(Reading time: 11 - 22 minutes)

வீட்டிற்கு சென்ற சுபத்ராவிற்கு ஏனோ அன்றைய தினம் அர்ஜுன் பாடிய பாடலே காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது. அவன் அவளை அழைத்து பேசும் வரை அவளின் கண்கள் அவனை தவிர வேறு யாரையும் பார்க்க வில்லை. இது புது அனுபவமாக இருந்தது சுபாவிற்கு.

மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்த வருணை பிடித்துக் கொண்ட மகிமா, சுறா இருவரும் அவனிடம் என்ன விஷயம் என்று கேட்க..

“ஹேய்.. வர்ஷாவ எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.. நாங்க போற அந்த டிரஸ்ட் லே தான் அவளை மீட் பண்ணினேன்.. அவ என் லைப் பார்ட்னெர் ஆ வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். கொஞ்சம் கொஞ்சமா அவள்கிட்ட பழகி என் லவ் சொல்லணும்நு நினைச்சேன்.. நேத்து என்னை அறியாமல் வெளிபடுத்திட்டேன்.”

“ஏன் .. சோடாபுட்டி.. இப்படி பண்ணின.. ? அவ படிச்சுட்டு இருக்கா.. அவள போய் divert பண்றியே ? நீ செய்யுறது சரியா..?”

“ச்சே.. அப்படி எல்லாம் அவள disturb பண்ண மாட்டேன்.. நான் அந்த volunteer யோகா ட்ரைனிங் போகும்போது மட்டும் தான் அவளை பார்ப்பேன்.. அப்பவும் ஏதோ பொதுவா வம்பிழுப்பேன் அவ்ளோதான்.. எனக்கும் தெரியும் டா.. நான் இந்த மாஸ்டர்ஸ் முடிக்கணும்.. அதுக்கு அப்புறம் தனியா ஒரு ad agency ஆரம்பிக்கிரவரை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்.. ஓகே வா..?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் பெண்ணின் கதை...

படிக்க தவறாதீர்கள்..

“சரி சரி” என்ற இருவரும் “அது இருக்கட்டும்.. நேத்து என்ன சொன்ன.. ? மூணு வயசுலேர்ந்து ஒண்ணா பழகிட்டு இருக்க என் பர்த்டேக்கு ட்ரீட் கொடுத்தா உன் மாமனார் சொத்து கரைஞ்சிருமா..?” என்று இருவரும் அவனை துரத்தி துரத்தி அடிக்க வந்தனர்.

“ஐயோ.. அப்படி எல்லாம் இல்ல .. அது சும்மா உல்லுல்லாயிக்கு சொன்னது.. தெய்வமே.. உங்கள விட எனக்கு யாரும்மா முக்கியம்..”

 இன்னிக்கு சொல்றேன் கேட்டுக்கோ.. இனிமேல் நாங்க ட்ரீட்ன்னா அந்த ஹோடேல்க்கு தான் போவோம்.. ஒவ்வொரு தடவையும் பில் கொடுக்க மாட்டோம்.. உன் மாமனார் சொத்த எப்படி காப்பத்தறதுன்னு நீயே முடிவு பண்ணிக்கோ “

“அடேய்.. வருண்.. இது உனக்கு தேவையா.. இவளுங்க சாதாரணமா சாப்பிட்டாலே ஒரு மாச பாக்கெட் மணி காலி ஆகும்.. இதுலே பழி வாங்கன்னே சாப்ப்டாங்கான்னா .. ஒரு வருஷ பாக்கெட் மணி கோவிந்தா.. இட்ஸ் ஆல் மை டைம்..”

வழக்கம் போல் சுறா வருண் விஷயமும் தன் அப்பாவிற்கு சொல்ல, அவர் யோசனையாக பார்த்தார்.. அதை கவனித்த சுறா

“என்ன ஆச்சுப்பா ..?”

“இல்லை நீங்க எல்லாம் குழந்தைங்கன்னு நினைச்சோம்.. எப்போ நீங்க வாழ்க்கை பத்தின முடிவு எடுக்கிற அளவிற்கு வளர்ந்துட்டீங்கன்னு யோசிக்கிறேன்..”

“அப்பா.. வருணை தப்பா எடுத்துட்டீங்களா? அவன் நல்லவன் பா.. அந்த பொண்ணு மேலே இருக்கிற interest உண்மையான அன்புதான்.. அதுனாலே யாரும் வருத்தப்படுற மாதிரியான வேலை அவன் செய்ய மாட்டான்.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..”

“எனக்கு அவன பத்தி தெரியும்மா.. அவன் நிச்சயம் வாழ்க்கையில் அவன் கோல் achieve பண்ணாம தன் கவனத்தை சிதற விட மாட்டான். இருந்தாலும் உங்கள நாங்க இன்னும் குழந்தையா நினைச்சுட்டு இருக்கோம்னு இப்போ புரியுது..”

“அப்பா. “ என்று அவள் சிணுங்கினாள்.

“குட்டிம்மா.. நான் கேட்குறேன்னு நினைக்காதே.. உனக்கும் யாரையாவது பிடிச்சு இருக்கா?”

“என்பா... இப்படி கேட்கறீங்க.. ? நான் அந்த மாதிரி எல்லாம் இதுவரைக்கும் யோசிச்சது இல்லை..”

“தெரியும் டா.. இருந்தாலும் நான் கிளியர் செய்துக்க கேட்டேன்.. சரி உன்னோட future பிளான் என்ன..?”

“இப்போதைக்கு போஸ்டிங் லேட்டேர்க்க்காக வெயிட் பண்றேன். அது வந்தவுடனே ஜாயின் பண்ணிட்டு , அந்த பீல்ட் லே நல்ல பேர் வாங்கணும்.. சாதிக்கணும்.. குறைந்த பட்சம் மூணு வருஷமாவது நான் ஹை ரிஸ்க் ஏரியா பகுதிகளில் வேலை செய்யணும். அதுதான் என் mind லே.. அதா achieve பண்ணிட்டு அதுக்கு அப்புறம் நான் future பத்தி யோசிக்கிறேன்.”

“ஹ்ம்ம்.. அதுவும் சரிதான்.. “ என்றவர் வேறு சில விஷயங்களை பேசினார்.

வர்களின் நாட்கள் வேகமாக செல்ல, அர்ஜுன் ராகுல் இருவருக்கும் காஷ்மீர் செல்ல வேண்டிய ஆர்டர் கைக்கு வந்தது..

ராகுல் நிஷாவிடம் போனில் சொல்லி, அவளிடம் நீண்ட நேரம் பேசினான்.. பிறகு நிஷா போஸ்டிங் வந்த பிறகு செய்ய வேண்டியவற்றை சொல்லி கொடுத்து , அவனை தொடர்பு கொள்வது எப்படி என்பதை பற்றி விளக்கினான்.

அர்ஜுன்க்கு ஊருக்கு செல்லும் முன் சுராவை பார்க்க தோன்றியது.. ஆனால் எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தான். அர்ஜுன் சண்டே மதியம் கிளம்பி டெல்லி வரை flight இல் சென்று பின் அங்கிருந்து ஜம்முவிற்கு ட்ரெயினில் செல்வதற்கு புக் செய்து இருந்தான்.

ஞாயிறு காலை டிரஸ்ட் க்கு மகிமா வரும்போது சுராவையும் அழைத்துக் கொண்டு வந்தாள். இனி சுபாவிற்கு எப்போது வேண்டுமானாலும் போஸ்டிங் ஆர்டர் வரும் என்பதால் அதற்கு முன் இந்த அமைப்பு, அவர்களின் செயல்பாடுகள் பற்றி சுபா தெரிந்து கொள்ளட்டும் என்று எண்ணி இருவரும் அங்கே வந்து இருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.