(Reading time: 16 - 31 minutes)

குட் நைட் கார்த்திக்…இருவருமே தங்களின் எதிர்கால வாழ்க்கை பற்றிய கனவுகளோடு மறுநாளின் விடியலுக்காக காத்திருந்தனர்…

ந்த அழகிய விடியலை ரசித்தபடியே நின்றவனுக்கு பின் யாரோ வரும் அரவம் கேட்டு திரும்ப கையில் காபியோடு நின்றிருந்தார் கீதா..

ம்மாம்மா வா நானே உன்கிட்ட பேசனும்னு நினைச்சேன்..

ம்ம் என்னடா சொல்றா என் மருமக??

அம்மா எப்படி நீ இப்படியிருக்க..இவ்ளோ ஈசியா எடுத்துகிட்ட??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

டேய் கண்ணா இதுல கோபப்பட என்னயிருக்கு..பசங்க வளர்ந்து பெரியவங்களானப்பறம் அவங்களுக்கு பெத்தவங்களோட அரவணைப்பு இருக்க வேண்டியது ரெண்டே விஷயத்துலதான் ஒண்ணு அவங்க க்கேரியர்..அது அவங்க விருப்பப்பட்டதாயில்லனா லைவ் மொத்தமும் பிடிக்காத வேலை தான் செய்யனும்..இன்னொன்னு கல்யாணம்..சாதரண வேலைக்கே அப்படினா இது வாழ்க்கைடா வாழபோறவங்கதான் முடிவு பண்ணணும்..அதே நேரம் அந்த முடிவு தப்பாயிருந்தா அத திருத்துற கடமையும் பெத்தவங்களுக்கு இருக்கு..உன் விஷயத்துல அந்த அவசியமில்லனு தோணிச்சு ஈசியா எடுத்துகிட்டேன்..என்று அவன் கன்னத்தை கிள்ளினார்..

அம்மா பெரிய பெரிய படிப்பு படிச்சுட்டு நல்ல வேலைல இருக்குறவங்களால ஏத்துக்க முடியாத யோசிக்க முடியாத விஷயத்த குடும்பத்தையே உலகமா நினைக்குற நீ அசால்ட்டா முடிச்சுட்டியேம்மா..

கார்த்திக் சில விஷயங்களுக்கு படிப்பறிவ விட பகுத்தறிவு இருந்தா போதும்டா..

என்ன வேணா சொல்லு நீ க்ரேட்ம்மா,.சரி எனக்காக அப்பாட்ட பேசும்மா ப்ளீஸ்..

சஹானா வீட்ல சொல்லிட்டாளாடா??

இல்லம்மா ஈவ்னிங் தான் சொல்ல போறேன்னு சொன்னா..

சரி அவங்கப்பா என்ன சொல்றாருநு பாப்போம் அத பொறுத்து அப்பாட்ட பேசலாம்டா

அப்போ சரிம்மா நா சேகர் சார்ட்ட பேசிட்டு சொல்றேன்..

மாலை இருவரும் முடிவு செய்த நேரத்திற்கு கார்த்திக் வந்து காத்திருந்தான்..அடுத்த பத்து நிமிடத்தில் சஹானா வந்தாள்..இருவரும் தங்களுக்குள் புன்னகையை பரிமாறியபடி சற்று தூரம் சென்று அமர்ந்தனர்..சஹானா அமர சற்று இடைவெளிவிட்டு கார்த்திக் அமர்ந்தான்..ஐந்து நிமிடங்கள் மௌனத்திலேயே கரைய கார்த்திக் அவளை திரும்பி பார்க்க அவளோ கடலை வெறித்தபடி இருந்தாள்..

சஹி..என்ன பாக்கனும்னு சொல்லிட்டு கடலையே பார்த்திட்டு இருந்தா எப்படி??நா வேணா கிளம்புறேன் நீ பொறுமையா பாத்துட்டு வா..என்று லேசாய் புன்னகைக்க..

ம்ம்ம் பார்ர்ரா நேத்து வர வாய் தொறக்காத அப்பாவியெல்லாம் இப்போ எனக்கே கவ்ண்டர் குடுக்குறத நேரம் தான்..என்று அவனையே பார்க்க.

.என்ன என்பதாய் புருவத்தை அசைத்தான் கார்த்திக்..ஒன்றுமில்லையென தலையசைத்தவள் அவனருகில் சற்று நெருங்கி அமர்ந்து அவன் வலது கரத்தை அழுத்தி பிடித்து கொண்டாள்..கார்த்திக் எதுக்காகவும் என்ன விட்றமாட்டல???

ஹே..என்ன சஹி என்னாச்சு??

இல்ல அப்பா எப்படியும் 99% ஒத்துப்பாருநு எனக்கு நம்பிக்கையிருக்கு பட் அந்த 1% எதாவது மாறினா அப்பாக்காகநு என் காதல விட்டுற மாட்டல??

சஹானா ஏன் இப்படிலா யோசிக்குற அப்படிலா ஒண்ணும் ஆகாது..உனக்கு இதெல்லாம் செட்டே ஆகல எப்பவும் போல ஜாலியாயிரு..எல்லாம் நல்லபடியா நடக்கும்..என அவள் வைத்திருந்த கையை மெதுவாய் தட்டி கொடுக்க அவள் அதை இறுக்கமாய் பிடித்து கொண்டாள்..குட் பாய்..சும்மா செக் பண்ணி பாத்தேன் எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கீங்கநு..சேகர்லா ஒரு மேட்டரே இல்ல அதெல்லாம் அசால்ட்டா ஓ.கே பண்ணிரலாம்..என கண்சிமிட்ட அவனோ என்ன செய்யலாம் இவளை என்ற யோசனையோடு பார்த்தான்..

சாரி கார்த்திக் சீரியஸா இருக்குறமாறி நடிக்ககூட வரமாட்டேங்குது நா என்ன பண்றது..என்று பாவமாய் கேட்க..இதே ரேஞ்ச்ல உங்கப்பாட்ட பேசினா போதும் அவரு வேண்டாம்நு சொல்லி எனக்கு நல்ல வழி காட்டிருவாரு..எப்படி வசதி..

கார்த்திதிதிக்க்க்…சரி உன்கிட்ட கேக்கனும்னு நினைச்சேன் நிஜமாவே என்ன பிடிச்சுருக்கா இல்ல நா படுத்தின டார்ச்சர் தாங்காம ஒத்துகிட்டீங்களா??ஏன்னா என் கேரக்டர் எல்லாருக்கும்லா செட் ஆகாது காலேஜ்லயே சில பேருக்கு என்ன பிடிக்காது அதுலயும் நீங்களோ ஸ்ரிக்ட் ஆபிஸர் மாறியே விரைப்பா சுத்துவீங்களே அப்பறம் எப்படி இந்த கல்லுக்குள் ஈரம்..??

அவள் பேச்சை கேட்டு அவன் சிரிக்க அதை தனக்குள் நிறைத்தாள் சஹானா..அக்சுவலி இது நீ சொன்ன பாய்ண்ட் தான் ஆப்போஸிட் போல்ஸ் வில் அட்ராக்ட் ஈச் அதர்..அது மாறிதான் உன்னபாத்தப்பவே மனசுக்கு பிடிச்சுருந்தது..பட் லவ்நு நினைக்கல க்யூட்டான ஒரு ஸ்கூல் கோயிங் கேள் மாறி தெரிஞ்ச பட் அதுக்கப்பறம் நிறைய இன்ஸ்டன்ஸ் என்னையே அறியாம நீ எனக்குள்ள வந்துட்ட..அது மட்டும் எப்படிநு சத்தியமா இப்போ வர தெரில மேபி நீ என் வீட்ல பழகின விதம் கூட அதுக்கு காரணமா இருக்கலாம்நு நெனைக்குறேன்..பட் எல்லாத்தையும் தாண்டி எல்லார்க்காகவும் என் மனச மறைச்சுடலாம்நு நெனைச்சேன் பட் நீ அத செய்யவிடல..இப்போ மாட்டிக்கிட்டேன் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.