அவர்களின் வரவை பார்த்த மிதுன், உடனே அர்ஜுன்க்கு தகவல் சொல்ல , அர்ஜுனும் அங்கே வந்தான்.
முதலில் அங்கே நடக்கும் விழிப்புணர்வு விஷயங்களை பற்றி மகிமா சொல்லிக் கொண்டு இருக்க, சுபத்ராவும் கவனமாக கேட்டு, சில இடங்களில் தன் கருத்தையும் சொன்னாள். இந்த வேலையில் அர்ஜுனின் வரவை சுபா கவனிக்கவில்லை.
சற்று நேரம் தள்ளி நின்று அவளை பார்த்துக் கொண்டு இருந்தவன், பின்
“மிதுன்.” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தான்.
அவனை பார்த்த சுபத்ரா “ஹலோ.. அர்ஜுன்.. நீங்க எங்கே இங்கே..?”
“ஹாய்.. சுபா.. நானும் போர்டு மெம்பெர் தான்.. அதோடு மிதுனை பார்த்து போகலாம்நு வந்தேன்.. “
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
“அப்போ நீங்களும் வீக்லி வருவீங்களா..?”
“லீவ் லே இருந்தா.. கண்டிப்பா வருவேன்..”
“என்ன ஜி.. சொல்லி இருந்தா நானும் இந்த ரெண்டு வாரம் வேஸ்ட் பண்ணிருக்க மாட்டேன் லே.. “
“நீ லீவ் லே என்ஜாய் பண்ணனும் தான் சொல்லலை. அதோட நீ dutyலே சேர்ந்துட்டா உன் பாமிலியா ரொம்ப மிஸ் பண்ணுவ.. அதான் இப்போ டைம் கிடக்கும்போது உன்னை disturb பண்ண வேண்டாம்னு சொல்லல..”
அப்போது மிதுன் உள்ளே வர “வா அர்ஜுன்.. “
“ஹாய் மிதுன்.. நான் இன்னிக்கு லீவ் முடிஞ்சு ஊருக்கு போறேன் லே.. அதான் எதாவது டிரஸ்ட் விஷயங்கள் discuss பண்ணனுமா...? எதவும் sign போடணுமான்னு கேட்டுட்டு போகலாம்ன்னு வந்தேன்..”
“ஹேய். ஆமாம்.. நானே உன்னை வழி அனுப்ப வரும்போது சில லெட்டர்ஸ் எடுத்துட்டு வரதா இருந்தேன்.. நல்ல வேளை .. நீயே வந்துட்ட.. ஒரு half அன் ஹெர் உட்காரு.. நான் எடுத்துட்டு வரேன்.. “ என்றவாறு,
“மகிமா நீங்க கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணுங்களேன்.. அவன் இங்கே முடிச்சுட்டு வீட்டில் சொல்லிட்டு கிளம்பனும்..” என்று மகிமாவையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
அறையில் சுபத்ரா, அர்ஜுன் இருவர் மட்டுமே இருக்க,
அர்ஜுன் மனதில் சுராவை பிரிய போகும் எண்ணமே அவனை சோர்வடைய செய்தது. சுராவிற்கு ஏனோ இன்று உடல், மனம் இரண்டும் அர்ஜுனோடு தானும் செல்ல வேணும் என்று தோன்றியது..
பின் மெதுவாக “அர்ஜுன்.. இன்றைக்கு கிளம்பரீங்களா?”
“ஆமாம்.. சுபா..” என்று தொண்டையை செருமிக் கொண்டான்.
“குட் லக்.. நல்ல படியா போயிட்டு வாங்க.. “ என்றவள் சிறிது தயங்கி “வந்து .. உங்கள எப்படி காண்டக்ட் பண்றது..?”
அர்ஜுன் மனதிற்குள் மகிழ்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் “உன் மொபைல் நம்பர்க்கு அப்போ அப்போ மெசேஜ் பண்றேன்.. உனக்கு எதாவது கேட்கணும் இல்லை சொல்லணும் நா அதே நம்பர்க்கு மெசேஜ் மட்டும் கொடு.. கொஞ்சம் விரிவா சொல்லணும் என்றால் என்னுடைய மெயில் id இருக்கு இல்லியா.? அதுக்கு மெயில் அனுப்பு.. நானும் உனக்கு பதில் போடுகிறேன்..”
மேலும் சற்று நேரம் பேசி முடிக்கும் போதே, மிதுன் வந்து விட, அவன் கேட்ட விஷயங்களுக்கு பதில் சொல்லி, தேவைப்பட்ட இடங்களில் கையெழுத்தும் போட்டு கொடுத்தான்.
எல்லாம் முடிந்த பின் சொல்லிக் கொண்டு கிளம்பினான்..
ஏனோ சுபத்ராவின் உள்ளம் அர்ஜுனின் பின்னாலே சென்றது. அதை காதல் என்று உணராவிட்டாலும், அர்ஜுன் தன்னை பாதிக்கிறான் என்று உணர ஆரம்பித்தாள் சுபத்ரா. வீட்டிற்கு சென்றவள் தன் தந்தையிடம் அர்ஜுனை பார்த்தது , அவன் ஊருக்கு கிளம்புவது எல்லாம் சொல்லி முடித்தவள் தன் அறைக்கு சென்றாள்.
மனம் சுற்றி சுற்றி அர்ஜுனிடமே வர, மனதை மாற்றுவதற்காக டிவி பார்க்க உட்கார்ந்தாள். நல்ல படமாக பார்க்கலாம் என்றால் எல்லா சேனலிலும் ஒன்று போல் காதல் படங்களாக போட்டுக் கொண்டு இருந்தான். டிவி ஆப் பண்ண போனவள் மியூசிக் சேனலில் போட்ட பாட்டில் அப்படியே நிறுத்தி விட்டு கேட்க ஆரம்பித்தாள்
காண்பதில் எல்லாம் தலைகீழ் தோற்றம்
என்னோடு ஏனோ இத்தனை மாற்றம்
பூமி என்பது தூரம் ஆனதே
நட்சத்திரங்கள் பக்கம் ஆனதே
மனிதர் பேசும் பாஷை மறந்து
பறவைகளோடு பேச தோனுதே
காணும் பிம்பம் கண்ணில் மறைந்து
காணா உருவம் கண்ணில் தோனுதே
அன்பு திருமுகம் தேடி தேடி
கண்கள் என்னை தாண்டி போகுதே
இதற்கு பெயர் தான் காதலா… காதலா….
இதற்கு பெயர் தான் காதலா
இந்த பாட்டு வரிகளில் தன்னை தொலைத்தவள், அர்ஜுனை தேட ஆரம்பித்தாள்.
மழை பொழியும்
{kunena_discuss:1031}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.