(Reading time: 14 - 28 minutes)

"வா இளங்கோ..." என்று அவர் வரவேற்றார்...

"ஹாய் வாணிம்மா.." என்று விசாரித்துக் கொண்டே, அவனும் அந்த வீட்டிற்குள் உரிமையாக நுழைந்தான்...

"நம்ம ஆத்தர் மேடம் எங்க வாணிம்மா.. இன்ஸ்டியூட்ல இருந்து வந்தாச்சா..??"

"ம்ம் வந்தாச்சு... ரூம்ல தான் இருக்கா.. இன்னைக்கு இன்ஸ்டியூட் அரை நாள் தானே... வந்து சாப்டுட்டு ஏதோ புது கதை எழுதனும்னு ரூம்ல எழுதிக்கிட்டு இருக்கா.. இரு கூப்ட்றேன்.." என்றவர்...

"கங்கா... இளங்கோ வந்திருக்கான் பாரு.." என்று குரல் கொடுத்தார்...

"தோ வரேன் வாணிம்மா.." என்று அவள் பதிலுக்கு குரல் கொடுக்க..

"சரி... எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு எடுத்துட்டுவாங்க வாணிம்மா.." என்றான் இளங்கோ...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

"காபி தானே போட்டாப் போச்சு... ஆமாம் சாப்டாச்சா..??"

"ம்ம் அதெல்லாம் வேலா வேலைக்கு நடந்திடும் வாணிம்மா..."

"சரி ஊருக்குப் போனியே.. ஊர்ல எல்லோரும் சௌக்யமா..??"

"ம்ம் எல்லோரும் நல்லா இருக்காங்க.. அப்பா உங்களை கேட்டதா சொல்ல சொன்னாரு..."

"ம்ம் ரொம்ப சந்தோஷம் ப்பா.. இரு காபி எடுத்துக்கிட்டு வரேன்.." என்று அவர் உள்ளே செல்லவும், கங்கா அவள் அறையிலிருந்து வெளியே வந்தாள்...

"ஹாய் இளங்கோ... என்ன இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்க..."

"இங்க பக்கத்துல ஒரு ஸ்கூல்ல புக் பப்ளிஷ் பண்ற விஷயமா பார்க்க வந்தேன்... அப்படியே உன்னையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்..."

"ஓ.. அப்புறம் ஊர்ல இருந்து எப்போ வந்த... அப்பா, அண்ணா, அண்ணி.. எல்லோரும் நல்லா இருக்காங்களா..??"

"ம்ம் ரொம்ப நல்லா இருக்காங்க... அப்பா உன்னை ரொம்ப கேட்டதா சொல்ல சொன்னாரு... முடிஞ்சா ஊர் பக்கம் வந்துட்டும் போகச் சொன்னாரு..."

"முடிஞ்சா தானே பார்க்கலாம்... அதுக்கு முன்னாடி அப்பா பதிப்பகம் ஆண்டு விழாவுக்கு வருவாரில்ல... அப்போ நான் பார்த்துக்கிறேன்..."

"ம்ம் அப்போ அப்பா வந்து கேக்கும்போதும் இதே பதிலை சொல்றியான்னு பார்க்குறேன்..."

"நான் அதுக்கும் முன்னாடி அவர்க்கிட்ட போன்ல சமாதானப்படுத்திக்கிறேன்... ஆமாம் நர்மதா, யமுனா எல்லோரும் எப்படி இருக்காங்க... ஊர்ல இருந்து வந்ததும் அவங்கள பார்த்தீயா..??"

"ம்ம் பார்த்தாச்சு... உன்னோட புக்கை கொடுக்கற சாக்குல பார்த்தாச்சு... ரெண்டுப்பேரும் வழக்கம் போல யார் அந்த சகுந்தலான்னு கேட்டு துளைச்சு எடுத்துட்டாங்க... அப்புறம் பணம் கொடுக்காம புக் வாங்கிக்க மாட்டோம்னு சொன்னாங்க... நீ கொடுக்க சொன்னதா சொன்னேன்..."

"உனக்கா சமாளிக்க தெரியாது..?? ஆமாம் யமுனாக்கிட்ட இருந்து இப்போதாவது க்ரீன் சிக்னல் கிடைச்சுதா..??"

"எங்க... மேடம் அந்த டாபிக் பத்தி பேசவே விரும்பலையே... சீக்கிரம் க்ரீன் சிக்னல் கிடைச்சிடும்னு நினைக்கிறேன்..."

"இளங்கோ... எனக்கென்னமோ இது நடக்கும்னு தெரியலப்பா.." என்று சொல்லிக் கொண்டே வாணி கையில் காபியோடு வந்தார்...

"வாணிம்மா நீங்க வேணா பாருங்க... சீக்கிரம் யமுனா பச்சைக் கொடி காட்டத்தான் போறா.. எங்க கல்யாணம் நடக்கதான் போகுது.."

"கங்கா... அதுக்குள்ள இளங்கோக்கு வயசாகிட போகுது.." என்று வாணி சொன்னதும்... கங்கா சிரித்தாள்...

"என் நிலைமையை பார்த்தா... உங்களுக்கெல்லாம் கிண்டலா தெரியுது... எல்லா நேரம்...

சரி நான் வந்த விஷயத்தை மறந்துட்டேன் பாரு... இதெல்லாம் உன்னோட ஃபேன்ஸ்கிட்ட இருந்து வந்த லெட்டர்ஸ்... எல்லாருக்கும் உன்னைப் பத்தி தெரிஞ்சிக்கிறதுல ரொம்ப ஆர்வம்... இந்த இதெல்லாம் படிச்சுப் பாரு..." என்று அவளிடம் கொடுத்தான்...

"எனக்குப் புரியுது இளங்கோ... ஆனா எனக்கு என்னை தெரியப்படுத்திக்கிறதுல விருப்பம் இல்லை... நீ சொன்னியேன்னு ஒரு ஆர்வத்துல தான் நான் எழுதிக்கிட்டு இருக்கேன்... அப்படியே இருக்கட்டும்..."

"உன்னை நீ ஏன் வெளிப்படுத்திக்க தயங்குறன்னு தான் புரியல... நீ ஆணா.. பெண்ணா.. உன்னோட உண்மையான பேர் என்ன..?? உன்னோட ஏஜ் என்ன..?? இதுமட்டும் தான் எல்லோருக்கும் தெரிஞ்சிக்க நினைப்பாங்க... மத்தப்படி உன்னோட ஹிஸ்ட்ரி, ஜியோகர்ஃபி இதெல்லாம் யாரும் ஆராய மாட்டாங்க புரியுதா..??"

"எனக்கும் புரியுது இளங்கோ... ஆனா யாராவது ஒருத்தர் நீ இப்படியெல்லாம் கதை எழுதிறியே... நீ யோக்கியமானவளா இருக்கியான்னு கேட்டா என்கிட்ட பதில் இல்லை... இல்லைன்னு சொல்றத விட யார்க்கிட்டேயும் என்னைப்பத்தி விளக்கம் கொடுக்க விரும்பல... அதுக்கு தான் நீ கேட்டப்போ எழுத மாட்டேன்னு சொன்னேன்... நீ வற்புறுத்தவே தான் எழுத ஆரம்பிச்சேன்...

என்னோட எழுத்தால சில பேரை சிந்திக்க வைக்கவோ... இல்லை சில பேரோட வாழ்க்கையில நல்ல மாற்றம் வந்தா மட்டும் போதும்... மத்தப்படி பாராட்டோ.. இல்லை புகழோ வேண்டாம்... புரிஞ்சுதா..??"

"இதுல உன்னை கட்டாயப்படுத்த விரும்பல... எது விருப்பமோ அதையே செய்... ஆனா யாருக்காகவும் உன்னை தாழ்த்திக்காத...  கடந்தக் காலத்தை மறக்க முயற்சி பண்ணு... நீ இப்போ தப்பானவ இல்ல... புரியுதா..?? அதை தான் நான் எப்போதும் சொல்லுவேன்.. நீ அதை மனசுல வச்சிக்கிட்டா மட்டும் போதும்..." என்று இளங்கோ சொன்னதுக்கு, கங்காவும் அதை ஆமோதிப்பதாக தலையாட்டினாள்...

சென்னையில் தரையிறங்கிய டெல்லி விமானத்திலிருந்து வெளியே வந்த துஷ்யந்த்... தனது காரை எடுத்துக்கொண்டு கங்கா வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான்..

பார்க்கவோ பேசவோ கூடாதென்று அவள் சொல்லியிருந்தாலும்... வாழ்த்து சொல்வதில் தவறில்லை என்று தான் அவளே போன் செய்து இவனிடம் பேசினாள்... அதற்காக அவளை காண இவன் வீட்டிற்குச் சென்றால், அவள் விரும்பமாட்டாள் தான்... இருந்தும் அவளை பார்க்க வேண்டும் என்று இவன் மனம் ஏங்குகிறது...

வாங்கி வைத்திருக்கும் பரிசுப் பொருட்களை கொடுக்கும்  சாக்கிலாவது இப்போது கங்கா வீட்டுக்குப் போகலாம்... என்ற முடிவோடு தான் காரை செலுத்திக் கொண்டிருந்தான்...

கார் கங்கா வீட்டு வாசலில் வந்து நின்றது... வாசலில் பைக் நிற்பதை பார்த்துக் கொண்டே கேட்டை திறந்தான்... வாசலில் இருந்த செருப்பையும் கவனித்தான்... அதையும் மீறி கங்காவின் சிரிப்பு சத்தம் வாசல் வரை கேட்டது...

அந்த செருப்பை பார்த்தப்படியே கங்காவின் சிரிப்பு சத்தத்தை கேட்ட துஷ்யந்த் உள்ளே செல்லலாமா..?? என்று தயங்கியப்படி வெளியிலேயே நின்றிருந்தான்.

ப்ரண்ட்ஸ் கங்காவோட கதாப்பாத்திரம் என்னோட கற்பனை மட்டும் தான்... அப்புறம் 5 அத்தியாயம் வந்தாச்சு... இன்னும் முக்கிய கதாநாயகன், நாயகி யாருன்னு தெரியலையேன்னு ஒரு குழப்பத்துல இருப்பீங்க... இந்த அத்தியாயத்துக்கு அப்புறம் கெஸ் பண்ணியும் வச்சிருப்பீங்க... உங்களோட கெஸ் என்னன்னு கமெண்ட் செக்ஷன் லயோ.. இல்ல ஃபாரம் லயோ... இல்ல fb லயோ வந்து சொல்லுங்க பார்க்கலாம்... உங்க கெஸ் சரியான்னு அடுத்த அத்தியாயத்துல சொல்ல மாட்டேன்... போக போக தான் தெரியும்... ஓகே நோ கொலவெறி... Be cool

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.