(Reading time: 25 - 50 minutes)

"ன்ன சுசி சொல்றான்" லலிதாம்பிகை போனில் மருமகளிடம் கேட்டார்.

"அம்மா நீங்க வாங்க எல்லாம் சொல்றேன். பொங்கலுக்கு பத்மா, அண்ணா, குழந்தைகளும் வந்தா நல்லா இருக்கும்" சுசீலா சொல்லவும் லலிதாம்பிகை ஆலோசித்து சொல்வதாக கூறினார்.

இதன் நடுவே தன் தந்தையிடம் பரணில் இருக்கும் பெட்டியை எடுத்து தர சொல்லி அதில் இருந்து பலவித பொம்மைகளை எடுத்து வந்து நிலாவிடம் விளையாடக் கொடுத்தான் சித்தார்த்.

"தங்கச்சி பாப்பாக்குன்னு அவனே எல்லாத்தையும் பார்த்து பார்த்து வாங்கினது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ரத்னா. உண்மையில் அந்த மீனாக்ஷியே அபூர்வா ரூபத்தில் வந்து எங்க வாழ்க்கையில விளக்கேத்தி வச்சிருக்கா" ரத்னாவதியின் கரம் பற்றி சுசீலா சொல்லவும்

"எல்லாத்துக்குமே ஒரு காரண காரியம் இருக்கும்மா...சித்துவுக்கு தங்கை கிடைச்ச அதே நேரத்துல எனக்கும் ஒரு சகோதரி கிடைச்சிருக்க" விஜயகுமார் நெகிழ்ச்சியுடன் சொல்லவும் சுசீலா இந்த குடும்பத்தை எந்நாளும் போற்ற வேண்டும் என்று மனதிற்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டார்.

சித்தார்த்தும் அபூர்வாவும் தங்களுக்குளேயே ஏதோதோ பேசிக் கொண்டே இருந்தனர். அபூர்வா தந்தை தவிர வேறு யாரிடமும் அதிகம் பேசி ரத்னாவதி பார்த்ததே இல்லை. ஏன்  பெற்றத் தாயான அவரிடம்  கூட வளவளக்க மாட்டாள். உடன் படிக்கும் பிள்ளைகளிடமும் அளவாய் பேசுவதோடு சரி. இப்போதோ சித்துவிடம் விடாது பேசிக் கொண்டே இருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

"நேரமாச்சே கிளம்பலாமா" விஜயகுமார் தன் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.

"சரிங்க...நான் குழந்தைகளை அழைச்சுட்டு வரேன்" உள்ளே அறையில் சித்தார்த் மடியில் நிலா தூங்கியிருக்க அபூர்வாவும் சித்தார்த்தும் மெல்லிய குரலில் ஓர் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தனர்.

"அபி வீட்டுக்கு போலாமா" ரத்னாவதி அபூர்வாவிடம் கூறிக் கொண்டே நிலாவை தூக்க கை நீட்ட சித்து அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

"அத்தை, அபியும் நிலாவும் எங்க வீட்லே இருப்பாங்க. நீங்க வீட்டுக்கு போங்க" அபூர்வா தனது அன்னையை அத்தை என்று அழைக்கவே சித்தார்த்தும் இயல்பாக ரத்னாவதியை அத்தை என்றான்.

"நானும் பாப்பாவும் இங்கேயே சித்துவோட இருக்கோம்மா" அபூர்வாவும் ஒத்து ஊதினாள்.

ரத்னாவதி குழப்பத்துடன் வரவும் அவரிடம் இருந்து விவரத்தைக் கேட்டு அறிந்த சுசீலா தன் மகன் மீது கோபம் கொண்டார்.

"இவனோட பிடிவாதம் நாளுக்கு நாள் ஜாஸ்தியாகிட்டே போகுது. நானும் சின்ன பையன்னு பார்த்துகிட்டே இருக்கேன். இருங்க ரத்னா நான்  போய் அபியையும் நிலாவையும் கூட்டிட்டு வரேன்"

"அவரசப்படாதே தங்கச்சி. சின்னக் குழந்தைகள் மனசு ஈரமான களிமண்ணு மாதிரி. நாம பிடிக்கிற விதத்தில் பிடிச்சா அழகான சிலையை வடிக்கலாம். அதுவே தப்பா பிடிச்சுட்டா அது காலத்துக்கும் இறுகி போயிரும்" விஜயகுமாரின் கூற்றில் இருக்கும் உண்மை உணர்ந்து சுசீலாவும் அமைதியானார்.

"ரதி நீ போய் அபிகிட்ட டாடி உன்கிட்ட ஏதோ சொல்லணுமாம்ன்னு போய் கூட்டிட்டு வா"

ரத்னாவதி அவ்வாறே அபூர்வாவிடம் கூறவும் அடுத்த  நொடியே தன் தந்தை முன் வந்து நின்றாள் அபூர்வா.

மகளைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டார் விஜயகுமார்.

மெல்லிய குரலில் அபூர்வாவின் காதில் ஏதோ சொல்ல அபூர்வாவும் கவனமாக கேட்டு சரி சரி என்று தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

பின் தந்தையின் மடியில் இருந்து இறங்கி அறைக்குச் சென்றவள் சிறிது நேரம் சென்று  சித்தார்த்துடன் வந்தாள்.

இவர்கள் வெளியே வந்ததுமே அறைக்குள் சென்று உறங்கி கொண்டிருந்த குழந்தையை சுசீலா தூக்கி வந்து ரத்னாவதியிடம் கொடுத்தார்.

"மாமா ஜெய்ஹிந்த்" சித்தார்த் விஜயகுமார் முன் நின்று விறைப்பாக சல்யூட் வைத்தான்.

மகளையும் சித்தார்த்தையும் இரு கைகளால் அணைத்துக் கொண்டார் விஜயகுமார்.

“மாமா என்னையும் கூட்டிட்டு போறீங்களா” சித்தார்த் கேட்கவும்

“கட்டாயம் உன்னையும் கூட்டிட்டு போறேன். ஆனா இப்போ நான் நிலாவை என்னோடு கூட்டிட்டு போவேன்...சரியா... நிலா ரொம்ப சின்ன பாப்பாவா இருக்காள்ல. நிலாக்கு அவ அம்மா பக்கத்துல படுத்தா தான் தூக்கம் வரும். பெரிய பாப்பா ஆனதும் நீயே கூட வச்சுபியாம். தினமும் அபியும் நிலாவும் உன்னோட விளையாட வருவாங்க” விஜயகுமார் சித்தார்த்திடம் தன் மகள்களை அழைத்தப் போவதற்கு அனுமதி வேண்டி நின்றார்.  

சித்தார்த் ஒரு நிமிடம் ஏதோ சிந்தனையில் இருந்தான்.

“தம்பி பாப்பா தான் அம்மா பக்கத்துலேயே படுத்துக்குது” முன்பு காவ்யா சொன்னது அவன் நினைவில் இருந்தது. சிறு குழந்தைகள் அம்மா பக்கத்தில் தான் படுத்துக் கொள்ளும் என்று புரிந்து கொண்டான்.

“சரி மாமா நான் நாளைக்கு நிலா பாப்பா கூடவும் அபி கூடவும் விளையாடுறேன்” சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தான் சித்தார்த்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.