(Reading time: 25 - 50 minutes)

"செய்யும் செயல் யாவிலும் ஒரு பாசிட்டிவ் நோக்கத்தோடு செய்தா அந்த வலிமை தானே வரும்" லலிதாம்பிகை ஆமோதித்தார்.

விஜயகுமார் வந்ததுமே அபூர்வா தந்தையைக் கண்டு கொண்டு ஓடி வரவும் சித்துவும் நிலாவை அழைத்துக் கொண்டு வர காவ்யாவும் தூக்கி விழித்திருந்த தன் தம்பியுடன் அங்கே வந்து விஜயகுமார் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

"சரி தான்மா. ஆரம்ப பயிற்சி காலத்திலும் எல்லையில் இருந்த சமயங்களிலும் அங்கேயே மாதக் கணக்கில் முகாம்களில் இருக்க வேண்டியிருக்கும். அப்போ எல்லாம் ஸெல்ப் டெவலப்மன்ட் புக்ஸ் நிறைய படிப்பேன்"

"நம்ம தத்துவங்களில் மனசாட்சி, உள்ளுணர்வு என்று சொல்லப்படுற ஒன்று தான் நம்ம சப் கான்ஷியஸ் மைண்ட். அது மிகவும் ஷக்தி வாய்ந்தது. ஒரு பெரிய மேக்னடிக் பீல்ட் போன்றது"

"அந்த சப் கான்ஷியஸ் மைண்ட்க்கு இது நல்லது இது கெட்டது என்பதெல்லாம் அறிந்து ஆராய தெரியாது. பாசிட்டிவ் எனெர்ஜி நெகடிவ் எனெர்ஜி இதைத் தான் முழு அளவில் ஈர்த்து பன்மடங்கு பெருக்கி வெளிப்படுத்தும்”

“அவ்வாறு வெளிபடுத்தும் ஷக்தி ரொம்பவுமே பவர்புல். அந்த ஷக்தி நம்மை காக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“அன்பு, கருணை, மகிழ்ச்சி, அமைதி, தர்மநெறியின் சிந்தனை ,தைரியம், நம்பிக்கை  இதெல்லாம் அந்த பாசிட்டிவ் எனெர்ஜியை அதிக்கப்படுத்துது. நம்மை காக்கும் ஷக்தி ஆகிறது”

 “அதே சமயம் பொய், கோபம், பயம், பொறாமை, அதிகாரம், ஆணவம், சூழ்ச்சி, அதர்மம் இதெல்லாம் நெகடிவ் எனர்ஜியை அதிகப்படுத்துது. நம்மை அழிக்க வல்லது”

"நாம அடுத்தவங்களுக்கு கெடுதல் நினைக்கிறது உண்மையில் நம்மளை நாமே அழிச்சுக்குற மாதிரின்னு அம்மா எப்போவும் சொல்வாங்க" சுசீலா சொல்லவும் “ரொம்ப சரி தங்கச்சி” என்று தொடர்ந்தார்.

"குழந்தைகள் தெய்வம்னு ஏன் சொல்றோம். ஏன்னா அவங்க பிறந்ததில் இருந்து ஐந்து வயது வரை அவங்க ஆழ் மனம் முழுக்க பாசிடிவ் எனெர்ஜி சூழ்ந்திருக்கும். இயற்கையாகவே மனிதனின் ஆழ்மனம் ஆக்கபூர்வமான சக்தியின் பீடமாக தான் இருக்கு.

வளர வளர சிந்திக்கும் திறன் வந்ததுமே கான்ஷியஸ் மைண்ட் பிரதானம் ஆகிடுது. அப்புறம் நமது எண்ணங்களே நமது ஆழ்மனதை செலுத்தும் விசையாக ஆகி விடுகிறது. அப்போது தீய எண்ணங்கள் அதிக அளவிலே மனதில் பதியும் என்றால் ஆழ்மனதில் அதிக அளவில் நெகடிவிட்டி தங்கி விடும். பின்னாளில் அதுவே நமது அழிவிற்கு மட்டுமில்லாமல் சிருஷ்டியின் அழிவிற்கும் காரணமாக ஆகி விடுகிறது”

“மருத்துவ ரீதியாக நியுரான்கள் இணைப்பு ஐந்து வயதில் முடிந்து போயடும்ன்னும் அப்போ குழந்தைங்க மனசில் பதிவது ஆழ்மனதில் அழியாம தங்கி விடும்னும் நான் கூட எப்போவோ படிச்ச நியாபகம்" கிருஷ்ணமூர்த்தியும் ஆர்வமானார்.

"தாயின் கர்ப்பத்தில் இருந்தே குழந்தை அனைத்தையும் உணர ஆரம்பித்து விடும். கருவை சுமக்கும் தாயின் மனநிலை பிற்காலத்தில் அந்த குழந்தையை பாதிக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது"

"அது தான் கர்பவதி சந்தோஷமா இருக்கணும்னு வழிவழியா சொல்றாங்களா" பத்மா கேட்கவும்

"ஆமாம். இன்றைய விஞ்ஞானம் கூட அதை ஒத்துக்கிட்டது. குழந்தைக்கு நாம் என்ன மாதிரி சொல்லித் தருமோ அதன் தாக்கம் அவங்க ஆழ் மனதில் அதிகமாக போய் சேரும். அது பாசிட்டிவ் எனெர்ஜியா இருந்தா அதுவே அதிக அளவில் தங்கி விடும். அதுவே பெரியவங்களா அவங்க ஆன போதும் அவங்களை அறியாமலேயே  சரியான பாதையில் நடத்தி செல்லும்”

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு பழமொழி கூட இருக்கே” கிருஷ்ணமூர்த்தி சொல்ல ஆமோதித்தார் விஜயகுமார்.

"மனிதன் தான் தெய்வம். மனிதன் தான் அரக்கன். இன்னொரு தெய்வமோ அரக்கனோ புதுசா வானத்தில் இருந்தோ பூமியைப் பிளந்தோ வரத் தேவையில்லை. நம்ம புராணங்கள் இந்த தத்துவத்தைத் தான் கதைகள் மூலமா சாமானியனுக்கும் புரியும் படி சொல்லுது. தெய்வமா இருப்பதும் அரக்கனா மாறுவதும் நம்ம கையில் தான் இருக்கு"

"என்னோட பணியில் உயிர் கொலை பற்றி சில சமயம் நான் சிந்திக்கிறது உண்டு. ஆனால் ஸ்ருஷ்டி காக்க படவேண்டுமானால்  தீயவற்றை அழிக்க வேண்டும். அது தர்ம நெறி. அர்ஜுனனுக்கு கண்ணன் கீதையைப் போதித்தது அடிக்கடி நான் வாசிக்கும் ஒன்று. அபி அவ அம்மா வயிற்றினுள்ளே  இருந்த போதே கீதை முழுவதையும் கேட்டிருக்கா "  மனைவியை பார்த்து சிரித்துக் கொண்டே சொன்னார் விஜயகுமார்.

"சித்துவும் காவ்யாவும் கிட்டத்தட்ட ஆறு மாத இடைவெளியில் பிறந்தாங்க. எனக்கு தாய் வீடு இல்லாததால அம்மா தான் எங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா பார்த்துக்கிட்டாங்க. குழந்தைகளுக்கு கதை சொல்வது, நல்வழிப் படுத்துவது எல்லாமே அவங்க தான்" தன் மாமியார் பற்றி பெருமையாக சுசீலா சொல்ல பத்மாவும் ஆம் என்று தலையசைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.