(Reading time: 18 - 35 minutes)

ழையாவின் காதுக்கருகில் சிரிடீ என்று அவன் கூறும் போது எடுத்த அந்த படம் மிகவும் நெருக்கமான ஜோடியாகவும், மஹிந் அவளிடம் ஏதோ ரகசியம் பேசுவதுபோலவும் இருந்தது .இதைதான் நான் அவருக்கு அனுப்பினேன் சூப்பரா இருக்கு என்றார். பக்கத்தில் மாமா இருப்பதால், உங்களுடன் பிறகு பேசுவதாக சொல்லச் சொன்னார், என்றாள் மதுரா ,

சரியண்ணா, நாளைக்கு ரிப்போர்ட்டர்களிடம் எப்படி பேசவேண்டும் என்று அண்ணியிடம் சொல்லிவிடு நான் கிளம்புகிறேன். எதுவென்றாலும் போன்பண்ணு என்று கூறி ரித்திகாவுடன் மதுராவும் சேர்ந்து விடை பெற்றுச் சென்றாள்.

மதுராவிடைபெறும் போது அதற்குள் எதற்குப் போகிறீர்கள் மதுரா எனக்கு புதுஇடத்தில் தனியாக இருந்து பழக்கம் இல்லை .இது உங்கள் அண்ணன் வீடுதானே எனக்குத் துணையாக நீங்கள் இங்கே இருக்கலாமே! என்றாள்.

அவள் அவ்வாறு கூறவும் மஹிந்தனுக்கு கோபம் பொங்கியது நான் இருக்கும் போது எப்படி நீ தனியாக இருப்பதாகக் கூறலாம்? என்ற கோபத்துடன் ழையாவை முறைத்தான்.

அதற்கு ழையா எனக்கு தனியாக உன்னுடன் இருப்பதுதான் பயம் என்று அவள் கண் கூறுவதுபோல், பதிலுக்கு அவனை பார்த்து கொண்டே தன் முகத்தை மதுராவின் பக்கவாட்டில் அவன் பாக்க முடியாதவாறு மறைந்து நின்றாள்.

அவர்களின் கண்ணாமூச்சை பார்வையிட்டவாறே மதுரா கூறினாள், எனக்காக அங்கு என்னவர் காத்துக்கொண்டு இருக்கும் போது எப்படி என்னால் இங்கு தங்க முடியும் அண்ணி! .மேலும் அண்ணன் துணையிருக்கும் போது எப்படி நீங்கள் தனியாக முடியும் .இன்னொரு நாள் அவருடன் வந்து நான் இங்கு தங்குகிறேன் என்று கூறி விடைபெற்றாள்.

தன் பின் இருவருக்கும் இடையே மௌனமே ஆட்சி செய்தது. ழையாவிற்கு, அவனுடன் மாடிக்குப் போகவே பயமாக இருந்தது .

மஹிந்தன் தனது மொபைலில் கதிரை அழைத்து காலையில் எத்தனை மணிக்கு பேட்டிகொடுக்க வேண்டும் என்றும் பேசிக்கொண்டு இருந்தான் .

அப்பொழுது அங்கு வந்த கஸ்தூரி, மஹிந்தனின் முன் கிரீன் டீ யை வைத்துவிட்டு .மதுராவிடம் உங்களுக்கு பால் கலந்து தரவா அல்லது வேறு ஏதாவது குடிக்க வேண்டுமா அம்மா, என்று கேட்டாள்.

எனக்கு எதுவும் வேண்டாம் என்று ழையா சொன்னாள் .அப்பொழுது அவள் சொல்வதை திரும்பி பார்த்தவன், “அவ்வளவு தானே நாளை பார்க்கலாம்” என்று கதிரிடம் சொல்லி மொபைலை வைத்தான் .

ஏன் ழையா இரவு உன்போன்ற பேபி எல்லாம் பால் தானே குடிக்கும், என்று சொன்னான். அவன் தன்னை குழந்தை என்று கூறியதும் கோபம் கொண்டு, “நான் ஒன்றும் பேபி கிடையாது”, என்னை பேபி என்று கூப்பிடாதீர்கள் என்று நான் ஏற்க்கனவே சொல்லிவிட்டேன் என்றாள் .

சரிமா, நீ பேபி கிடையாது என்றால் பிறகு ஏன் எனக்கு தனியாக இருந்தால் பயமாக இருக்கும் என்று மதுராவிடம் சொன்னாய் ,நான் உன்னை தனியாக வேறு ரூமில் படுக்க வைத்துவிடுவேன் என்று பயந்துவிட்டாயோ?

என் பொண்டாட்டிக்கு தனியாக படுத்தால் பயமாக இருக்கும். அதனால் இனி எப்பொழுதும் என்னுடன் தான் தூங்கவைப்பேன்! “ஓகே” என்று கண்களிலும் உதட்டில் சிரிப்புடனும் குரல் மட்டும் சீரியசாக இருக்கும்படி கூறினான் .

அவன் அவ்வாறு கூறியதும், ழையா இல்ல.. இல்ல.. எனக்கு பயம் எதுவும் கிடையாது, நான் தனியாகத் தூங்கிக்கொள்வேன் என்றாள் ழையா .

அவள் பேசும்போதே அவளின் அருகில் வந்தவன் அவளின் கை பிடித்து எழுப்பி ம்....கூம் சான்சே கிடையாது என்றவனை நிமிர்ந்து கண்களைவிரித்துப் பார்த்தாள்.

இப்படி உன் கண்களை விரித்து நீ பார்க்கும் போது, நான் கொடுக்க நினைக்கும் உத்தரவாதத்தை கொடுக்காமல் விட்டுவிடலாம் போல் உள்ளது பேபி, என சரமான குரலில் கூறினான்

அவன் கூறியதும் பல்லை கடித்தபடி முதலில் அது என்ன உத்திரவாதம் என்று சொல்லுங்கள் பாஸ் என்றாள்

அவள் அவ்வாறு கூறியதும், என்ன சொன்ன பாஸ் என்றா? என்றவன் சகிக்கலை இப்பொழுது நான் உனக்கு பாஸ் இல்லை .என்னில் பாதி என் பெட்டர்ஹாப், சோ, என் பேர்சொல்லியோ அல்லது ரொமாட்டிக்கா வேறு ஏதேனும் பேர் சொல்லியோ என்னை கூப்பிடு என்றவன், என் உத்தரவாதம் என்னவென்றால் என்றவன் ஒரு பெருமூச்சோடு.

“நீ என் அருகாமையை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் வரை மட்டும் உன்னுடன் சேர்வததை தவிர்க்க முற்சிப்பதாக உத்தரவாதம் தருகிறேன்” என்றான் .

அவன் அவ்வாறு கூறியதும் வெடுக்கென்று அவன் கையை தட்டிவிட்டு தன்னுடைய முகத்தை திருப்பிக்கொண்டு அதென்ன முயற்சி மட்டும்தான் செய்வதாக உத்தரவு கொடுக்கிறீர்கள் என்றவள், பாஸ் என்று சொல்வதை தயக்கத்துடன் சொல்லி முடித்தாள்.

அதுவரை விளையாட்டாக் பேசிக்கொண்டு இருந்தவன் முகத்தில் ஒரு தீவிரம் வந்ததது, ழையா நான் இதுவரை செய்யும் எல்லா விசயத்தையும் என் கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருப்பேன் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.