்களை  சொல்லிக் கொண்டிருந்தான்.

போன் போட்டுக் கொடுத்ததும் எல்லோருக்கும் சந்தோஷமாக வாழ்த்துக்களை சொன்னவன் அவனுக்கு காட் அபூர்வாவிடம்  கிப்ட் கொடுத்து  விட்டார் என்று மிக மிக உற்சாகமாக கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.