(Reading time: 18 - 35 minutes)

மேலும் அன்றைக்குதான் காரில் வைத்து ரேடியோவில் என் மனதை உனக்கு சொல்லும்படி பாடல் ஒலித்தததோ, அதன் பிறகு தான் முதல் முதலாக உன்னை அறியாமலேயே நீ என்னிடம் ஒரு நிமிடம் முதல் முதலாக ஒரு நிமிடம் கிறங்கி நின்றாய், என்னால் அதை மறக்க முடியாது உன் கண்களில் நான் எதிர்பார்த்த பார்வை எனக்கு அன்று மட்டும் தான் கிடைத்தது. அதுவும் ரொம்ப கொஞ்சநேரம் மட்டும் தான் கிடைத்தது என்றான் எனவே அந்த நாளை நீயே எனக்கு சந்தோசமாக மறக்கமுடியாத நாளாகவும் செய்தாய்.

என்றவன், அன்றைக்கு போல் இன்றும் அவன் பற்றியிருந்த அவள் கையில் ப்ளீஸ் வேண்டாம் என்று சொல்லாதே ழையா என்றவன், முத்தமிட்டான் .

பின் அவள் கையை தன் வாயின் அருகில் இருந்து விலகாமல் பிடித்துக்கொண்டு கூறினான்

அன்றிலிருந்து நான் தினமும் இரவு ரேடியோவில் பாட்டு கேட்காமல் தூங்கப் போக மாட்டேன் பேபி என்று கிறங்கிய குரலில் கூறினான்

கதகதப்பான அவனின் கைப்பிடியில் அவனில் முத்தத்தின் ஈரம் காணாமல் போவதுடன் அவன் மீசையின் குறுகுறுப்புடன் அவனின் உள்ளங்கை சூடு தன் கை மூலம் தன் உடல் முழுவதுவும் பரவிய போது தன்னை மறந்து அன்று இருந்த அந்த ஓர் நொடி மயக்கத்தை அவன் உணர்ந்து கொண்டதை நினைத்து கொண்டே அன்று போல் இன்றும் மயங்கி நின்ற அவளை எளிதாக தன் கை பிடிக்குள் கொண்டு வந்து அவளின் உதட்டில் தேன் அருந்த ஆரம்பித்தான்.

ஒரு சில நிமிடங்களிலேயே தான் இருக்கும் நிலையை உணர்ந்த ழையா அவனிடம் இருந்து விடுபட முயன்றாள் அவளை எளிதாக அடக்கியவன் சில நிமிடம் கழித்தே அவளை விலக அனுமதித்தான்.

அவன் விட்டதும் வேகமாக் ரெஸ்ட் ரூமினுள் நுழைந்து கதவின் மேல் சாய்ந்து நின்றவளுக்கு இதயம் வேகமாகத் துடித்தது .

அவளுக்கு அவளின் மீதே கோபம் வந்தது. இவன் வசியக் காரன் ஏதேதோ கூறி என்னமோ செய்து என்னை வசியப் படுத்தப் பார்கிறான். ம்...கூம் அவன் எனக்கு செய்த எதையும் நான் சீக்கிரத்தில் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டேன். வீம்பாக அவன் கட்டாய திருமணம்செய்து தன்னையும் தன் குடும்பத்தையும் படுத்திய பாட்டை நினைத்தவளுக்கு முகம் இறுகியது.

வெளியில் வந்தவள் முகத்தை தாபத்துடன் பார்த்தான் மஹிந்தன் ஆனால் சற்று முன் அவன் அனைத்ததும் இளகி நின்றவள் இவள் தானா? என்று அவன் சந்தேகம் கொள்ளும்படியான முறைப்புடன் கூடிய பார்வையாக அவளின் பார்வை இருந்தது .

இருந்தும் அதை பொருட்படுத்தாதது போல் அவளின் அருகில் அவன் வருவதை பார்த்தவளுக்கு அவன் திரும்பவும் தன் அருகில் நெருங்கினால் தன்னால் அவனை எதிர்க்கமுடியாமல் போய்விடுமோ! என்று பயந்தாள், எனவே வேகமாக “அங்கேயே நில்லுங்கள் கிட்டவந்து தொட்டீங்கன்னா நான் பொல்லாதவள் ஆகிவிடுவேன்” என்று கண்களில் கோபத்துடன் சொன்னாள் .

அவளின் கோபம் அவனுக்கு விளையாட்டாக இருந்தது. இருப்பினும் அவன் மனதில் தன்னை கணவனாக நினைத்து தான் தொடுவதை இயல்பாக அவள் ஏற்றுக்கொள்ளும் வரை பொறுமையாக் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது .

அவளை சீண்டும் நோக்கத்துடன் ஓகே பேபி நான் வரல என்றவன், அப்பா! பார்வையாலேயே என்னை எரித்துவிடுவாய் போல என்றவன், சிரிப்புடன் உன் முறைப்பை பார்க்கும் போது நான் ரெண்டு நாளைக்கு முன் எப் எம் இல் கேட்ட ஒரு பாடல் எனக்கு நியாபகம் வருகிறது என்றவன் இரு அந்த பாட்டை நான் உனக்குப் போட்டு காண்பிக்கிறேன் என்றவன் அவளுக்கு பின்னல் இருந்த டேபிளின் மேல் உள்ள தனது மடிக்கணினியை எடுப்பதற்காக அவளை நோக்கிச் சென்றான் .

அவன் திரும்பவும் தன் அருகில் வருவதை பார்த்தவள் அவன் கை தன் மேல் பட்டுவிடாதபடி அவனை முறைத்துக்கொண்டே விலகிப் போவதை கண்டவன் யாருக்காகக் உன் கர்ப்பை காப்பாத்த இப்படி ஒதுங்கி போகிறாய் ழையா? என்றான் .

அவன் பேச்சில் ஆத்திரம் கொண்டவள் , உங்களை... என்று பல்லை கடித்தபடி ஒன்றும் செய்யமுடியாத இயலாமையுடன் போய் சோபாவில் அமர்ந்தவள் விரல் நகத்தை கடித்தவாறு அவனை முறைத்துப் பார்த்தாள் .

மஹிந்தன் தன்னுடைய கம்ப்யுட்டர் மேஜையின் முன் உட்கார்ந்து அவளின் கோபத்தை ரசித்தபடி நிழல்நிஜமாகிறது என்ற படத்தில் ,எஸ் .பி பாலசுப்ரமணியன் பாடிய பாடலை பிளே செய்தான் .

“கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஓர் மலர் என்றானே,

கற்பனை செய்தானே கம்பன் ஏமார்ந்தான் .

(அத்துடன் பாடிக்கொண்டே அவள் அருகில் சென்று உட்காரப் போனவன், அவளின் கோபத்தை பார்த்து, பயந்தது போல் பாவனை செய்தவன் ).

அம்புவிழி என்று ஏன் சொன்னான்.. அது பாய்ந்ததினால் தானோ

(என்று அவன் பாடவும் கொதிபடைந்தால் கவிழையா)

அருஞ்சுவை பாலென்று ஏன் சொன்னான் அது கொதிப்பதினால் தானோ .

( என்று சிரித்தபடி பாடலுடன் சேர்ந்து பாடினான்)

உட்கார்ந்து இருந்தவள் டக் கென்று முகத்தை திருப்பியபடி எந்திரித்து அங்கு இருந்த புக் செல்பில் இருந்த ஓர் புக்கை எடுத்து அதை வாசிப்பது போல் பாவனை செய்தால் .ஆனால் அடுத்து வந்த பாடல் வரிகளும் அவளின் செயலுக்குப் பொருத்தமானதாக சோதித்தது ழையாவை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.