(Reading time: 14 - 28 minutes)

ப்படியோ துஷ்யந்த் பெரிய நகையெல்லாம் வாங்கமாட்டான் என்பதால், சிறிய நகைகள் கொண்ட புகைப்படங்கள் கொண்ட கேட்லாக்கை அவனது நண்பன் கொடுத்திருந்தான்... அதை ஈடுபாடில்லாமல் ஒவ்வொன்றாக புரட்டிக் கொண்டு வந்தவனுக்கு அந்த ஜிமிக்கியின் மேல் கண்கள் பதிந்தது...

அது சிறியதுமில்லாமல், பெரியதுமில்லாமல் நடுத்தர அளவில் இருந்தது... அந்த ஜிமிக்கியின் நடுவே ஒரு முத்து தொங்கிக் கொண்டிருந்தது.. அதைப் பார்த்ததும், கங்காவிற்கு இது அழகாக இருக்கும் என்று துஷ்யந்த் நினைத்தான்... உடனே தன் நண்பனிடம் இந்த ஜிமிக்கி கிடைக்குமா..?? என்றுக் கேட்டான்...

"டேய்... இன்னும் மேரேஜ் ஆகலைன்னு சொன்ன.. யாருக்குடா இது.." என்று அந்த நண்பன் கேட்டதற்கு, துஷ்யந்த் அவனை முறைத்தான்...

"இல்லடா.. வீட்ல அம்மா, அத்தை, தம்பி தான் இருக்காங்கன்னு சொன்ன.. அவங்கல்லாம் இந்த ஜிமிக்கி போட மாட்டாங்களே... அதான் கேட்டேன்.." என்றான் அந்த நண்பன்...

"வேண்டியவங்களுக்காக வாங்குறேன்.. போதுமா..??"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"ஹே யாருடா..?? கேர்ள் ஃப்ரண்டா..?? டேய் 30 வயசுக்கு மேல ஆயிடுச்சு... சீக்கிரம் மேரேஜ் செஞ்சுக்க... அப்புறம் கண்டிப்பா மேரேஜ்க்கு இன்விடேஷன் வைக்க மறந்துடாதடா.. இவ்வளவு நாள் நம்ம ரெண்டுப்பேரும் டச்ல இல்லாம இருந்துட்டோம்... இனி அப்படி வேண்டாம்டா.." என்றான்..

ஏனோ அவன் துஷ்யந்தின் திருமணத்தைப் பற்றி பேசியதும்... "ராஜா உன்னோட கல்யாணத்தை முடிவு செஞ்சாச்சுப்பா.." என்று அவன் அன்னை சொன்னதும், இன்று கங்கா திருமணம் குறித்து வாழ்த்து சொன்னதும் அவன் ஞாபகத்திற்கு வந்தது... ஏனோ அவனின் மனநிலை மாறியது...

"எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு... சீக்கிரமா இந்த நகை கிடைச்சா நான் கிளம்புவேன்..." என்றான் துஷ்யந்த்..

அவனின் நண்பனும் துஷ்யந்தின் முக மாற்றத்தை கவனித்துவிட்டான்... அந்த நிலையில் அவனிடம் காரணம் கேட்க தோன்றவில்லை... பின் அந்த நகைக்கான விற்பனை முறைகள் நடந்தது... தன் நண்பனிடம் இருந்து நகையை வாங்கிக் கொண்ட துஷ்யந்த், தன் நண்பனிடம் விடைப்பெற்றுக் கொண்டு வெளியே வந்தான்...

வெளியே வந்தவன் இன்னும் வாங்க வேண்டிய சிலப் பொருட்களை வாங்கிக் கொண்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்றான்...

மாலை வீட்டிற்கு கிளம்புவதற்கு முன் முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கவே... அதில் கவனத்தை செலுத்தி வேலையில் ஈடுபடிருந்தான் இளங்கோ... அப்போது அந்த பதிப்பகத்தில் வேலை பார்க்கும் சேகர் அங்கு வந்தார்.

"இளங்கோ... இன்னைக்கு நம்ம பதிப்பகத்துக்கு வந்த கடிதங்கள் ப்பா இது.." என்று அவனிடம் ஒரு பையை கொடுத்தார்...

"என்னண்ணா... இந்த லெட்டர்ஸ்ல்லாம் படிச்சு பார்த்தீங்கல்ல.."

" படிச்சாச்சு இளங்கோ... அதில் பாதி கடிதங்கள், கதாசரியர் சகுந்தலாவை பாராட்டி தான் வந்திருக்கு... அந்த கடிதத்தையெல்லாம் பார்க்கும் போது... அவரை பத்தி தெரிஞ்சுக்கும் ஆவல் ரசிகர்களுக்கு இருக்குன்னு நல்லா தெரியுது..." என்றார் அவர்..

"ம்ம்.."

"அப்புறம் ராஜேஷும் சொன்னான்... நம்ம பதிப்பகத்துக்கு வர ஈ மெயில், அப்புறம் ஃபேஸ்புக் இதுல கூட சகுந்தலாவை பத்தி தெரிஞ்சிக்க எல்லோரும் விரும்புறங்களாமே..??"

"ம்ம் ஆமாண்ணா.. எனக்கும் தெரியும்.."

"இளங்கோ அவங்களும் 3 வருஷமா எழுதுறாங்க... இன்னும் எங்களுக்கே அவங்க யாருன்னு தெரியலையே.. இன்னும் எத்தனை நாள் இளங்கோ இப்படியே போகப் போகுது...

நம்ம பதிப்பகத்துக்கு 3 வருஷம் முடிஞ்சு, 4 வது வருஷம் தொடங்கப் போகுது... அதுக்கு பூஜை நடக்குமில்ல... அதுக்கு அவங்கள் கூப்பிடுவோமே.. நம்ம பதிப்பகமும் பாப்புலர் ஆகுமில்ல.."

"சேகர் அண்ணா... சகுந்தலா தன்னை யாருன்னு தெரியப்படுத்திக்க விரும்பல... அந்த கண்டிஷன்ஸோட தான் அவங்க எழுதப் போறேன்னு சொன்னாங்க... அவங்களா எப்போ தெரியப்படுத்திக்க நினைக்கிறாங்களோ... அப்போ அவங்களப் பத்தி சொல்வோம்... அவங்களை நாம கட்டாயப்படுத்தக் கூடாது...

சரி இந்த லெட்டர்ஸ் எல்லாம் கொடுங்க... நான் அவங்கள பார்க்கப் போறப்ப அதை கொடுக்கிறேன்..." என்று வாங்கிக் கொண்டான்...

குந்தலா.. இந்த மூன்று வருடத்தில் ஓரளவுக்கு பிரபலமாகி வரும் எழுத்தாளர்... இவருடைய பதிப்புகள், இளங்கோவின் நதிகள் பதிப்பகத்தில் மட்டுமே பதிவாகும்... எழுதுபவர் ஆணா, பெண்ணா என்று கூட தெரியாமல், அவரின் ரசிகர்கள் அவரை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள்... ஆனால் கதாசரியர் சகுந்தலாவோ தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.. ( ஆனால் நீங்களெல்லாம் அது யாராக இருக்குமென்று இந்நேரம் கண்டுப்பிடித்திருப்பீர்கள்).

றுநாள் மதியம் உணவு இடைவேளையின் போது, மதிய உணவை சாப்பிட்ட இளங்கோ... எழுத்தாளர் சகுந்தலாவிற்கு வந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு அவரை பார்க்க கிளம்பினான்...

பைக்கை அவர் வீட்டு வாசலில் நிறுத்தியவன்... கேட்டை திறந்துக் கொண்டு உள்ளே சென்று அவர்கள் வீட்டு காலிங்பெல்லை அழுத்தினான்...(இந்த வீட்டை ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கே... என்று நீங்கள் யோசிப்பது எனக்கு தெரிகிறது).

வீட்டிலிருந்து கதவை திறந்துக் கொண்டு ஒரு பெண்மணி வந்தார்.. (இவரையும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைக்கிறீங்களா..??)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.