“ம்ம்… நீங்க எப்படி அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கினீங்கன்னு சொல்லுங்க… அப்புறம் சொல்லுறேன்….”
“அதெப்படி சொல்லாம போவேன்?... கண்டிப்பா சொல்லுவேன்…. ஆனா அது இப்போ இல்ல… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு… அதனால நீ இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி தான் ஆகணும்… சரியா சகி?...”
“ம்ம்… கொஞ்ச நாள்னா எவ்வளவு நாள்?..”
“அது தெரியலை… பட் கொஞ்ச நாள்… இப்போதைக்கு இவ்வளவு தான் என்னாலயும் சொல்ல முடியும்…”
“ப்ளீஸ்… கார்த்தி… சொல்லுங்க… அதுவரை வெயிட் பண்ணமாட்டேன் நான்….”
“ப்ளீஸ் சகி… இப்படி எல்லாம் சிணுங்காத… அப்புறம் என்னால வெயிட் பண்ண முடியாம போயிடும்…”
அவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் உணராதவளாய் அவள் அவனைப் பார்த்து விழிக்க,
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
“ரொம்ப யோசிக்காத… விடு…” என்றான் அவன்…
“வெயிட் பண்ண முடியலைல்ல… அப்போ சொல்லுங்க… எங்கிட்ட… ப்ளீஸ்…. கார்த்தி… ப்ளீஸ்… என் செல்லம்ல… சொல்லுங்க….”
அவள் கெஞ்சல் பாதி, கொஞ்சல் பாதியுமாக கேட்க, தன் நெஞ்சில் வைத்திருந்த அவளது கரங்களை தன்னிடமிருந்து விடுவித்தவன்,
இனியும் இங்கிருந்தால் ஒருவேளை தன்னிலை இழந்தாலும் இழந்து விடுவோம் என்று தோன்றிட,
“நீ என் செல்ல சகில்ல… நான் சொன்ன கேட்பதான?...” என்று அவன் கேட்க
அவனின் அந்த செல்லமான வார்த்தைகளில் அவள் உருகிப்போனாள்…
“ம்ம்ம்… என் கார்த்தி சொன்னா கேட்பேன்….”
“குட்… அப்போ கொஞ்ச நாள் வெயிட் பண்ணு சரியா?...”
“ம்ம்… சரி… கார்த்தி….”
அவளும் சரி என சம்மதம் சொல்ல,
“சரிடா… நீ ரெஸ்ட் எடு… நான் அப்புறம் வரேன்… வந்து ரொம்ப நேரம் ஆச்சு….” என்றதும், அவள் சிரித்தாள்….
அவனும் பதிலுக்கு சிரித்துக்கொண்டே சென்று, அறைக்கதவை திறந்த போது
“கார்த்தி……………” என அவனை அழைத்தாள் அவள்…
அவன் சட்டென அவளின் அருகே விரைந்து வந்து,
“என்னடா… எதும் பண்ணுதா?... டாக்டரை வர சொல்லட்டாம்மா?...”
அக்கறையும் பரிதவிப்புமாய் கேட்க,
“லூசுப்பையா…” என்றாள் அவள் அவனைப் பார்த்து…
சற்று நேரம் கழித்து அவனுக்கு புரியவர, அவள் மனதார புன்னகைக்க,
“இத சொல்லதான் கூப்பிட்டேன்…” என்றாள் அவளும் புன்னகைமாறாமல்…
“லூசு….” என செல்லமாக அவளை திட்டியவன், அவளை படுக்க சொல்லிவிட்டு, வாசலை நோக்கி நடந்தான்…
கதவைத் திறந்து வெளியேறும் முன், கொஞ்சம் நின்று அவளைப் பார்த்திட, அவளும் அவனைதான் பார்த்திருந்தாள்….
எப்படி இருக்கு இந்த வார எபிசோட்….
படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை தெரிவியுங்கள்…
சொல்ல மறந்துட்டேன் பார்த்தீங்களா?.. அடுத்த வாரம் நம்ம கார்த்தி-ஜானவியின் கல்யாணம்... மறக்காம வந்துடுங்க எல்லாரும்… சரியா?...
ம்ம்… மீண்டும் அடுத்த வார புத்தம் புது காலை இறுதி அத்தியாயத்தில் சந்திக்கலாம்…
அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெறும்!
{kunena_discuss:995}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.