(Reading time: 25 - 50 minutes)

"நான் எப்போதும் சொல்வது தான். என்னாலே சமுதாயம் முழுமைக்கும் மாற்றம் கொண்டு வர முடியுமான்னு தெரியாது. ஆனா என் வீட்டில் இருந்து தொடங்கலாம். இப்போ நம்ம குழந்தைகளுக்கு நல்லவை போதித்தாலே அது அவங்க கூட இருக்கும் பிரண்ட்ஸ் மேலேயும் அவங்கள சுத்தி இருக்கவங்க கிட்டேயும்  தாக்கத்தை ஏற்படுத்தும். நம்மாள முடிந்த வரை இந்த உலகத்திற்கு நல்லது செய்துட்டு போகணும்"

"தை பிறந்தா வழி பிறக்கும்னு சொல்வாங்க. இன்னிக்கு நல்ல சிந்தனைகள் பிறந்திருக்கு. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு" பத்மா தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

"அடடா பொங்கல் வைக்க வேண்டாமா.. பேசிட்டே இருந்தா எப்படி. உங்களுக்காக தான் காத்திருந்தோம்..வாங்க" சுசீலா அழைக்கவும் பொங்கல் களைகட்டியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

சாவி கொடுத்தால் மத்தளம் தட்டும் குரங்கு பொம்மையை நிலா விளையாட எடுத்து கொடுத்தவன் சாவி கொடுத்ததும் வேலை செய்யாததால் அவளை அருகில் அமர செய்து," அண்ணா சரி பண்ணி தரேன்" என்று பெரிய மனிதனாக சொல்லி பொம்மையை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டான் சித்தார்த்.

"என்ன பண்ற சித்து" விஜயகுமார் அவனை கவனித்து  கேட்டார்.

"பொம்மையை சரி பண்றேன்" அவன் சொல்லிக் கொண்டே மும்மரமாக அதில் ஈடுபட அவன் அருகில் அமர்ந்து அதை கவனித்தார். அதில் பேட்டரி மாற்ற வேண்டியிருந்தது.

விஜயகுமார் நினைத்திருந்தால் அதை ஓர் நொடியில் வாங்கி சரி செய்து கொடுத்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அங்கே காவ்யா உடன் நட்போடு விளையாடிக் கொண்டிருந்த மகளை அழைத்தார்.

"பூக்குட்டி....சித்து பொம்மையை சரி செய்றான் பாரு. நீ அவனுக்கு ஹெல்ப் பண்ண வேண்டாமா"

"நான் ஹெல்ப் பண்றேன் டாடி.. காவ்யா இங்க வா சித்துக்கு ஹெல்ப் பண்ணலாம்" காவ்யாவையும் மகள் அழைத்து வர தன் வளர்ப்பின் மேல் கர்வம் கொண்டார் அந்த தந்தை.

அபியும் காவ்யாவும் அருகில் அமரவும் சித்தார்த் அவர்களை பார்த்து புன்னகைத்து தன் வேலையை தொடர்ந்தான்.

"பூக்குட்டி" ரகசியமாக விஜயகுமார் கூப்பிட்டு அவள் காதில் ஏதோ சொல்லவும் அவள் சென்று  முதலில் காவ்யாவிடம் ரகசியம் சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.

பின் சித்து அருகில் சென்று அபூர்வா தந்தை சொல்லிக் கொடுத்ததை சொல்லவும் அவனும் சரி சரி என்று அவள் சொல்வதை போலவே செய்தான்.

புது பாட்டரியை காவ்யா ஓடிச் சென்று சுசீலாவிடம் இருந்து வாங்கி வந்தாள்.

அதை அவள் கையில் இருந்து வாங்கி தந்தையிடம் காண்பிக்க அவர் அபியிடம் அதை பொருத்தும் முறையை சொல்லவும் சித்துவிடம் சென்று அபூர்வா பாட்டரி கொடுத்து அதை பொருத்தச் சொன்னாள்.

அபி தந்தையிடம் சென்று ஏதோ கேட்டு கேட்டு வருவதை சித்தார்த் பார்த்த போதும் அவன் கருமமே கண்ணாக தன் காரியத்தில் ஈடுபட்டிருந்தான்.

புது பாட்டரி பொருத்திய குரங்கு சாவி கொடுத்ததும் மத்தளம் கொட்ட நிலா கை தட்டி ஆர்பரித்தாள்.

அதைக் கண்ட சித்தார்த் தான் உலகையே வென்று விட்டதை போன்ற பெருமையில் மகிழ்ந்து போனான்.

குழந்தைகள் மூவருமே பெரிய சாதனை புரிந்து விட்ட சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.

"நாம அத சரி செஞ்சு கொடுக்க ஒரு நிமிஷம் கூட ஆகாது...ஆனா ஒற்றுமையா தாங்களே  அதை செய்த சந்தோஷம் தன்னம்பிக்கை குழந்தைகளுக்கு கிடைச்சிருக்காது" இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லலிதாம்பிகை விஜயகுமாரிடம் சொன்னார்.

ஒரு புன்னகையோடு அதை ஏற்ற விஜயகுமார் சித்தார்த்தை ஆழமாக பார்த்தார். பொறியியல் வல்லுனரான அவருக்கு அவனின் ஆற்றலும் திறமையும் அப்போதே கண்கூடாக தெரிந்தது.

அதை உணர்ந்து கொண்டவன் போல விஜயகுமாரைப் பார்த்து சித்தார்த் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் அவர்களுக்குள் ஓர் புரிதல் ஓர் எண்ண அலைவரிசை இணைப்பு அப்போதே உருவாகி விட்டிருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு இந்த ஒரே அலைவரிசையின் எண்ணங்களின் சங்கமமே மிகப் பெரிய செயல்களுக்கு காரணமாக இருக்க போகிறது என்று விஜயகுமாரும் அப்போது அறியவில்லை தான்.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1080}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.