ஒன்றும் இரண்டும் - எண் தான் ஆனால்..
இரண்டும் ஒன்றாய் பதித்து விடு ஓர் எழுத்தில்...
ஒன்றே ஒன்று - எண் தான் ஆனால்..
ஒன்றென பதித்து விடு எழுத்தில்!
எண்ணிக்கை - ஒரு கையால் எண்ணி விட்டே
இரு முறை பதித்து விடு எழுத்தில்!!
எழுத்தெல்லாம் அன்னியம் தான்...
தேர்ந்து தெளிந்து கோர்த்து விடு - விடையில்!!!
நின் விடை - என் கொடை!
படித்து முடிக்கும் முன்னே கணித்து விட்டான்...
‘12 for K 1 for I, 55 for SS, K I S S!!!!! ’, என்று...
விடை எது கொடை எது வென்று அறிந்தவன் கண்கள் பளிச்சிட.... முகம் மொத்தமும் மலர்ந்தது! மனம் இன்னும் அந்த எழுத்துக்களில் களைந்து கிடைக்க....
முடிவில் கொட்டை எழுத்தில் செதுக்கப்பட்ட பப்பியில் இருந்த ‘ப’ பள்ளங்களில் தன் உயிரை புதைந்து அவளுடன் கலந்து விட முனையும் பொழுது யாரோ வரும் அரவம்!!!
திடுக்கிட்டு வெடுக்கென்று கடிதத்தை பின்னுக்கு இழுத்து எழுந்தமர்ந்தவன் முன் வேலையாள்! டீ எடுத்து வந்திருந்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
‘ஓபன் ஆபிஸ், ஓபன் டோர் பாலிசி எல்லாம் கொண்டு வந்தது பெரிய தப்பு போலவே!’
எண்ணிக் கொண்டே அவன் கொடுத்து சென்ற டீயை எடுத்து பருகியவனின் பார்வை மீண்டும் ஒரு முறை காதலுடன் பதிந்தது கடிதத்தில்!
‘இப்படி ஒரு பஸில் கொடுத்து என்னை டீனேஜர் மாதிரி எல்லாம் பிகேவ் பண்ண விடுறே! நின் விடை என் கொடையா??? டாக்டரை பார்த்த பிறகு உனக்கு இருக்கு!’, என்றவன் முகத்தில் குறும்புன்னகை!!
அதற்குள் மூளை அலாரம் அடித்தது! அஞ்சனாவை எண்ணி!!!
‘ஹாஸ்பிட்டலுக்கு போகுறதுக்கு முன்னாலே முதல்ல வீட்டுக்கு போகணும்! அஞ்சனாவை வேற சமாளிக்கணும்! இதெல்லாம் யோசி முதல்ல! அவளை எப்படி.... என்ன சொல்லி சமாளிக்க போறே!,
நிதர்சனம் உணர்ந்தவன், அதன் பின் நிதானிக்கவில்லை! பட படவென்று தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பி பார்க்கிங் லாட்டிற்கு சென்றவனின் வேகத்தை தடை செய்தது அங்கு நின்ற பாலாஜியின் கார்!
‘இவன் எங்கே இங்கே?’, யோசித்தவனுக்கு பாலாஜியின் அண்ணன் ஆதி டீ எக்ஸ்போர்ட்டர்ஸ் கான்ஃபிரன்ஸ் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது!
சில நிமிடங்களுக்கு முன்பாக தான் பாலாஜி அங்கே வந்திருந்தான். கையில் இருந்த ஸ்ருதியின் அடையாள அட்டையை ஸ்வைப் செய்து எளிதாக உள்ளே நுழைந்து.. காஃபடேரிவிற்கு வர...
அவன் அங்கு வருவதற்கு முன்பே ஸ்ருதி அங்கிருந்தாள். வாசலையே ஒரு வித பயத்தோடு பார்த்திருந்தவள்...
பாலாஜியின் தலை தெரிந்ததும்....
‘இவனா ஹர்ஷ்?!!!!!’, மலங்க மலங்க பார்த்தாள்,
அலைபேசியில் பதிவிறக்கம் செய்த ஹர்ஷ் படத்தை ஒரு முறை பார்த்து விட்டு மீண்டும் அவனை உற்று நோக்கினாள்.
‘ஒரு வேளை, சும்மா காஃபடேரியாவிற்கு வந்தவனா...’, என்று வேறு ஐயம் வர, அவனோ இவள் மீதே கண்ணாக இவளை நோக்கி வர...
‘ஹர்ஷ்ன்னு சொல்லிட்டு நம்மளை பார்க்க வந்த வேற யாரோ!!!!’
ஆராய்ச்சியுடன் நோட்டமிட்டதில்... அவன் இவன் இல்லை என்றாலும்.. ஏதோ தொடர்பு இருக்கும் என்று உள் மனது சொன்னது! அஞ்சனாவை சொன்னதும் அவன் பேச்சில் உண்மையான உரிமையான கோபம் இருந்ததை சர்வ நிச்சயமாக உணர்ந்தது மனது மட்டுமல்ல.. அவள் மூளையும் தான்.
ஸ்ருதியின் அடையாள அட்டை தன்னை இம்சிப்பது தாளாமல், அதை வாங்க வரச் சொல்லி தான் அவளை அலுவலக எண்ணில் அழைத்ததே! ஒட்டு கேட்பதில் அஞ்சனாவிற்கே குருவாயிற்றே இவன்!
ஸ்ருதி பேசுவது காதில் விழவும்... அஞ்சனாவை பற்றி தவறாக பேசுகிறாளோ என்ற கோபம் எழுந்தது முதலில்!!
பின் அவள் மீது அக்கறை பட்டு பேசுகிறாள் என்றதும் இளகி....
இவன் மிரட்டலில் பயந்து ஹர்ஷ் என்று தவறாக புரிந்ததை ரசித்து....
காஃபி கடைக்கு வரமுடியாது என்பதை இவனது மரியாதையையோ இல்லை அவளது மரியாதையையோ குறைத்துக் கொள்ளாமல் நாசூக்காக வெளிபடுத்திய பாங்கில் பிரமித்து...
போட்டோவில் பார்த்தது... போனில் பேசியது போதவில்லை அவனுக்கு! இந்த பெண்ணை நேரில் பார்த்து பேசியே ஆக வேண்டும் என்ற முடிவோடி தேடி வர தன்னை மலங்க மலங்க பார்த்த அந்த விழிகள் அவனை மொத்தமாக உள்வாங்கியது!!!
‘போட்டோல தான் லுக் விட்டானா.. நேர்ல கண்ணை விட்டு வெளியே ஓடி வந்திடும் போலவே முழி!’
ஏதோ மெஸ்மரிசம் ஆனவன் போல அவளை நோக்கி நடந்தான்.