(Reading time: 9 - 18 minutes)

35. புத்தம் புது காலை - மீரா ராம்

putham puthu kaalai

ம்மா… நானும் வந்ததிலிருந்து கேட்டுட்டிருக்கேன்… நீங்க எதுவுமே சொல்லமாட்டிக்குறீங்க?...”

“கொஞ்ச நேரம் பொறுத்துக்கோயேண்டி… அதுக்குள்ள உனக்கு என்ன அவசரமாம்?...”

தன்னிடம் கேள்வி கேட்ட மகளிடம் சற்றே அலுத்துக்கொண்டே பதில் கூறினார் வாசந்தி…

“அதுசரி… நீங்க ஏன் சொல்லமாட்டீங்க?... தம்பிக்கு நாளைக்கு பொண்ணு பார்க்கப் போறோம்… நீ உடனே கிளம்பி வான்னு சொல்லிட்டீங்க… கடைசியில நான் அவசரம் அவசரமா வந்து நின்னா, நீங்க எங்கிட்ட சொல்ல அலுத்துக்குறீங்க… இல்ல?...”

சரயூ கொஞ்சம் காட்டமாக கேட்க, அவளைப் பார்த்து சிரித்த வாசந்தி,

“நான் என்னடி பண்ணட்டும்?... உன் தம்பி கட்டுனா அந்த பொண்ணை தான் கட்டுவேன்னு சொல்லிட்டான்… அதும் இல்லாம உன் அப்பாவும் என்னைக்கும் இல்லா திருநாளா, அவன் சொன்னதும், வாதாடாம வைக்காம, சரின்னு வேற சொல்லிட்டார்… இது போதாதா?.. அவனுக்கு?... உடனே பொண்ணு பார்க்க போணும்… அதுவும் நாளைக்கேப் போகணும்னு சொல்லிட்டான்… உன்னையும் முடிஞ்சா கிளம்பி வர சொன்னான்… நானும் அதான் உன்னை சீக்கிரம் வர சொன்னேன்… நீயும் வந்து சேர்ந்துட்ட…”

“ஹ்ம்ம்… இவ்வளவு திட்டமெல்லாம் போட்டிருக்கீங்க… எல்லாம் சரிதான்… ஆனா பொண்ணு யாருன்னு எனக்கு இன்னும் சொல்லலையே நீங்க?...”

“அதை நீ உன் தம்பிகிட்ட தான் கேட்கணும்… அவங்கிட்டயே போய் கேட்டுக்கோ…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“அந்த பக்கிக்கு போன் போட்டா தான் எடுத்து தொலையமாட்டிக்கிறானே… வரட்டும்… பேசிக்கிறேன்… அவனை…”

“அவன் எங்க இங்க வரப்போறான்?... நாம தான் அவன் இருக்குற இடத்துக்கு கிளம்பணும்…”

“என்னம்மா சொல்லுறீங்க?... அவன் இருக்குற இடமா?...”

“ஆமாடி… அவன் பொண்ணு பார்க்க இப்போதான் கிளம்பி வெளியே போறான்… நீயும், மாப்பிள்ளையும் வீட்டுக்குள்ள வர்றீங்க…. பின்ன நான் என்ன பண்ணுறது சொல்லு?...”

“அதுசரி… ஆளுக்கு முன்னாடி போய் பஜ்ஜி சொஜ்ஜியை காலி பண்ணனும்னு கிளம்பிட்டான் போல….”

“அவன் காதுக்கு மட்டும் கேட்டுச்சு நீ பேசுனது… உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவான்… பார்த்துக்கோ…”

“யாரு அவன் தான?... அவனுக்கு அங்க போய் வச்சிக்கிறேன் கச்சேரி…”

“சரி சரி… உன் க்ச்சேரியை அப்புறமா வச்சிக்கோ… இப்போ போய் கிளம்பு… நானும் போய் ரெடி ஆகுறேன்… இப்ப உன் அப்பாவும் வந்துடுவாரு… மாப்பிள்ளை ரெடி ஆகிட்டாரான்னு பாரு… போ…”

மகளை அவரசமாய் விரட்டி அனுப்பினார் வாசந்தி….

முணுமுணுத்துக்கொண்டே தனதறைக்கு வந்தாள் சரயூ…

மனைவி யோசனையுடன் உள்ளே வருவதைக் கண்ட திலீப்,

“என்ன சரயூ… என்னாச்சு?...” என வினவினான்…

“ஒன்னுமில்லங்க…”

“இல்ல எதுவோ இருக்கு… உன் முகமே சரி இல்லையே…”

“இல்லங்க… இத்தனை நாளா அவன் எங்கிட்ட இதைப் பத்தி சொல்லவே இல்லங்க….”

“எதைப்பத்தி?....”

“அதான் அவன் லவ் பண்ணுற பொண்ணு பத்தி….”

“ஹ்ம்ம்… அவனுக்கு என்ன பிரச்சினையோ… அதையும் யோசிக்கணும்ல…”

“என்ன பெரிய புடலங்காய் பிரச்சினை?... அவன் கிட்ட நான் கேட்காம விடமாட்டேன்.. கண்டிப்பா…”

“சரி கேட்கலாம்… முதல்ல போய் கிளம்பு…”

“இருங்க… கிளம்புறதுக்கு முன்னாடி இன்னொரு வேலை இருக்கு….” என்றவள், வேக வேகமாக போனை எடுத்து யாருக்கோ போன் செய்தாள்…

மறுமுனை எடுக்கப்படாமல் போகவே, “சே….” என்ற சலிப்புடன் கட்டிலில் அமர்ந்தவளின் அருகே வந்தவன்,

“என்னாச்சு சரயூ?... ஏன் அப்செட் ஆகிட்ட?...”

“ஒன்னுமில்லங்க… போன் பண்ணேன்… எடுக்கலை… அதான்…”

“யாருக்கு பண்ணுன?.. அர்னவுக்கா?...”

“அந்த பக்கிக்கு நான் ஏன் பண்ணனும்?... இது இன்னொரு ஆளுக்கு…”

“ஹாஹா… அது யாரு?...”

“வேற யாரு… எல்லாம் நம்ம ஜானவி தேவி தான்…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.