(Reading time: 25 - 50 minutes)

கிருஷ்ணமூர்த்தி பத்மா சிறு குழந்தைகளாக இருந்த போதே அவர்கள் தந்தை புற்று நோய்க்குப் பலியாகிப் போனார். வாழ்க்கையின் எல்லா கோணங்களையும் சந்தித்ததால்  தெளிவும் மன உறுதியும் மிகக் கொண்டிருந்தார் லலிதாம்பிகை. இரு குழந்தைகளையும் தனி ஆளாக வளர்த்து ஆளாக்கி ஓர் உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தது அவரின் தன்னம்பிக்கை மட்டுமே.

ரத்னாவதி பொங்கல் அன்று குழந்தைகளுடன் வரவும் லலிதாம்பிகை அவர்களை சிறப்பாக வரவேற்றார்.

"எனக்கு இப்போ மூணு பொண்ணுங்க" ரத்னாவதியை அணைத்துக் கொண்டு ஆத்மார்த்தமாக சொன்னார்.

"நீங்க தான் அபூர்வாவா. எங்க சித்துவோட ஏஞ்சலா " பத்மா அபூர்வாவை அள்ளி அணைத்து கொஞ்சி மகிழ்ந்தார்.

லலிதாம்பிகையும் அபூர்வாவை கொண்டாடவே இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த காவ்யாவிற்கு யார் இந்த புதுப் பெண் எல்லோரும் அவளையே கொஞ்சுகிறார்கள் என்று கோபம் வந்தது.

"பில்லி" காவ்யாவுடன் விளையாடிக் கொண்டிருந்த சித்தார்த் அபூர்வாவைப் பார்த்ததுமே பாதியிலே ஓடிச் சென்றான்.

"அத்தை...நிலா பாப்பா தாங்க" ரத்னாவதியிடம் இருந்து நிலாவை தன் கைகளில் வாங்கி கொண்டவன் அபூர்வாவையும் உடன் இழுத்துக் கொண்டு எல்லோரிடமும் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

"பாட்டி எங்க தங்கச்சி பாப்பா...பத்மா அத்தை பாருங்க எங்க பாப்பா....காவ்யா இங்க பார்த்தியா காட் என்ன குட் பாய் சொல்லி அபி கிட்ட பாப்பா குடுத்து விட்டார்...நானும் அபியும் பாப்பாவா பத்திரமா பாத்துக்குவோம்...இல்ல பில்லி" அத்தனை நாள் பழக்கத்தில் நிலாவும் சித்துவிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.

எல்லாம் சேர்த்து காவ்யாவுக்கு அபி மேல் பொறாமை வந்திருந்தது. அதனாலேயே அபி பரிசைக் கொடுக்க சென்ற போது முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள்.

காவ்யா அவ்வாறு செய்ததும் அபூர்வா அவள் பின்னோடே சென்று அவளிடம் மீண்டும் நீட்டினாள்.

அது பஞ்சதந்திர  கதைகள் அடங்கிய புத்தகம். அழகிய தாளில் சுற்றிக் கொண்டு எடுத்து வந்திருந்தாள் அபூர்வா. அபூர்வா மீண்டும் மீண்டும் காவ்யாவிடம் நீட்டவே காவ்யா அந்த பரிசுப் பொருளை பிடுங்கி எறிந்தாள்.

"காவ்யா" பத்மா வேகமாக மகளை அடிக்க கை ஓங்க அபூர்வா காவ்யாவை மறைத்துக் கொண்டு நின்றாள்.

"பத்மா அத்தை காவ்யாவை அடிக்காதீங்க” பத்மாவை தடுத்த அபூர்வா, “அவளை அடிச்சா காவ்யா டாடிக்கு இங்க வலிக்கும்" தனது இடது புற மார்பை தொட்டுக் காட்டினாள்.  

தன் அம்மாவின் அடியில் இருந்து அபூர்வா காப்பாற்றவும் காவ்யாவிற்கு அது வரை அபி மேல இருந்த துவேஷம் மறைந்து போனது.

சிறு குழந்தைகள் கோபம் எல்லாம் மேகம் மறைக்கும் சூரியன் போல. உடனே தீர்ந்து போகும். அடுத்த நொடியே ஒன்றாக சேர்ந்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

அங்கும் காவ்யா வீசி எறிந்த புத்தகத்தை ஓடிப் போய் எடுத்துக் கொண்டு வந்து பிரித்து பார்த்து “தேங்க்ஸ்” என்று அபூர்வாவிடம் சொன்னாள்.

ரத்னாவதி அபூர்வா அவ்வாறு சொன்னதற்கு பின் ஒரு பெரிய கதை இருக்கிறது என சொல்லிக் கொண்டிருந்தார். அந்தக் கதை என்னவென்றால்...

ரண்டு வாரம் அந்தமான்  சென்று அன்று திரும்பி இருந்தார் விஜயகுமார். வந்ததுமே அபூர்வா ஓடிச் சென்று தந்தையைக் கட்டி அணைத்துக் கொண்டாள். சாப்பிட அமர்ந்தவர் மகளை மடியில் வைத்துக் கொண்டு அவளுக்கும் ஊட்டியபடியே மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். 

"அபிக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லையே ரதி"

"இல்லையே நல்லா தான் இருக்கா ஏன் என்னாச்சு"

"நேத்து நான் டெஸ்ட் ரைட் போகும் போது திடீர்னு டாடின்னு ஒரு அபாயக் குரல்ல அபி  கூப்பிட்ட மாதிரி ஒரு செகண்ட்  இருந்துச்சு ரதி. நான் எப்போவுமே கண்ட்ரோல்ல இருப்பேன் சோ ஒன்னும் ப்ராபளம் ஆகல. ஆனா நான் அந்த ஒரு செகண்ட் அப்படியே ஸ்டன் ஆகி போனது இப்போ நினைச்சாலும் ஏன் அப்படி ஒரு தாட் பிளாஷ் ஆச்சுனு புரியவே இல்லை"

கணவர் கூறியதும் சட்டென ரத்னாவதிக்கு எதுவும் புரியவில்லை. சிறிது நேரம் ஏதோ யோசனையில் இருந்தவர்,

"நேத்து நான் அபியை அடிச்சுட்டேன்ங்க. ஆனா அவ அழவும் இல்ல .உங்கள கூப்பிடவும் இல்ல. போய் பெட்ல படுத்து தூங்கிட்டா. அப்புறம் நார்மலா தான் இருந்தா" கணவரிடம் முதன் முறையாக பயந்தவாறே சொன்னார் ரத்னாவதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.