(Reading time: 6 - 12 minutes)

HOD திரும்பி “வா.. செழியா.. இவங்கதான் மலர் விழி .. உன் subject க்கு assistant lecturer.. “

அவள் முகம் பார்த்து “welcome மேடம் “ என்று சொன்னவன், அவளின் கண்களை கண்டவுடன், அப்படியே நின்றான். காலையில் ஸ்கூட்டி இல் பார்த்த பெண். இவளா lecturer .. என்று... அதற்கு காரணமும் இருக்கிறது... lecturer என்பதால் பொதுவாக ட்ரெஸ் code saree தான். ஆனால் ஸ்கூட்டி இல் வரும்போது இவள் சட்டை போல் அணிந்து இருந்ததால், அவள் skirt டாப் அணிந்து இருக்கிறாள் என்று தான் எண்ணினான்.. அதனால் first இயர் ஸ்டுடென்ட் என்று எண்ணி இருந்தான். இப்போதோ அவள் saree இல் நின்று இருந்தாள்

மலரும் சற்று திகைத்துதான் நின்றாள். காலையில் அவனின் முகம் தெரியாவிட்டாலும், அவன் உயரம், டிரஸ் இது எல்லாம் பார்த்தவள் தானே.. அதனால் புல்லெட்டில் வந்தவர் இவர்தான் என்று புரிந்து கொண்டாள். ஆனால் அவரிடம் தான் வேலை செய்ய போகிறோம் என்று எண்ணியவுடன் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லை.

HOD யின் அழைப்பில் சுதாரித்த இருவரும் அவர் பேசியதை கவனித்தனர்.

“செழியன் .. நீங்கள் இவர்களை அழைத்துக் கொண்டு students இடம் இன்ட்ரோ கொடுத்து விடுங்கள்.. இன்று சிலபஸ் எல்லாம் பார்க்கட்டும்.. நாளையில் இருந்து டைம் டேபிள் போட்டுக் கொள்ளலாம்.. “ என,

இருவரும் சரி சார் என்றனர்.

“வாங்க .. மேடம்..” என்று கூட்டிக் கொண்டு காலையில் அவளை ராகிங் செய்த பசங்க இருக்கும் கிளாஸ் ரூமே முதலில் சென்றான்.

செழியனோடு இன்னொருவரும் வருவதை பார்த்த students எழுந்து நிற்க,

“ஹாய் students .. இவங்க மலர்விழி மேடம் ..நம்ம department க்கு புது வரவு.. “ என்று அறிமுகபடுத்த , இப்போது மற்ற அனைவரும் மீண்டும் ஒருமுறை அவளுக்கு விஷ் செய்து விட்டு அமர்ந்தனர்.

அப்போது இருவர் மட்டும் நிற்க, என்ன என்று பார்த்தவள் , காலையில் வம்பு செய்தவர்கள் என்றதும் அவர்களை நேராக பார்க்க,

“சாரி மேடம்.. நாங்க காலையில் சும்மா ஜாலிக்காக தான் அப்படி பண்ணினோம்.. “ என

“ஜாலி என்றாலும் அடுத்தவங்களை ஹுர்ட் பண்ற மாதிரி பண்ணக் கூடாது.. நீங்கள் சொன்னதை நான் செய்து இருந்தால் சார் முன்னால் என்னால் நின்றிருக்க முடியுமா..? என்னால் உங்களின் விளையாட்டு தனத்தை புரிந்து கொள்ள முடிந்தது. வேறு யாரவது என்றால் நேராக பிரின்சிபால் இடம் கம்ப்ளைன்ட் செய்து இருப்பார்கள்.. உங்களின் எதிர்காலமே கேள்விஆகி இருக்கும்.. “

“புரியுது மேடம்.. இனிமேல் இது போல் தவறு நடக்காது,,, “ எனவும்

“ஓகே.. சிட் டோவ்ன்..” என்றாள்.

அவளின் அணுகுமுறையை ரசித்தவன் , அடுத்த கிளாஸ்க்கு அழைத்து செல்ல என்னும்போது சற்று தைரியமான பெண்ணொருத்தி எழுந்து

“மேடம்.. நீங்க ப்ரேமம் மலரே... டீச்சர் அஹ “ என்று வினவ,, மொத்த கிளாஸ் உம சிரிச்சது.

அவளும் சிரித்துக் கொண்டே “ஐ.. இது கூட நல்லாத்தான் இருக்கு students.. “ என்றபடி கிளம்பினாள்.

அவளின் பேச்சிற்கு ஏற்ப அவளின் விழியும் அசைய, செழியனோ அந்த பேசும் விழிகளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

ஹாய் friends .. நான் உங்களுக்கு suspense கொடுக்கலாம் நு பார்த்தால் .. எல்லோரும் எனக்கு பல்பு கொடுத்துட்டீங்க... அல்மோஸ்ட் எல்லோருமே கரெக்ட் அஹ guess பண்ணிடீங்க.. எஸ்.. ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் lecturer தான்..

& கதைக்கான flow இப்போ தான் ஓரளவிற்கு செட் ஆக ஆரம்பித்து இருக்கு.. சோ இந்த வாரம் அவங்க இன்ட்ரோ வோட முடிக்கிறேன்.. இனிமேல் போக போக நிறைய pages தர ட்ரை பண்றேன்.. நன்றி..

தொடரும்!

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.