தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ-அந்த(ஒளியில் அவளின் உருவன் மயக்க)
தீபத்தினால் ஓர் நெஞ்சைஎரித்தால்(ஓர் பெரும்மூச்சை விட்டபடி)
தீபமும் பாவமன்றோ.
கவிழையா கடவுளிடம் அவனுக்கு இந்த ரசிப்புத்தன்மையை ஏன் கொடுத்தாய் என்று முறையிட்டு, இவனிடம் நான் இன்னும் தோற்றுவிடுவேனோ? என்று நடுக்கமாக கேள்வியை மனதினுள் கேட்டாள் .
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் –அந்த
வரிசையில் உள்ளவர் மாட்டும்மல்ல அட
நானும் ஏமார்ந்தேன்
அவன் திரும்பவும் கூட சேர்ந்து பாடியதில் அடங்கமாட்டான் என்று கோபத்துடன் கையில் வைத்திருந்த புத்தகத்தை தூக்கி போட கை ஓங்கினால் .வேகமாக அவளின் அருகில் வந்தவன் அவள் கையை எறியவிடாமல் இறுக்கமாக பிடித்தவாறு
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படிவரைதானே ஓர்(அவனின் பனியனில் இல்லாத காலரை தூக்கிகாண்பித்தபடி)
ஆதிக்க நாயகன் சாதிக்கவந்தால்
அடங்குதல் முறைதானே .
என்று பாடியபடி புத்தகத்தை கை பற்றி அவளையும் ஓர் கையில் பிடித்தாறு புத்தகத்தை அதற்குரிய இடத்தில் வைத்தவன் அவளை இழுத்துக்கொண்டு படுக்கையில் விழுந்தான் .
அவனின் பிடியில் இருந்து விடுபட ழையா முயன்றாள் உடனே மஹிந்தன் கூறினான் என் பிடியில் இருந்து நீ எவ்வளவு முயன்றாலும் உன்னால் விலகிப் போக சான்சே இல்லை பிறகு ஏன் வீணா உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ற பேபி ,பேசாமல் தூங்கு என்று கூறியவன் அவளை தன் கையனைப்பிலேயே வைத்துக்கொண்டு கண்மூடினான்
ழையாவிற்கு முதல்முதலாக் ஓர் ஆணுடன் நெருக்கமான அணைப்பில் இருந்தவளுக்கு அவனின் வன்மையான ஸ்பரிசம் அவளின் மென்மையை வசியப்படுத்துவதை அதிர்வுடன் உணர்ந்தாள் மேலும், அவனின் மேல் இருந்து வந்த பாடி லோசனின் மனமும் அவனுக்கே உரிய ஆண்மையின் வாசனையும் அவளுக்கு மயக்கத்தை கொடுப்பதை எண்ணி அவளுடனேயே அவள் போராடும் நிலமைக்கு ஆளானாள் .
அவள் தயக்கத்துடன் ப்ளீஸ் கொஞ்சம் என்னை விடுங்களேன் நான் சோபாவில் படுத்துக்கொள்கிறேன் நீங்கள் கீழே இருக்கும் போது என்ன சொன்னீர்கள் என் மனது உங்களை ஏற்றுக்கொள்ளும் வரை தள்ளி இருப்பீர்கள் என்று சொன்னது பொய்யா? என்றாள்
உடனே மஹிந்தன் ஏய் நான் உன்கூட ரொமான்ஸ் பண்ணும் எண்ணத்தில் இப்பொழுது இல்லை ஆனாலும் இப்படி படுக்க நீ உன்னை பழகிக்கொள் என்றான்
என்னை விடுங்கள் பாஸ் நான் சோபாவில் படுத்துக்கொள்கிறேன் என்று அவனுடன் தன்னை சேர்ந்து அனைத்துப் படுத்திருந்ததால் இயல்பாக பேசமுடியாமல் தடுமாற்றத்துடன் அவள் குரல் ஒளித்தது
அவள் மனதிற்குள் என் சம்மதம் இல்லாமல் ரோமான்ஸ் செய்யமாட்டேன் என்று என்னை கட்டிப்பிடித்து கூறும் இவனின் அட்டூழியம் இருக்கே..... என்று பற்களை கடித்தபடி விடுபட முயற்சி செய்தாள் .
அவள் திமிற திமிற “அவளை திமிற முடியாமல் செய்ய அவன் இன்னும் அவளை இருக்க அணைத்தபடி” ஹஸ்க்கி வாய்சில் அறிவிருக்கா...டீ நான் பாட்டுக்கு சாதாரணமாக என் கைவளைவில் உன்னை வைத்துக்கொண்டு தூங்கலாம் என்று நினைத்தேன் , நீ என்னடாவென்றால் தில்லித்துல்லியே தப்புப்பண்ண வச்சிடுவபோல இருக்கு, அடங்கி படுத்தால் ஒண்ணும் செய்யமாட்டேன் இல்லாட்டி உன்னை அடக்கி ஆண்டுவிடுவேன் எப்படி வசதி? என்று கூறினான் .
அவன் அவ்வாறு கூறவும் அவள் டக்கென்று திமிறுவதை நிறுத்தி கண்களை அகல விரித்து அவனைப் பார்த்தாள்
அவள் கண்களை விரித்து தன்னை பார்த்ததும் அச்சோ இவளின் உடல் மென்மையில் நான் வலுக்கிவிழுந்திருக்கும் இந்தநிலையில் இப்படி பார்த்து என்னை தடுமாரவைகிறாளே என்று நினைத்தபடி ம்...கூம்.....என்று கண்களை இருக்க மூடி தூங்குவதுபோல் பாவலா காண்பிங்க ஆரம்பித்தான்
அசையாமல் அப்படியே படுத்திருந்த ழையா ஓர் கட்டத்தில் உறங்கிவிட்டாள். பொண்டாட்டியான பின்னாலும் தன்னால் அவளை முழுவதுமாக அடையமுடியாமல் அவளின் மனதில் தன்னால் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு கொஞ்சம் பொருத்துதான் ஆகவேண்டும் என்று ஓர் பெருமூச்சோடு தள்ளி படுக்க முயன்றான்
ஆனால் தூக்கத்தில் அவள் கை அறியாமலே தன் மேல் அணைத்தவாறு இருப்பதை பார்த்தவன் அந்தநிலையை மாற்ற விரும்பாமல் அப்படியே தூங்கமுயன்று வெற்றியும் பெற்றான்
தொடரும்
{kunena_discuss:1081}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.