(Reading time: 13 - 26 minutes)

ங்கிட்ட தான கேட்குறேன்… பதில் சொல்லுடா…”

அவள் கிட்டத்தட்ட மிரட்ட, அவளை சமாதானப்படுத்தினார் வாசந்தி…

“ஹேய்… விடுடி… அதுதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிட்டே… இன்னும் எதுக்கு அவனைப் போட்டு பாடா படுத்துற?... பாவம்டி அவன்…”

“பாருடா… மகனுக்கு சப்போர்ட்டா?... எல்லாம் நேரம் தான்….”

“சரி சரி உங்க சண்டையை அப்புறம் போட்டுக்கலாம்… முதல்ல போய் என் மருமகளைப் பார்க்கலாம்… வாங்க…”

அர்னவின் தந்தை கூற, அதுவே சரி என அனைவருக்கும் தோன்ற, அனைவரும் உள்ளே சென்றனர் அர்னவினைத் தவிர…

சரயூவும் அவள் பெற்றோரும் உள்ளே வர, அவர்களைப் பார்த்துவிட்டு ஜானவியின் பெற்றோர் வாங்க என்று கூற,

படுத்திருந்த ஜானவியோ எழுந்து கொள்ள முயற்சித்தாள்…

“எழுந்துக்காதம்மா…” என்றபடி அவளின் அருகில் வேகமாக வந்து அவளை எழுந்திருக்க விடாமல் தடுத்தார் வாசந்தி…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அவளின் தலையினை பாசத்துடன் வருடிக்கொடுத்தவர்,

“இப்படியாம்மா முடிவெடுப்ப… எதையும் தைரியமா எதிர்கொள்ள வேண்டாமா?... பொண்ணாப் பொறந்தவளுக்கு மனதைரியம் எப்பவும் அதிகமா வேணும்மா… சட்டு புட்டுன்னு இப்படி எல்லாம் விபரீதமா முடிவெடுக்க கூடாது… ஆனா உன்னோட இந்த முடிவுக்கு என் பையனும் ஒரு காரணம்… அவன் சார்பா நான் மன்னி….”

அவர் சொல்லிக்கூட முடிக்கவில்லை… அவரின் கைகளைப் பட்டென்று பிடித்துக்கொண்டாள் ஜானவி…

“என்னம்மா இது?... நீங்க போய் எங்கிட்ட?...… அவர் மேலயும் எந்த தப்பும் இல்லம்மா… நீங்க சொன்ன மாதிரி தைரியமாதான் நான் இருந்தேன்… என்னைக்காவது அவர் என்னை ஏத்துப்பார்ன்னு… ஆனா…. என் நம்பிக்கையும் ஒரு கட்டத்துல உடைஞ்சு போச்சு…. இனியும் அவரோட வாழ எனக்கு விதி இல்லன்னு என் விதியை நான் தேடிக்கிட்டேன்… என்னை மன்னிச்சிடுங்கம்மா…” 

அவள் அழுகையோடு கூற,

“சரி விடும்மா… நடந்தது நடந்து போச்சு… நீயும் நல்லா ஆகிட்ட… இனி நடக்கப்போறது நல்லதாவே நடக்கட்டும்… சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வந்துடு… சரியா?....”

அவர் சிரித்துக்கொண்டே கூற, அவளின் முகத்திலும் புன்னகை சற்றே வெட்கத்துடன்…

“வாழ்க்கையில எந்த பிரச்சினையா இருந்தாலும் தற்கொலை முடிவு கிடையாதும்மா… வாழ்க்கையே வாழுறதுக்கு தான்… அதை போய் முடிச்சுக்கணும்னு நினைச்சா அதுல அர்த்தமே இல்லையேம்மா…”

வாசந்தியின் கணவர் ஜானவியினைப் பார்த்துக்கூற,

“இப்போ புரியுதுப்பா… இனி இதுபோல ஒரு முடிவை எடுக்க மாட்டேன்….. மன்னிச்சிடுங்கப்பா….”

அவள் மன்னிப்பை வேண்டினாள் அவரிடம்…

“அடடா… போதும்… நீங்க வேற… அவளே இப்போதான் சிரிச்சா… மறுபடியும் அழ வச்சிடுவீங்க போலயே….”

கணவரிடம் சற்றே அவர் கோபப்பட, அவரோ சிரித்தார்…

“அப்புறம் என்ன சம்மந்தி… சீக்கிரம் ஒரு நல்ல நாளா பார்த்துட வேண்டியது தான?...”

அர்னவின் தந்தை ஜானவியின் தந்தையிடம் கூற,

“வாங்க சம்மந்தி… இன்னைக்கே போய் நாளைக் குறிச்சிட்டு வந்துடலாம்…” என்றார் ஜானவியின் தந்தை…

“வாங்க மாப்பிள்ளை… போகலாம்…” என தன் மருமகனான திலீப்பையும் அவர் உடன் அழைக்க,

அப்போது தான் சரயூவையும் திலீப்பையும் கவனித்த ஜானவி,

“அக்கா….” என அழைக்க,

“சரி… நீ ரெஸ்ட் எடு… நான் அப்புறம் வரேன்…” என்றபடி தன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வேகமாக வெளியே செல்ல,

“வெளியே அர்னவ் கிட்டயும் இப்படித்தான் கோப்பட்டா… இப்போ உங்கிட்ட அதை காட்ட முடியாம இரண்டு வார்த்தை பேசிட்டு போறாளாம்… அவ கிடக்குறா… கொஞ்ச நேரம் தான் அவ கோபம் எல்லாம்… நீ எதுவும் நினைச்சிக்காத சரியா?...”

“ம்ம் சரிம்மா….”

அவள் அவர்களை அம்மா, அப்பா என்றே அழைக்க,

“அத்தை, மாமா சொல்லும்மா…” என்றார் ஜானவியின் அம்மா…

“இதுல என்ன இருக்கு… அவ எங்களை எப்படின்னாலும் கூப்பிடட்டும்… சரயூவை நாங்க கட்டிக்கொடுத்துட்டோம்… அவளும் வேற ஊருக்கு போயிட்டா… மக வேற மருமக வேற கிடையாது… அவ அப்பா, அம்மான்னே கூப்பிடட்டும்… எங்களுக்கும் அதுதான் பிடிச்சிருக்கு…”

என்றார் அர்னவின் தந்தை பெருமையுடன்…

மனம் பூரித்து போனவர்களாக ஜானவியின் பெற்றோர்கள் இருக்க, அவர்களின் முகத்தில் ஒரு நிறைவான புன்னகை இருந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.