(Reading time: 17 - 34 minutes)

த்தினிக் டேவில் கோகிலாவை இமை அசையாத பார்த்த ஆர்யமனின் காட்சி இவள் கண்ணில் தான் பட வேண்டுமா? அது கூட அவன் இளைஞன் என்று விட்டு விடலாம்...

ஆனால், கரம் பிடித்தவளை ஊரில் விட்டு விட்டு... காரிருளில்  கோகிலாவை அணைத்து படி சென்ற காட்சி!  இருந்து இருந்தும் என் கண்ணில் தான் பட்டுத் தொலைக்கணுமா?

‘தப்பு பண்ணிட்டேன்! அதை அஞ்சுகிட்ட நான் சொல்லாம இருந்திருக்கணும்! அதை சொல்ல போய் தானே இவன் சாயம் வெளுக்குதுன்னு என்னை அவகிட்ட இருந்து டோட்டலா கட் பண்ணிட்டான்!’

குமுறியது நெஞ்சம்!

‘அஞ்சு நீ சரியான பக்கி! என்னாலே யாருக்கும் கஷ்டம் வேண்டாம்ன்னு அந்த பரணி பண்ண விஷயத்தையே மறைச்சு அப்படியே கல்யாணத்துக்கு உட்காரலாம்ன்னு நினைச்சவ  தானே நீ!’

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

‘இவனை பத்தி தெரிஞ்சாலும் என்ன செய்யப் போறே?  உள்ளுக்குளே உடைஞ்சுகிட்டு யார்கிட்டவும் சொல்லாம மூலையில் உட்கார்ந்து அழுதுகிட்டு இருப்ப!’

மானசீகமாக தோழியை கடிந்தவளின் மூடியிருந்த இமைகளையும் தாண்டி கண்ணீர் கசிந்து கொண்டிருக்க....

யாரும் தன்னை பார்க்கும் முன்னே கண்ணீரை துடைக்கும் உந்துதல் உண்டாக... அப்பொழுது பார்த்து அலைபேசியில் அவள் கணவன் அழைத்தான் - ஆம், அவள் கணவன் முகுந்த்தின் அழைப்பு!

இந்த நேரம் அவனிடம் பேசினால், இவள் அழுதிருப்பதை கண்டு பிடித்து விடுவான். அவனுக்கு இவள் அஞ்சனாவை நினைத்து அழுதால் சுத்தமாக பிடிக்காது.

‘நீ வேணும்னு தெரிஞ்சா அவளே வந்திருப்பாளே! தப்பி தவறி அவ அப்படி நினைச்சா கூட அவ புருஷன் விட மாட்டான்! அவன்கிட்ட என் பொண்டாட்டி அசிங்கபட நானும் விட மாட்டேன்!’

அழுத்தம் திருத்தமாக சொல்லி வைத்திருந்தான் முகுந்த்!  ஆர்யமன் CTO ஆனது பொறுக்காமல் மேக்ஸ் சாஃப்ட்டை விட்டே வெளியேறி இருந்தவன் சசியையும் வேறு கம்பெனி மாற சொன்னான். அவளுக்கு அதில் உடன்பாடு இல்லை!

‘நான் மத்தவங்களுக்காக வேலை பார்க்கலை! எனக்காக வேலை பார்க்கிறேன்’, என்று மறுத்து விட்டாள். இப்பொழுது அழுவது தெரிந்தால், ‘இதுக்காக தான் அங்கே வேலை பார்க்காதேன்னு சொன்னேன்’, என்று ஆரம்பித்து விடுவான்.

‘ச்சே.. ‘, ஒரு சலிப்பு வந்தது அவளுக்குள்.

ஆண்கள் மட்டும் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தங்கள் நட்பை தக்கவைத்து கொள்ளும் பொழுது.. ஏன் பெண்களால் மட்டும் அது திருமணத்திற்கு பின் முடியாமல் போகிறது? தன் கணவனுக்கு பிடிக்கவில்லை எனில் தனக்கு பிடித்த நட்பையும் ஒதுக்கி தள்ளணுமா என்ன?

ஆர்யாவை கேட்டா அஞ்சனா என்னுடன் பழகினாள்? இல்லை நான் முகுந்திடம் கேட்டுவிட்டு அவளிடம் பழகினேனா? அப்போ  முடியும் என்றால் இப்பொழுது ஏன் முடியாது?

சில நாட்களாக மனதை குடைந்து கொண்டிருந்த அந்த எண்ணம் இப்பொழுது முழுப் பெற்று,

‘கல்யாணம்ங்கிற ஒன்னு எங்க ஃபிரண்ட்ஷிப்பை பிரிச்சிடுமா? என் புருஷன் எதிர்த்தாலும் சரி.. அவள் புருஷன் எதிர்த்தாலும்.... ஏன் அவளே  எதிர்த்தாலும், அவளுக்கு துணையா நான் இருக்கணும்! இருப்பேன்!’

அஞ்சனாவை நேரில் பார்க்க வேண்டும் என்று உறுதி பூண்டவளாக,

‘அவ கூட போன்ல பேசுறது எல்லாம் ஒத்து வராது! ஆர்யமனும் கிளையன்ட் மீட்டிங்கில் பிஸியா இருப்பான். இந்த நேரமே அவளை போய் பார்த்துடலாம்! தப்பித் தவறி கூட ஆபிஸ் ல நடந்ததையோ... கோக் பத்தியோ பேசக் கூடாது! அவளா அதை பத்தி கேட்டாளோ.. சொன்னாளோ பாத்துக்கலாம்’

எண்ணிக் கொண்டே, முன்னர் தான் குறித்து வைத்திருந்த ஆர்யமனின் முகவரியை கூகுள் மேப்பில் போட்டு விட்டு, வண்டிச் சாவியை கையில் எடுத்தவள் கண்கள் ஒரு ஷணம்  அந்த கீ செயினில் நிலைத்தது.

அதில் முகுந்த் அவளுக்கு ப்ரொபோஸ் செய்த போட்டோவும்... அந்த தேதியும்!!!  

“இந்த நாள் உங்களுக்கு மட்டுமில்லை எனக்கும் ரொம்ப ஸ்பெஷல்”

என்று சொல்லி அஞ்சனா கொடுத்த பரிசு தான் அது!

டிசம்பர் 15 என்ற அந்த தேதி அவளை அந்த நாளுக்கு இழுத்துச் சென்றது!

வாழ்வின் திசை மாறும்… பாதைகளும் மாறும்…

நட்பு அது மாற்றம் இன்றி தொடருமே!

சொந்தம் நூறு வரும்…. வந்து வந்து போகும்…

என்றும் உந்தன் நட்பு மட்டும் வேண்டுமே!!!

“இனி ப்ளாஸ் பேக் ஃப்ரண்ட்ஸ்... இரண்டு வாரம் ஒரு முறைன்னு அப்டேட் கொடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கேன்... என்னோடு சேர்ந்து நீங்களும் வேண்டிக்கோங்க.. நான் நல்லபடியா கொடுக்கணும்!”

தொடரும்

Episode 24

Episode 26

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.