(Reading time: 9 - 17 minutes)

05. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

ன்று முழுவதும் இறுக்கமாகவே இருந்த சந்தாவின் முகம் கண்டு யோசிக்கலானாள் வேதா…

“ஏய்… ரித்தி… என்னாச்சு… சந்தாக்கா முகமே சரியில்லை…”

சைகையில் வேதா ரித்தியிடம் கேட்க, அதற்கு அவளும் அப்புறம் சொல்வதாக கையை ஆட்டி மௌனமாகவே கூற, மூஞ்சைப்பாரு என திட்டினாள் வேதா….

பின் ஒருவழியாக வேலை நேரம் முடிந்து வீட்டிற்கு திரும்பினர் மூவரும்…

வரும் வழி எங்கும் சந்தாவிடம் அமைதியே நிலவ, ரித்தியும் வேதாவிடம் நடந்ததைக்கூறினாள்…

அதைக் கேட்டதும் எப்படி ரியாக்ட் செய்வதென்றே தெரியாமல் குழம்பி போய் நின்றாள் வேதா…

அவளின் கைப்பிடித்து கண் மூடியவள், தங்களது வீட்டிற்கு வர, சந்தா குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் வேகமாக…

“சே… என்ன ரித்தி… இப்போ சந்தாக்காவை எப்படி சமாதானம் செய்யுறது?...”

“எப்படியாச்சும் நாம தான் செஞ்சாகணும்…. வேதா…”

“ஹ்ம்ம்… ஆமா ரித்தி… அதுவும் இன்னைக்கே இப்பவே செஞ்சாகணும்…”

“அது என்ன இன்னைக்கே?...”

“ஹே… மறந்துட்டியா?... நாளைக்கு என்ன டே?...”

“நாளைக்கு என்ன டே…..” என யோசித்தவளுக்கு நொடிப்பொழுதில் விளங்க,

“மை காட்… ஆமால்ல… சுத்தம்.. அப்போ டார்லிங்கை இன்னைக்கே இப்பவே சரி செஞ்சாகணும்…” என்றாள் ரித்தியும் வேகமாக…

“நாம சரி செஞ்சாலும், சந்தாக்கா நாளைக்கு திரும்பவும் அதே மைன்ட் செட்க்கு போயிடுவாங்க…”

வேதா அப்படி சொன்னதும், அவள் வார்த்தைகளை உள்வாங்கிய ரித்தி,

“நாளைக்கு சொக்கு வேற வந்தே ஆகணும்னு அடம்பிடிக்கிறார்டி… இல்லன்னா நான் இங்கேயே இருந்துடுவேன்… இப்போ என்ன பண்ணுறதுன்னே எனக்கு புரியலையே…” என்றாள் கவலையுடன்…

“விடு ரித்தி… நான் சந்தாக்கா கூடவே இருக்குறேன்… நீ போயிட்டு வா…”

“லூசா நீ… அம்மா போன் போட்டு சொன்னது நினைவில்லையா உனக்கு?... ஏற்கனவே நீ ஒரு மாசமா ஊருப்பக்கம் எட்டி கூட பார்க்கலை… அதுவும் ஞாயிற்றுக்கிழமை திருவிழா வேற வருது… நீ நாளைக்கு காலையில கிளம்பினா தான், நைட்க்குள்ள ஊருக்குப் போய் சேர முடியும்…”

“எல்லாம் சரி தான் ரித்தி… ஆனா, சந்தாக்காவை விட்டுட்டு… எப்படி?...”

“அவளையும் ஊருக்கு போக சொல்ல்லாம்…”

“எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி சொன்னா எப்படி ரித்தி?...”

“வேற என்னடி பண்ணுறது?... நம்ம இரண்டு பேராலயும் நாளைக்கு அவ கூட இருக்க முடியாது… அவ இங்க கிடந்து தனியா கஷ்டப்படுறதுக்கு அங்க ஊருக்குப் போறது தான் பெட்டர்….”

“பட், சந்தாக்கா சம்மதிப்பாங்களா?...”

“அப்படி அவ ஒத்துக்கலைன்னா, நான் என் வீட்டுக்கு கூப்பிடுறேன்.. அப்போ தானாவே அவ ஊருக்கு கிளம்பிடுவா….”

“இங்க நாம இரண்டு பேரும் இருந்தே, சந்தாக்கா முகத்துல சிரிப்பு வரவைக்க படாத பாடு பட வேண்டியிருக்குது… இதுல ஊருல?... என்னால நினைச்சேப் பார்க்க முடியலை ரித்தி…”

“பயப்படாத… அங்க தான் குட்டீஸ் இருக்குறாங்கள்ள…. அவங்க பக்கத்துல இவ இருக்கும்போது, எல்லாம் சரியா தான் நடக்கும்…”

“கரெக்ட் தான்… ஆனா, மத்தவங்க?...”

“வேதா நீ சொல்ல வர்றது எனக்குப் புரியுது… ஆனா, இப்போ நமக்கு இருக்குற ஒரே வழி, சந்தா ஊருக்குப் போறது தான்…”

“ஏன் ரித்தி, உன்னால இந்த தடவை சந்தாக்கா கூட இங்க இருக்க முடியாதா?...”

வேதா தயக்கத்துடன் கேட்க, அவளை ஒரு புருவம் உயர்த்தி பார்த்த ரித்தி,

“இல்ல வேதா… சொக்குவை நான் பார்த்தே ஆகணும்… அதுமில்லாம கொஞ்சம் வேலையும் முடிக்க வேண்டி இருக்கு… அதை இப்பவே முடிச்சே ஆகணும்…” என உறுதியுடன் கூற, அவளின் அந்த அழுத்தமான வார்த்தைகள், அது வந்த தொனி இரண்டும் சேர்ந்து வேதாவினை யோசிக்க வைத்தது…

“நீ என்ன நினைக்குறன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது வேதா… ஆனா என் நிலைமையும் அப்படித்தான் இருக்கு…”

ரித்தி அமைதியாக கூற,

“சரி ரித்தி… நீ போயிட்டு வா…” என்றாள் வேதா தயக்கம் இல்லாமல்…

“குட்… இப்போ தான் நீ நல்லப்பொண்ணு…”

“ஹ்ம்ம்… போதும் போதும்.. ஐஸ் வைக்காத…”

“இதோடா… இவ பெரிய இவ… இவளுக்கு ஐஸ் வேற வைக்குறாங்களாம்… அட போடி…”

ரித்தி கேலியுடன் கூற வேதாவோ அவளை முறைத்தாள்…

குளியலறையிலிருந்து வெளிவந்த சந்தா, அமைதியாக வந்து ஜன்னலின் வழி வெளியே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள்…

அவளது செயலைக் கண்டு வேதா ரித்தியிடம் ஏதாவது செய் என கூற, நான் பார்த்துக்கொள்கிறேன் என கண் சிமிட்டினாள் ரித்தி…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.