(Reading time: 19 - 38 minutes)

ன் பொண்ணு பண்ண தப்பை மன்னிச்சு அவளை ஏத்துக்கோப்பா…” என இரு கரம் கூப்பிக் கேட்டார் அந்த பெரியவர். தன் மகளின் வாழ்வைப் பற்றிய தவிப்பினால் அவர் குரல் தழுதழுத்தது.

அவர் ஏதோ கேட்கப்போவதாய் நினைத்தவன், அவர் இப்படி ஒன்றை கேட்பார் என்பதை எதிர்பார்க்கவில்லை. அவர் நின்றிருந்த தோற்றம் நெஞ்சை உருக்குவதாய். ஆனால், அவனால் அந்த விண்ணப்பத்தை ஏற்கத்தான் முடியவில்லை. அது மேலும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் அல்லவா?

ப்ரனிஷின் தலை தானாக மறுப்பாக ஆடியது. அதனைக் கண்ட விஷ்வநாதன், “உன் அப்பா அம்மாவைப் பற்றி நினைக்கிறாயா தம்பி? நான் வேணா அவர்களிடம் பேசிப் பார்க்கிறேன்… கண்டிப்பா ஒத்துப்பாங்க… இல்லைன்னா… உங்க லைஃப்ல வேற யாராவது?” என இழுத்தார்.

“ஐயோ… அப்படி எல்லாம் எதுவும் இல்லை அங்கிள்… நான் யாருனு தெரியாம நீங்க கேட்கறீங்களே!” என்றான் ப்ரனிஷ்.

“இத்தனை நாள் பார்த்ததுல தெரியுதுப்பா… நல்ல பண்புள்ளவன்னு”

“என் குடும்பம்…”

“இப்படிப்பட்ட பையனை வளர்த்தவர்களும் நல்லவர்களாகவே இருப்பாங்க” என்றார் அந்த பெரியவர் புன்னகையுடன்.

“ஆனா அந்த நல்ல குடும்பம் யாருதுன்னு தெரியாதே” என்றவன், அவரிடம் முழுமையாகக் கூறினான், தான் இங்கே வந்த காரணத்தைப் பற்றியும்.

அதனை அவன் கூறக் கூற, அவர் முகத்தில் பல உணர்ச்சிகள். கோபம், பரிதாபம், குற்றவுணர்ச்சி என பல பாவங்களைக் கொண்டு, இறுதியில் உவகையுடன் அவன் கையைப் பற்றிக்கொண்டார் அவர்.

“எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குப்பா… உன்னைவிட யாரு எங்க ப்ரியாவிற்கு பொருத்தமா இருப்பா? ஒருவேளை எல்லாமே சரியா இருந்திருந்தா உனக்குத் தானே அவளை பேசியிருப்போம்? அப்படி நினைத்து சம்மதிக்கலாமே?” என்றார்.

இனியும் மறுக்கத் தோன்றாது, ஒத்துக்கொள்ள நினைத்தவன் நினைவில் வந்து நின்றார் ப்ரியாவின் தந்தை. “ஆனால், உங்க தம்பி?” என்றான் ப்ரனிஷ், தனக்கு சம்மதம் எனக் காட்டியபடி.

அவன் சம்மதம் சொல்லிவிட்ட சந்தோசத்தில் “அவனை சம்மதிக்க வேண்டியது என் பொறுப்பு” என்று கூறி, “நான் கீழே போய் ஆகவேண்டிய வேலையை பார்க்கிறேன்” என்று நகர்ந்தார்.

அவர் செல்ல, ஏதோ நியாபகம் வந்தவனாய், “அங்கிள், ப்ரியாவிடமும் ஓகேயான்னு கேளுங்க” என்றான் அவன்.

திரும்பிப் பார்த்த விஷ்வநாதன், சரியென்று தலையாட்டி, “இனி மாமான்னு கூப்பிடலாமே” எனக் கூறி, அவனது அழைப்பையும் கேட்டுச் சென்றார்.

டுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்தும் கடகடவென நடந்தது. அனைவரையும் சம்மதிக்க வைத்துவிட்டார் விஷ்வநாதன். ப்ரியாவிற்கும் சஞ்சய்க்கும் குறித்திருந்த அந்த பிரம்மமுகுர்த்த வேளையில் ப்ரியாவின் கழுத்தில் திருமாங்கல்யத்தைப் பூட்டி தன்னவளாய் ஏற்றுக்கொண்டான் ப்ரனிஷ்.

ஆனால், ஒரே ஒரு குறை. திருமணம் முடிந்து பெரியோர்கள் காலில் மணமக்கள் ஆசீர்வாதம் வாங்கும் சமயம், கைலாசநாதனின் காலில் இருவரும் விழ, சட்டென விலகிப்போனார் அவர். மனதளவில் வெகுவாக உடைந்து போனாள் ப்ரியா.

இவை எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து அதே மாடியில் நின்றிருந்தான் ப்ரனிஷ். விஷ்வநாதனுக்காக சம்மதம் என்று சொன்னாலும், அவனுக்கு ப்ரியாவின் மேலிருந்த கோபம் ஆற மறுத்தது. தன்னை சாந்தப்படுத்திக்கொள்ளவே அவன் இங்கே வந்ததே.

இனி என்ன செய்வது என்று எதுவும் யோசிக்கக்கூட இயலாதவனாய் இருந்தான் ப்ரனிஷ். அப்போதுதான் அவன் சட்டைப் பையில் வைப்ரேஷன் மோடில் இருந்த அவன் செல்போன் அதன் இருப்பைக் காட்டியது.

அதனை எடுத்துப் பேச ஆன் செய்தவன் காதில் விழுந்தது அவன் தந்தையின் வார்த்தைகள்.

“மணி… அப்பா பேசறேன்ப்பா… கலியாணம் நல்லபடியா முடிஞ்சுச்சா? உன் அம்மா அவ அண்ணன் பொண்ண பாக்கனும்னு சொல்றாப்பா… ஃபோட்டோ எடுத்துருப்பியே… அதை எனக்கோ மாமாவுக்கோ அனுப்பறியா?” என அவர் கேட்க, இங்கே நடந்ததை பக்குவமாக எடுத்துக்கூறினான் ப்ரனிஷ்.

அவன் கூறுவதைக் கேட்டவர், அடுத்த ப்ளைட்டிலேயே வருவதாகக் கூறவும், பெரும் பாரம் குறைந்ததைப் போல போனை வைத்தான்.

அவன் அதனை அனைத்து சட்டைப் பையில் போட்டவன், ப்ரியா தான் யாரென்று அறிந்தால் என்ன நடக்கும் என யோசித்தான். அப்போது, படிகளிலிருந்து “மாப்பிள்ளை” என்று குரல் வந்தது.

“Can you all just give me a break for sometime?” எனக் கேட்க நினைத்து திரும்பியவன், அங்கே நின்றிருந்தவரைப் பார்த்து அவ்வாறு சொல்ல முடியாமல் இருந்தான்.

“திரு. பார்த்தவியிடம் அனைத்தையும் சொல்லியாச்சா?” எனக் கேட்டபடி வந்தவரைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தான் ப்ரனிஷ்.

இதோட போதும்னு நினைக்கிறேன்… ஹீஹீஹீ…. I like cliffhangers…. எழுதுன எனக்கே ப்ரனிஷ்-ப்ரியாவைப் பார்த்து பாவமாப் போச்சு… ஆனாலும், ப்ரியா, 2 அடி வாங்கிட்டும் சாதாரணமா நின்னியே… எங்கேயோ போயிட்டேம்மா… எப்படி இருக்குன்னு படிச்சுட்டு சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்… மொக்கையா இருந்தாலும் சொல்லலாம்… அடுத்த பகுதியை பெட்டரா செய்யறதுக்கு உதவும்… இந்த அப்டேட்ல சில விஷயங்கள் ரிவீல் செய்துருக்கேன். அதைப் பற்றிய உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்கள்… விரைவில் மீண்டும் சந்திக்கிறேன்… நன்றி…

தொடரும்

Episode 09

Episode 11

{kunena_discuss:1075}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.