(Reading time: 17 - 34 minutes)

வனைப் போல உணர்ச்சியின் ஆளுமையில் இல்லை அவள்! தன்னை ஒருத்தன் முட்டாளாக்க முயற்சிக்கிறான் என்றதுமே சகல புலன்களும் எச்சரிக்கை அடைந்து அறிவும் விழித்துக் கொண்டது!

முதலில் யார் எனப் புரியாமல் பார்த்தவள்... இவன் யாரோவென்று தெளிந்த பின்... இருநூறு சதவிகித சந்தேகப் பார்வையால் அவனை அளந்தாள்.

கருத்தரங்கிற்கு செமி ஃபார்மலாக  ஸ்போர்ட்ஸ் கோர்ட்டில் வந்திருந்தவனின்  தோற்றத்தில் இருந்த  பணக்காரத்தனத்தையும்  உடையில் இருந்த கச்சிதத்தையும் அளவிடும் பொழுது தான்... அவன் ப்ளேசர் மீது பின் செய்திருந்த கான்பிரன்ஸ் பேட்ஜ்ஜூம் .. அதில் இருந்த இவன் பெயரும்  கண்ணில் படும் நேரத்தில்,

அவளை நெருங்கி, “ஹலோ மிஸ்... ஸ்ருதி வாசன்???”, கேட்டவாறு கை குலுக்க நீட்டியிருந்தான்.

அவளோ அதற்கு அசையாது தன் பேட்ஜையே  வெறிப்பதை கண்டதும் குனிந்து அதை பார்த்து விட்டு... அவளை ஏறிட்டவன் அவள் கண்டுபிடிப்பையும்.. பார்வையின் உஷ்ணத்தையும் புரிந்து கொண்டவனாக,

“வாவ்! ஸ்மார்ட் ஸ்ருதி தான்..”, பார்வையில் மெச்சுதலும்... வாயில் சிறு சிரிப்புமாக சொன்னவன்.. அடுத்து,

“பட், கொஞ்சம் கேர்லஸ்”, என்று வார… அது அவளை இன்னும் சீண்டி விட்டது!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“ஆமா, கேர்லஸ் தான்... அதான் உங்களை மாதிரி சீப் டேக்டிக்ஸ்  செய்றவங்களை கண்டுபிடிக்கத் தெரியலை!”,

அவளுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்க.... சீப் டேக்டிக்ஸ் என்று தன்னை கீழ்த்தரமாக சொல்லவும், சினமுற்றவன்,

“ஹே.. மைன்ட் யுவர் வேர்ட்ஸ்!!!”

சுட்டு விரலை நீட்டி பத்திரம் காட்டினான்.

“விரலை நீட்டி பேசினா.. நீங்க ஹர்ஷ்ஷூன்னு சொன்னது உண்மையாகிடாது!”, என்றாள் குத்தலாக!

“நான் தான் ஹர்ஷ்ன்னு உன்கிட்ட சொன்னேனா??”

கண்கள் இடுங்க அவன் கேட்கவும் தன் தவறு அவளுக்கு புரிய அப்பொழுதும் விடாமல் அவனை நோக்கி,

“நான் தப்பா சொன்னா, நீங்க கரக்ட்  பண்ணி இருக்கணும்!”

“ஓஓ....கரக்ட் பண்ணனுமோ??? இனி பண்ணிடுறேன்”, கண்களில் குறும்பு மின்ன இடக்காக புன்னகைக்க பதிலுக்கு அவள் முறைத்தாள்.

‘என்ன சொன்னாலும் தப்பாவே நினைக்கிறாளே... நம்மளை பத்தி தெளிவு படுத்தணும் இவகிட்ட!’, என்று எண்ணிக் கொண்டவனாக அவளை நோக்கி சற்றே நிதானமான தொனியில், 

“ஹர்ஷ் என் கசின் ப்ரதர்! அவனா இருந்தா உன்னை வேலையை  விட்டே தூக்கி இருப்பான். என்னை குறை சொல்றதை விட்டுட்டு  நீ என்ன பேசினேன்னு கிளியர் பண்ணு முதல்லே!”

அவன் தன்னை வெளிபடுத்தி நேராக விஷயத்துக்கு வர.... பதில் சொல்ல வேண்டியது ஸ்ருதியின் கடமையாகிப் போனது.

“என்ன கிளியர் செய்யணும்? அதான் சொன்னேனே.... “, என்று திருமண பத்திரிக்கையை பார்த்ததில் இருந்து நடந்ததை சொன்னாள்.

அவள் சொன்னதை தலையசைப்புடன் ஒப்புக் கொண்டவன் அவளை நோக்கி,

“அஞ்சு மேரேஜ்ல ப்ராளம் வந்தது என்னவோ உண்மை தான்!”

சிறு வருத்தம் மேலிட சொன்னவன் பின், 

“ஆனா, மேரேஜ் லைஃப்ல எந்த ப்ராப்ளமும் இல்லை! ஆர்யா அண்ணா இருக்கிறப்போ அவளுக்கு என்ன கவலை!”, என்றான் பெருமிதம் பொங்க!

சிறிது நேரத்திற்கு முன் தான் ஆர்யமன் கோகிலாவை அழைத்து வந்த காட்சியைப் பார்த்தாளே! ‘இவன் அண்ணா புராணம் பாடுறானே!!! இவனுக்கு இங்கே நடக்கிறது என்ன தெரியும்?’,

தனக்குள் எண்ணிக் கொண்டவளுக்கு என்னவோ அதை கேட்கவே பிடிக்கவில்லை!

அவன் மேலும்,

“அஞ்சனா மேல நீ பரிதாப பட அவசியமே இல்லை! எனக்கு அது பிடிக்கவும் இல்ல!”

என்ற கண்டிப்புடன் அவன் முடிக்க...

‘அஞ்சனா பத்தி தப்பா ஒரு வார்த்தை பேசி இருப்பேனா?  இவன் ஏன் என்னை குத்தி காட்டுறான்!’, என்ற எண்ணமே மேலோங்க  விருட்டென்று எழுந்து கொண்டவள்,

“எனக்கும் ட்ரையினிங் கட் செய்துட்டு இதை பத்தி பேச வேண்டிய அவசியம் இல்ல!”

அவனை நோக்கி கட் அன்ட் ரைட்டாக சொல்லி விட்டு கிளம்ப யத்தனித்தவளை தடுத்து நிறுத்த முயன்றவனாக,

“ஹே.. என்ன அவசரம்? நீ ஏன் கேர்லெஸ்ன்னு தெரிஞ்சிக்காமலே போனா எப்படி?”

ஒரு வேகத்தில் சொல்லி விட, தன் கேர்லெஸ் வார்த்தையில் அவள் முகம் கோபத்தில் ஜிவ் ஜிவ்வென்று சிவப்பேறுவதை மட்டுமே கண்ணில் தெரிய...

“கான்ஃபிரன்ஸ்க்கு போகாம இங்கே என்ன செய்துகிட்டு இருக்கே?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.