(Reading time: 9 - 18 minutes)

வானம் மெல்ல கருமை படிந்துக் கொண்டிருந்தது..!

ஈரப்பதம் நிறைந்த சில்லென்ற காற்று அந்தக் காலை வேளையிலும் சூரியனை துயில் கொள்ள வைத்து வீசியது.

மேகங்கள் எல்லாம் ஒன்றுக்கூட சமயம் வந்ததும்,வானில் இருந்து துளித்துளியாய் ஜீவன் மண்ணுலகை நோக்க வந்துக் கொண்டிருக்க,ஆட்கள் குறைந்துக் காணப்பட்ட அந்தச் சாலையில் உறுதியாக பதிந்தன அவனது காலடி தடங்கள்!!

இயற்கையின் அந்த அற்புதச் சூழலை  உள்வாங்கியப்படி நடந்தான் அவன்.இதமான தென்றல் காற்று அவன் உள்ளத்தை வருடியப்படி செல்ல,மூச்சை நன்றாக இழுத்துவிட்டான்.கூர்மையான பார்வை!அதில் சர்வ காலமும் நிறைந்திருக்கும் ஒருவித தேடல்!ஆறடி உயரம்!!கட்டான தேகம்!நேர்கொண்ட நெஞ்சம்!அதில் உறைந்திருக்கும் கம்பீரம்!சதா சர்வ காலமும் இதழோரம் மலர்ந்திருக்கும் கவலையில்லா புன்னகை!இவையனைத்தும் அவனை ஆண்களில் தனித்துக் காட்டியது எனலாம்.மெல்ல சாரல் வலுப்பெற்று மழையாய் மாற,அவ்வளவு நேரமும் தன்னை கடினப்பட்டு கட்டுப்படுத்தியவன்,தன் மனக்கட்டுப்பாட்டை தகர்த்தறிந்தான்.ஆள் அரவமில்லாமல் தனித்திருந்த அச்சாலையில் தன்னை பால்ய பருவத்திற்கே அழைத்து செல்லும் சாரல் மழையை இருக்கரம் நீட்டி வரவேற்றான் ருத்ரா!ருத்ர பிரதாப் ராணா!!அவன் எதைக் குறித்தும் சிந்திக்கவில்லை.சிந்திக்கவும் அச்சமயம் அவனுக்கு அவசியமில்லை,தன் மனதிற்கு பிரியமான மித்ரனை அன்போடு வரவேற்றான் அவன்.அவன் தாளத்திற்கேற்ப ராகமாய் பாடியது மழையும்!!இயற்கையாய் உதிக்கும் ஆகாயகங்கையில் தன்னை முழுதாக கரைத்தான் அவன்.நேரம் கடக்க,மழையின் அளவும்  கரைந்தது,அவன் ஆட்டத்தின் அளவும் குறைந்தது!!தனது கை கடிகாரத்தைப் பார்த்தான் ருத்ரா.மணிஒன்பது!!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அலுவலகத்திற்கு நேரமானது!!அரக்கப்பறக்க ஓடிச்சென்று தன் காரில் ஏறினான் அவன்.

ருத்ர பிரதாப் ராணா!!இவனைக் குறித்து ஆராய்ந்துப் பார்த்தால்,தெரிய வருவது எல்லாம் ஒன்றே!!உலகின மிக சாதாரணமான நிகழ்வுகளை எல்லாம் மற்றொரு கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பவன்!!அகிலத்தின் எந்த ஒரு சக்தியாலும் தன் ஆனந்தத்தை பறிக்க இயலாது என்று நம்பிக்கை கொண்டது!!உலகின் அனைத்து ஜீவன்களையும் தனக்கு நிகராக வைத்து மதிப்பவன்!!இயற்கையில் உதித்த அனைத்தையும் காதலிப்பவன்!இது இவனது ஒரு பகுதி!அவன் மனதின் துயர் பகுதியை ஆராய்ந்தால்,தாயினை கருவில் இருந்து பிறந்த உடன் பிரிந்த சோகம்,தந்தையையும் உறவுகளான பாட்டனார்,தந்தையின் தங்கை மற்றும் அவர் கணவரை விபத்தில் பறிக்கொடுத்த சோகம் உயர்ந்துக் காணப்படும்.அவனது வெளிவராமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதி!!ராணா இயல்பாகவே பழி வாங்கும் குணமுடையவன்!!தான் வென்ற சினத்தினை எவரேனும் தூண்டிவிடும் சமயம் எதிர்ப்பவர் எவராயினும் அழித்துவிட்டே மறுவேலை பார்ப்பான்!!இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களுள் ஒருவன் இந்த பிரதாப் ராணா!!

அவசர அவசரமாக வீட்டிற்குள் ஓடியவன்,எதிர் வந்தவளை கவனிக்காமல் மோதினான்.

"எருமை மாடு!கண்ணு தெரியலை உனக்கு?"-முந்திக் கொண்டு திட்டினான் அவன்.

"இடித்தது நீங்க?என்னை திட்டுறீங்க?"

"நான் தான் ஆபிஸ் போற டென்ஷன்ல வரேன்!உனக்கு என்ன?"

"ஆமா!ஒரு மொக்க ஆபிஸ்க்கு இவ்வளவு பில்-டப்!"

"ஏ...யார் ஆபிஸை பார்த்து மொக்கன்னு சொல்ற?ருத்ரா பில்டர்ஸை பார்த்தா,அவனவன் எப்படி நடுங்குவான் தெரியுமா?"

"ஆ..ஊரெல்லாம் அதான் பேச்சு!சும்மா என்கிட்ட வம்பிழுக்காதீங்க!"

"வம்பிழுத்தா என்னடி பண்ணுவ?"

"பாட்டிக்கிட்ட சொல்லிடுவேன்!"

"யார் நீ?பாட்டிக்கிட்ட!"

"ஏன் சொல்ல மாட்டேனா??பாட்டி...இங்கே வந்து மாமாவை பாருங்களேன்!என்கிட்ட வந்து சண்டை போடுறார்!"-உறக்க கத்தியவளின் வாயை பொத்தினான் அவன்.

"அடிப்பாவி...எனக்கு சமாதிக்கட்டவே வருவ போல!ஒழுங்கா பேசாம எனக்கு போய் காப்பி போடு ப்பே...!"-என்றவன் விரைந்து தனதறைக்கு ஓடினான்.அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

"அட இருடா!இப்போ தான் கிளம்பிட்ட இருக்கேன்!அரை மணி நேரத்துல வந்துடுவேன்!"-யாருடனோ போனில் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தான் ருத்ரா.

"வரேன்டா!வரேன்டா!வை!"-அவசரமாக இணைப்பைத் துண்டித்துவிட்டு,அலமாரியில் எதையோ தேடினான்.

"மாமா!மாமா!என்ன பண்றீங்க?"

"வரலாற்று சுவடுகள் எழுதிட்டு இருக்கேன்!"

"ஐயோ!போச்சு!காலையில தான் பாட்டி கஷ்டப்பட்டு அடுக்கினாங்க!"-அவள் கூறியதும் உரைந்துப் போனான் அவன்.

"பாட்டியா அடுக்கினாங்க?

"ம்..."-சில நொடிகள் சிறு குழந்தையை போல் விழித்தவன்,மித்ராவின் கரங்களை பிடித்து,

"செல்லம்!மாமாவுக்கு ஒரு ஹெல்ப் பண்றீயாடி?"என்றான்.

"என்ன?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.