(Reading time: 17 - 34 minutes)

திடீரென்று வந்த கம்பீரக் குரலில் ஆடிப் போனவனின் பார்வையில் பின்புலத்தில் தன்னை நோக்கி வரும் ஆர்யமன் தெரிந்தான்.

அவன் குரலில் சற்று கடுமை இருந்ததோ....

அதைக் கண்டு அதிர்ந்தது பாலாஜி மட்டுமல்ல... ஸ்ருதியும் தான்!

அதற்குள் அவர்கள் அருகில் வந்து விட்டவன், திரு திருன்னு முழித்த ஸ்ருதியை ஒரு பார்வை பார்த்து விட்டு பாலாஜியை முறைக்க,

“இல்லை அண்ணா.. ஐ.டி. கார்ட்... இவங்க ஐ.டி. கார்ட் மிஸ் பண்ணியிருந்தாங்க! கொடுக்க வந்தேன்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷாலக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“அதுக்காக உன் ஃப்யூச்சருக்கு முக்கியமான கிடைக்க வேண்டிய கான்ஃபிரன்ஸ்சை மிஸ் செய்துட்டு வந்து நிப்பியா??? உன்னை சின்ன பையன்னு ஆதி சொல்றதுலே தப்பே இல்லை!”

அவன் கடிந்ததில் பின் இருந்த உண்மை உரைக்க, அமைதியாகிப் போன  பாலாஜியிடம்,

“ஐ டி. கார்ட்டையாவது கொடுத்தியா இல்லையா?”

அந்த அதட்டலில் வேகமாக தன் பாக்கெட்டில் இருந்து அதை ஸ்ருதியிடம் கொடுக்க.. இப்பொழுது ஆர்யமன் பார்வை அவளிடம் சென்றது.

“ட்ரையினிங் போயிட்டு இருக்கு தானே?? கிளம்புங்க”

கடுமை பாலாஜியிடம் தான் இவளிடம் இல்லை என்றாலும்,

பாலாஜியை விரட்டிய விரட்டே இவளை பயங்காட்டி வைத்திருக்க...

மண்டையை மண்டையை ஆட்டி விட்டு வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாய் விறு விறுவென்று அங்கிருந்து அகன்றாள்.

கோகிலா விஷயத்தில் ஆர்யமன் மீதிருந்த மதிப்பு சரிந்து இருந்தாலும்... அவன் அதிகாரத்தையோ.. கட்டளையையோ எதிர்க்கும் துணிச்சல் ஸ்ருதியிடம் சுத்தமாக இல்லை!

‘நான் மட்டுமா அந்த பாலாஜியும் தானே பயந்து நடுங்கினான்!’

ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவி போல ஆர்யாவோடு பொருந்தி இருக்கும் தலைமை குணம் மற்றவர்களை தன் போக்கிற்கு வளைக்கிறது! இந்த சாமர்த்தியம் தான், இவனை இரட்டை வாழ்க்கை வாழ வைக்கிறது என்று எண்ணிக் கொண்டே தன் ஐடி கார்ட்டை பத்திரப் படுத்தியவளுக்கு  பாலாஜி மீது  கரிசனம் வந்தது.

‘ஐடி கார்ட்டை கொடுக்கத் தான் வந்தானா.... பாவம் என்னாலே டோஸ் வாங்குனானா? டென்ஷன்லே தேங்க்ஸ் கூட சொல்லலை..

காண்டாக்ட் நம்பரும் இல்லை! ஆபிஸ் முடியுறவரைக்கும் இருப்பானா? போயிடுவானா?’

பாலாஜியிடம் பேசுவது பாதியிலே தடை பட்டு போனது என்னவோ அரைத் தூக்கத்தில் எழுந்து விட்ட குழந்தை நிலையில் இருந்தது அவள் மனம்!

அதாவது அவனைப் பற்றி பாதி புரிந்தும்.. புரியாத நிலை! அவனுடன் பேசிய சமயம் கோபம் வந்தாலும், இப்பொழுது அதை மனதில் ஓட்டிப் பார்க்கையில், அவன் பக்கம் உள்ள நியாயம் புரிந்தது. அவனுக்கு அஞ்சனா மீது பாசம் அதிகம்! அவளை பேசப் போய் என்னை நேரில் பார்த்து எச்சரிக்க வந்திருக்கிறான்.

அவனுக்கு சாதகமாக யோசிக்க துவங்கியதும்,

‘அதுக்காக முக்கிய வேலையை விட்டு வரணுமா? அப்படி அது தான் காரணம்ன்னா  ஆர்யா கேட்டப்போ அதை சொல்லாம ஏன்  ஐடி கார்ட்ன்னு சொன்னான்?’

என்ற கேள்வி வரவும்..

‘எனக்கு என்னமோ... அவன் பாடி லாங்குவேஜ்ஜ பார்த்தா.... அவன்  அஞ்சனாவுக்காக இல்லை உன்னை பார்க்கணும்னே வந்த மாதிரி தோணுது’

மனசாட்சி சந்தேகமாக கேள்வி எழுப்ப... தன் அடையாள அட்டையை எடுத்து அதை வெவ்வேறு கோணத்தில் பார்த்தவள்,

“ஹூம்கும்! எந்த ஆங்கிள்ளே பார்த்தாலும் முறைச்சுகிட்டே இருக்கேனே!’, என்று அலுத்துக் கொண்டவள்,

‘இந்த  மொக்கை போட்டோவில் உள்ள என் முழியை ஒரு தடவை பார்த்தாலே... அவன் அவனுக்கு நாலு மாசத்துக்கு சோறு தண்ணி உள்ள இறங்காது... இதை பார்த்து கான்ஃப்ரன்ஸ் விட்டு ஓடி வருவானோ... ஏய் மனசாட்சி இது உனக்கே இது டூ மச்சா இல்லை! அடங்கு!’

என்று அந்த கேள்வியை ஒதுக்கி தள்ளியவளால்,

‘ஆபிஸ் முடியுறவரைக்கும் அவன் இருப்பானா? போயிடுவானா?’, என்ற கேள்வியை மட்டும் ஒதுக்க முடியாமல் கடிகாரத்தில் கரையும் மணித் துளிகளை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

தே அலுவலகத்தின் மற்றொரு தளத்தில்....

தன் டெஸ்க்கில் முழங்கையை ஊன்றி தலையை பிடித்த படி அமர்ந்திருந்தாள் சசி! அத்தனை பதற்றம் அவளுக்குள். ஏற்கனவே ஸ்ருதியுடன் பேசியது அஞ்சனாவின் நினைவுகளை கிளறி விட்டிருக்க...

ஆர்யமன் கோகிலாவின் கரத்தை பற்றி இழுத்து வந்தது சசியின் பார்வையிலும் விழுந்து விட... தன் கண் முன்னே கேள்விக்குறியாக்க படும் அஞ்சனாவின் வாழ்க்கை அவள் எதிர்காலம் எண்ணி கலங்கிப் போனாள் சசி.

பட்ட காலிலே படும் என்பது போல.. இவளுக்கு பட்ட கண்ணிலே படுகிறது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.