(Reading time: 16 - 31 minutes)

லோ..—கார்த்திக்

……..

சஹானா…

ம்ம்ம்

என்ன மேடம் வாய தொறந்தா மூடமாட்டீங்க என்ன சத்தத்தையே காணும்..

…..

ப்பார்ராரா..ஹலோ 1000 வாலா அட்லீஸ்ட் பிஜிலி வெடி அளவாவது பேசுங்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேவதி சிவாவின் "வரத்தினால் பெற்ற சாபம்" - சமூக பார்வைக் கொண்ட தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

நீ ரொம்ப மோசம் கார்த்திக்..

அடிப்பாவி வருங்கால புருஷன மரியாதையில்லாம பேசுற..

ம்ம் இவ்ளோ நாள் என்ன அலைய விட்டதுக்கு இதான் பனிஷ்மெண்ட்..

ம்ம் அது சரி உங்களுக்கென்ன பொண்ணுங்க டக்குநு சொல்லிடுவீங்க..பசங்க நாங்க ஆயிரம் யோசிக்கனும்ல..

ஹே கலிகாலம் நா சொல்ல வேண்டிய டயலாக்லா நீ சொல்ற..ம்ம் சரி என்ன பண்ற??

ம்ம் நீ குடுத்த புக் படிக்கலாமேனு எடுத்து வச்சுருக்கேன்..சரி நா ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே..

என்னாச்சு கார்த்திக் ஏன் இப்படி கேக்குற..

இல்ல சஹானா திரும்பவும் சொல்றேன் இது விளையாட்டு விஷயம் இல்ல..உன் லைவ்வே மாறிடும்..இங்க வந்தப்பறம் நீ நிறைய அட்ஜெஸ்ட் பண்ண வேண்டியது இருக்கும்..100 இல்ல 1000 மடங்கு நா உன்ன சந்தோஷமா பாத்துப்பேன் பட் இப்போ இருக்குற லைவ்வோட நீ கம்பேர் பண்ணா அது எவ்ளோ இருக்கும்நு தோணல..தப்பா எடுத்துக்காத..எதுக்காக சொல்றேன்னா…

கார்த்தி ப்ளீஸ்..இவ்ளோ யோசிக்குறதுக்கெல்லாம் நா வொர்த் இல்ல..நாங்களும் மிடில்கிளாஸா இருந்து வந்தவங்க தான்..எனக்கு என் மனசுக்கு பிடிச்சவங்ககூட என் லைவ் புல்லா இருக்கனும் அவ்ளோதான் மத்தபடி பணம் ஆடம்பரம்லா விஷயமேயில்ல..ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோங்க..

தேங்க்ஸ் சஹி..

 ம்ம்.ம்

ஹேய் என்ன அடிக்கடி ம்யூட்ல போய்டுற??

இல்ல என்ன குட்டிசாத்தான்னு தான் கூப்டுவீங்கநு நெனச்சேன் பரவால்ல நைஸ் நிக் நேம்..

நீ எப்பவுமே இப்டிதான..சத்தியமா இப்படி ஒரு பொண்ண நா சந்தோஷ் சுப்ரமண்யம் படத்துலதான் பாத்துருக்கேன்..

இதெல்லாம் என்ன பெரிய விஷயம் லைவ் புல்லா இன்னும் எவ்வளவோ பாக்க போறீங்க..

வேண்டாம் தாயே நீ இப்படி சொன்னாலே பீதி கிளம்புது..அநேகமா வீட்டுக்குள்ளேயே ஹெல்மெட் போட்டுட்டு தான் அலையனும்னு நினைக்குறேன் எப்போ எது தலைல விழும்னு தெரியாதே..என்று கூறி சிரித்தான்..

உங்க சிரிப்பு நல்லாயிருக்கு கார்த்திக்..அதுலதான் விழுந்துட்டேன்னு நினைக்குறேன்..

அதற்கும் சிரிப்பையே பதிலளித்தான்..ஆமா கேக்கனும்னு நினைச்சேன் அங்கிளும் ஆன்ட்டியும் என்ன ஏத்துபாங்களா??

ஆன்ட்டி சைட் ரூட் க்ளியர்..டீச்சர் சார் தான் என்ன சொல்லுவாருநு தெரில..அங்க எப்படி??

ஹே ஸ்வீட்டிட்ட சொல்லிட்டீங்களா??அதான் சார் தைரியமா ப்ரபோஸ் பண்ணதுக்கு காரணமா??

ஓய் மாமியாரை என்ன ஸ்வீட்டிநு கூப்டுட்டு இருக்க??

கார்த்திக் கண்டிப்பா நானும் அவங்களும் செம காம்பினேஷனா இருப்போம் சோ நீங்க நடுல வராதீங்க..

ம்ம் இப்போவேவா சரி உங்க வீட்ல எப்படி??

தெரிலப்பா..சத்தியமா நோ ஐடியா..நாளைக்கு தான் பேசலாம்நு பாக்குறேன்..

அதுவும் கரெக்ட்தான் சஹி மொதல்லயே சொல்றது பெட்டர்..விளையாட்டுதனமா பேசிடாத ஒழுங்கா பேசு புரியுதா??

ம்ம் ஆனாலும் கார்த்திக் நீங்க ஏன் இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க..நா பாத்து பக்குவமா பேசுறேன் போதுமா..

ஓ.கே சஹி நீ போய் படுத்துக்கோ ஆல்ரெடி டயர்ட்ல இருப்ப..நாளைக்கு சார்கிட்ட பேசிட்டு எனக்கு அப்டேட் பண்ணு….

கார்த்திக் பட் அதுக்கு முன்னாடி உங்கள மீட் பண்ணணுமே ப்ளீஸ்…

ம்ம்ம் சரி எங்க வரணும்னு சொல்லு..

ஈவ்னிங் பீச்ல மீட் பண்ணலாம் நா டைம்மிங் உங்களுக்கு மெசெஜ் பண்றேன்…

ஓ.கே சஹி..குட் நைட்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.