(Reading time: 9 - 18 minutes)

வன் குரலில் இருந்த கலக்கம், அவளை பதற செய்ய,

“தம்பி என்னாச்சுடா?... எங்க இருக்குற?...” என்றாள் உடனேயே….

“சிஸ்… ஜானு….. ஜானு…..”

“ஜானுக்கு என்னடா?... நீ இப்போ எங்க இருக்குற?...”

அவளின் குரலில் பதட்டம் அதிகரிக்க, அவன் சொல்லத் தடுமாறினான்…

அவனின் தடுமாற்றத்தை கவனித்த ஜானவியின் தந்தை, தன்னை திடப்படுத்திக்கொண்டு, அவனிடமிருந்து போனை வாங்கி பேச ஆரம்பித்தார்….

“நான் ஜானவியோட அப்பா பேசுறேன்மா… ஜானவி இங்க….. ஹாஸ்பிட்டல்ல…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

அவன் மென்று முழுங்க,

“என்னாச்சுப்பா?... அவளுக்கு என்னாச்சு?...”

சரயூ உச்சக்கட்ட பதட்டத்தில் இருந்தாள் அங்கே…

“அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லைம்மா… ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்கோம்…”

“அய்யோ… என்னப்பா சொல்லுறீங்க?... என்னாச்சு உடம்புக்கு?...”

“அப்பா இருந்தா போனை கொடும்மா.. கொஞ்சம்….”

அவள் தன் அப்பாவிடம் பொம்மை போல போனை கொடுக்க,

“மன்னிச்சிடுங்க சம்மந்தி… என் பொண்ணும் நாங்களும் இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்குறோம்… அவ தற்……கொ…..லை…..க்கு முயற்சி பண்ணிட்டா…”

அவர் கஷ்டப்பட்டு வார்த்தைகளை சேகரித்து சொல்ல,

“என்ன சம்மந்தி சொல்லுறீங்க?... இப்போ என் மருமக எப்படி இருக்குறா?...”

“டாக்டர் பார்த்துட்டு இருக்குறாங்க சம்பந்தி… எதுவும் சொல்லமாட்டிக்குறாங்க…”

“நீங்க இருங்க சம்பந்தி… நாங்க உடனே கிளம்பி வரோம்…”

“இல்ல சம்பந்தி வேண்டாம்… மாப்பிள்ளை தான் எங்க கூட இருக்குறாரே… அது போதும்…”

“நீங்க வைங்க சம்பந்தி… இன்னும் பத்து நிமிஷத்துல நாங்க அங்க இருப்போம்…” என்றவர், மனைவியிடமும், மகளிடமும் தகவல் சொல்ல, சரயூவோ தட்டென்று அமர்ந்தாள் சோபாவில்…

“சரயூ… ஹேய்….” என்ற கூக்குரலோடு திலீப் அவளின் அருகில் செல்ல,

“கார்த்திக், ஜானவியை தாங்க லவ் பண்ணியிருக்குறான்… அவன் தான் பொண்ணுப் பார்க்க வரான்னு தெரியாம, இந்த முட்டாள் பொண்ணு தற்கொலை பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க….”

அவள் அழுகையோடு கூற, திலீப்போ அதிர்ந்து போனவனாய் நின்றிருந்தான்…

“அர்னவ் ஜானவியையா விரும்புறான்?...”

“ஆமாங்க… அவளும் விரும்பியிருக்கா… இரண்டு பேரும் மறைச்சிருக்காங்க….”

“சரி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்… வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம்…”

திலீப் சொல்வதே சரி என்று பட, உடனேயே அங்கிருந்து புறப்பட்டனர் அவர்கள் அனைவரும்…

ருத்துவமனையில், விழி மூடி கதவோரம் சாய்ந்து நின்றவனின் காலை யாரோ தீண்டுவது போல் இருக்க, விழி திறந்தவனின் பார்வையில் பட்டாள் பிரேமிதா…

“மாமா…….”

“பிரேமி….. நீ இங்க எப்படி?....”

அவன் சற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளுக்கு சமமாக தரையில் மண்டியிட,

“ஏன் மாமா உன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு?....” என அவன் கண்களைத்துடைத்தபடியே கேட்டாள் அவள்…

“அதெல்லாம் ஒன்னுமில்லடா… தூசி… விழுந்துட்டு… அதான்…”

“பொய் சொல்லாத மாமா…”

“நிஜமாடா…”

“என் மேல ப்ராமிஸாவா?...”

அவன் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்க,

“எனக்கு தெரியும் மாமா… நீ ஏன் அழறன்னு?...”

“……………”

“ஜானு அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு தான அழற?...”

அவள் கேட்டதும், அவன் கண்கள் மீண்டும் கலங்க ஆரம்பித்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.