(Reading time: 9 - 18 minutes)

வ பேரு வெறும் ஜானவி தான?... நீ தேவின்னு சேர்த்து சொல்லுற…”

“ஜானவி தான்… ஆனா இந்த நேரத்துல அவளை தேவின்னு தான் சொல்ல தோணுச்சு… இவன் லவ் பண்ணுறது கண்டிப்பா அவளுக்கு தெரியாம இருக்காது… அதான் அவளுக்கு போன் பண்ணினேன்… அவ எடுக்க மாட்டிக்குறா….”

“சரி விடு… முதல்ல கிளம்பலாம்… அப்புறம் அவ கிட்ட நிதானமா கேட்டுக்கலாம்…”

திலீப்பின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவளாய் அவள் கிளம்பச் சென்றாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா Vயின் "உன் நேசமதே.. என் சுவாசமாய்..!!" - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

தே நேரம், இங்கே ஜானவியின் வீட்டில், தன் மடியில் விழி மூடி எந்த அசைவும் இல்லாது கிடந்தவளைப் பார்த்து கதறினான் அர்னவ்….

அவனது சத்தம் கேட்டு, ஜானவியின் பெற்றோர் வர, அவர்களுக்கு பகீர் என்றது மகளின் நிலையைக் கண்டதும்…

அதற்கு மேலும் தாமதிக்காது, அவளைத் தன் கைகளில் ஏந்தியவன், உறைந்து நின்றிருந்த அவளது பெற்றோர்களையும் அழைத்துக்கொண்டு, மருத்துவமனைக்கு விரைந்தான்…

அவள் மட்டும் உள்ளே அழைத்துச் செல்லப்பட, அவள் அனுமதிக்கப்பட்ட அறையின் வாசலில் நின்று அந்த கண்ணாடிக் கதவின் வழியே அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான் அவன் தவிப்போடு…

“என்னாச்சு தம்பி என் பொண்ணுக்கு?...”

பதறியபடி கேட்ட ஜானவியின் தந்தைக்கு ஆறுதல் சொன்னவன், அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டான் ஆதரவாய்…

ஓரமாய் ஒதுங்கி நின்று அழுது கொண்டிருந்த ஜானவியின் அம்மாவை கவனித்தவன்,

“அத்தை… ப்ளீஸ்… அழாதீங்க… கண்டிப்பா அவ கண் முழிச்சிடுவா… நம்பிக்கையோடு இருங்க அத்தை… நம்ம ஜானவி நம்மளுக்கு திரும்ப கிடைச்சிடுவா அத்தை அதுவும் பத்திரமா…”

அவர்களுக்கு தைரியமூட்டி பேசியவன், அவள் இருந்த அறைக்கதவிற்கு அருகே சென்று தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டான் வேகமாய், அவர்கள் பார்த்திடக்கூடாது என்று…

ஜானவியின் அப்பா அதனை கவனிக்க தவறவில்லை கொஞ்சமும்…

“கடவுளே… எப்படியாவது இவங்க இரண்டு பேரையும் சேர்த்து வச்சிடுப்பா… என் பொண்ணை எங்ககிட்ட இருந்து பிரிச்சிடாதப்பா…”

அவர் தன் கண்களை மூடி சில நிமிடம் வேண்டிக்கொண்டார்… பின், மெல்ல அர்னவினை நோக்கிச் சென்றார்…

தன் தோளில் ஒரு கரம் விழுகவும், அவன் சட்டென தன் கண்களில் வழிந்து கொண்டிருக்கும் நீரை துடைத்து எடுத்துவிட்டு, வேகமாய் திரும்ப,

அவனின் நிலையை உணர்ந்தே இருந்தார் அவர்…

“சொல்லுங்க மாமா… எதும் வேணுமா?...”

அவன் அக்கறையாய் வினவ,

“நீங்களும் என் பொண்ணும் சந்தோஷமா வாழணும் மாப்பிள்ளை… அதுதான் எனக்கு வேணும்….”

அவர் நா தழுதழுக்க சொல்ல, அவன் கண்களிலிருந்து நீர் வழிந்து அவன் கன்னம் தொட்டது வேகமாய்…

அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் தன் கண்களையும் துடைத்துக்கொள்ளாமல் நிற்க, அவனை ஆதரவாய் அணைத்துக்கொண்டார் ஜானவியின் தந்தை…

“கவலைப்படாதீங்க மாப்பிள்ளை… உங்க ஜானவி திரும்பி உங்ககிட்டயே வருவா… கண்டிப்பா வருவா…” அவர் உளமாற கூற,

“மாமா…….” என்ற வார்த்தைகள் அவனின் தொண்டைக்குள்ளேயே சிக்கி தவித்தது வேகமாய்…

அந்த நேரம் அர்னவின் செல்போன் ஒலி எழுப்ப, அவரிடமிருந்து விலகியவன், யாரென்று எடுத்துப் பார்த்தான்…

தன் கையிலிருந்த செல்போனையே அவன் பார்த்திருக்க,

“யாரு மாப்பிள்ளை?... எடுத்து பேசுங்க….” என்றார் ஜானவியின் தந்தை…

“இல்ல மாமா… வீட்டுல இருந்து தான் போன்….”

அவன் திக்கித் திணறி சொல்ல, அவனின் நிலை அறிந்தவனாய்,

“பேசுங்க… மாப்பிள்ளை… எப்படி இருந்தாலும் அவங்களுக்கு தகவல் சொல்லத்தானே வேணும்…”

“சரி மாமா…” என்றவன், போனை எடுத்து தன் காதுக்கு கொடுத்த மறுநொடியே, அவனை சரமாரியாக திட்டி தீர்த்தாள் சரயூ…

“ஏண்டா எருமைமாடே… போன் பண்ணினா எடுக்கமாட்டீயா?... எத்தனை தடவைடா போன் பண்ணுறது உனக்கு?... எங்கடா இருக்குற?... வீட்டுல யாரையும் காணோம் இங்க பொண்ணு வீட்டுல…”

அவள் கோபமாக கேட்க, “சிஸ்… அது….” என்று இழுத்தான் அவன் கலங்கியபடி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.