(Reading time: 16 - 31 minutes)

கார்த்தி கொஞ்சம் என்னபாரு..அவங்க என்ன நினைப்பாங்க இவங்க என்ன நினைப்பாங்கநு யோசிக்குறத விடு மொதல்ல..உனக்கு அவள பிடிச்சுருக்கா??

அம்மாமா

என்னடா அம்மா??இந்த விஷயத்துல இப்படிதான்டா நீ யோசிச்சுருக்கனும்..உனக்கு பிடிக்கலநு இருந்தா அந்த பொண்ணு அத ஏத்துகிட்டு இருந்திருப்பா..அத விட்டுட்டு உங்கப்பாக்கு பிடிக்காது எங்கம்மாக்கு பிடிக்காதுநு சொன்னா யாருடா ஏத்துப்பா..இத பாரு கார்த்தி நாம மிடில்கிளாஸ் தான் அவங்களமாறி பணத்துல பொறள முடியாதுதான் அதுக்காக நமக்கு ஆசபாசங்கள் இருக்க கூடாதுநு இல்லடா..நீ இந்த வீட்டோட மூத்த மகன்தான் அதுக்காக உனக்கு பிடிச்சத நீ செய்யகூடாதுநு யாரும் சொல்லல..நீ இவ்ளோ பேசும் போதே தெரியுது உனக்கும் அந்த பொண்ண பிடிச்சுருக்குநு..அப்பறம் எந்த பிரச்சனை வந்தாலும் தைரியமா பேஸ் பண்ண வேண்டியதுதான..உனக்காக இந்த அளவு ஏங்குற பொண்ணுக்காக உலகத்தையே எதிர்த்து நிக்கலாம் தப்பில்லடா..

இதெல்லாத்தையும் விடு உன்ன உண்மையா புரிஞ்சுகீட்டவங்க எப்படி உன் விருப்பத்தை பத்தி மதிக்காம போவாங்க..உன் குடும்பத்துக்கு உன்னபத்தி தெரியும்டா..போ போய் அவகிட்ட சந்தோஷமா உன் மனச சொல்லு..

அம்மாமாவென்று அவரை கட்டிகொண்டான்..தேங்க் யு சோ மச்ம்மா..நீ என்ன புரிஞ்சுகிட்டல..அப்பாவும் என்ன புரிஞ்சுப்பாரு..சேகர் சாருக்கு நா புரீய வைக்குறேன்ம்மா..

சந்தோஷமாயிருடா..இப்போதைக்கு யார்ட்டையும் எதுவும் சொல்ல வேண்டாம்..மொதல்ல சஹானாட்ட பேசு அப்பறம் பாப்போம்..என்று அவன் முன் தலையை வருடி சென்றார்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

னோ அன்னையிடம் பேசியது மனதிற்குள் ஒருவித நிறைவை அளித்தது..அதே உற்சாகத்தோடு தன்னவளுக்காய் ஒரு வாழ்த்து அட்டையை வாங்கி அதில் ஏதோ எழுதினான்..எழுதி முடித்தவன் அதை கண்டு சிரித்து தன்னோடு அணைத்து கொண்டான்..வீட்டில் அனைவரையும் அழைத்திருந்ததால் எல்லாருமாய் கிளம்ப இவன் சற்று முன்னதாகவே சென்றுவிட்டான்..ஓரளவு விருந்தினர்கள் வந்திருக்க வெளியே புல்வெளியில் பார்ட்டிக்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன..கார்த்திக்கை பார்த்ததும் அவனை வரவேற்று பொதுவாக பேசிவிட்டு நகர்ந்தார் சேகர்..அதற்காகவே காத்திருந்தது போல் அவன் முன் வந்தாள் சஹானா..அழகான பிஸ்தாநிற காக்ராவில் கடல்நீல நிற துப்பட்டாவோடு தேவதையாய் நின்றாள்..என்ன கார்த்திக் எவ்ளோ மார்க் போடலாம்??என இரு புருவத்தையும் அசைத்து கேட்க அப்போது தான் அவளையே பார்த்து கொண்டிருந்ததை உணர்ந்து சட்டென பார்வையை அகற்றினான்..சைட் எல்லாம் நல்லாதான் அடிக்குறீங்க நா கேட்டதுக்கு தான் பதிலே வரல..என்ன முடிவு பண்ணிருக்கீங்க..??

தன் பையிலிருந்து அந்த க்ரீட்டிங் கார்ட்டை எடுத்து அவாளிடம் நீட்டினான்..

கார்த்திக் அதான் நேத்தே விஷ் பண்ணீட்டீங்களே இப்போ இது ரொம்ப முக்கியமா??நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க??

ஒன்றுமே பேசாமல் அவன் அதை அப்படியே பிடித்திருக்க கோவமாய் அதை வாங்கி பிரித்தவளின் கண்களில் அவன் எழுதியதை கண்டதும் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள்..ஒரு துளி கண்ணீர் வேறு எட்டி பார்த்தது..மீண்டும் படித்தாள்,

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ

வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ

பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்

நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ

கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ

வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ

ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ

மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று…”

கடைசி இரண்டு வரிகளில் கோடிட்டுருக்க அவனை பார்த்தவளை பார்த்து என்ன சம்மதமா??என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தான்..அதை கண்டவளோ முகம் சிவக்க போடா என்று கூறியபடியே உள்ளே ஓடிவிட்டாள்..கார்த்திக்கிற்கும் அவளின் இந்த சந்தோஷம் மகிழ்ச்சியை கொடுத்தது இனி வாழ்வின் இறுதி வரை அந்த புன்னகையை அவளிடம் நிலைத்திருக்க செய்ய வேண்டும் என உறுதி கொண்டான்..

தன் பின் விருந்தினர்களால் வீடே நிறைந்திருக்க அந்த நாளின் நாயகி மேடை ஏறினாள்..பார்வை முழுவதும் தன்னவனையே பார்த்திருக்க மயக்கத்தில் கட்டடுண்டவளாய் கேக் கட் செய்து வந்த பரிசு பொருட்களை பெற்று கொண்டாள்..இருவரையும் கவனித்த கீதாவிற்கு அகமும் முகமும் நிறைந்துவிட்டது..அதன்பின் இரவு உணவை முடித்துவிட்டு கார்த்திக் குடும்பத்தினருடன் கிளம்ப வாசல் வரை சென்று அனுப்பிவிட்டு வந்தாள்..இன்னுமும் கார்த்திக்கின் அந்த பார்வை அவளை இம்சித்து கொண்டிருந்தது..முகத்தில் மெல்லிய சிரிப்போடே தனதறையை சுற்றி வந்து கொண்டிருந்தாள்..மொபைலை கையிலெடுத்தவள் கார்த்திக்கின் எண்ணை வைத்து கொண்டு பட்டிமன்றம் நடத்தி கொண்டிருந்தாள்..அதை அவன் உணர்ந்தானோ என்னவோ அவனே அழைத்தான்..சட்டென அழைப்பை ஏற்றவள் ஒன்றும் பேசாமல் அமைதி காத்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.