(Reading time: 18 - 36 minutes)

பார்த்து பேசு ரூபின்!” என்று அடிக்குரலில் சீறியவன் “இல்லைனா….” இப்போது பார்வை சௌம்யாவை தொட்டது.

‘ஏன்டா? ஏன்? எதுக்கெடுத்தாலும் என்னோட லவ்வை க்லோஸ் பண்றதுலியே குறியா இருக்க? உனக்கெல்லா நல்லது செய்யனும்னு நினைச்சனே, என்னை சொல்லனும்’ தனக்குள் புலம்பியபடி ஜெய்யை பாவமாய் பார்த்து வைத்தான்.

இவர்களை கவனித்திருந்த வேதிக், “கூல் சஞ்சய்!” ரூபினிடம் தான் சமாதான படுத்துவதாக கண்களில் சைகை செய்துவிட்டு தொடர்ந்தான்.

“சரயூவோட ஒரு கம்மல் தொலைஞ்சு போச்சு.  இஸ்கான் காம்பிடிஷன் போயிருந்தப்போதா இப்படி ஆயிடிச்சு” 

“இதுக்காடா இப்படி வயலின் வாசிக்கிறீங்க?” இரகசியமாக கேட்டான் ஜெய்.

ஒரு கம்மல் தொலைந்ததற்கா இத்தனை சோகம் என்றிருந்தது அவனுக்கு.  ஆனாலும் நினைத்ததை சத்தமாக சொல்லி, அதை சரயூ கேட்டு கோபபட்டால்… என்றுதான் இரகசியமாக பேசினான்.

“எனக்கு உன்னை புரியுது மச்சா! ஆனாலும் அது அவளோட அப்பா கொடுத்த கிஃப்ட்டா.  ஸோ ரொம்பவே ஸ்பெஷல்”

பரிசாக கிடைக்கும் எல்லாமே விசேஷமானது.  அதுவும் தந்தை பரிசாகக் கொடுத்திருக்கிறார் எனும் போது அவளின் மனநிலை புரிந்தது.

“சரூ, நீ கவலைய விடு! ஆர்டர் கொடுத்தா, அதே மாதிரி இன்னொன்னு செய்திடலாம்”

“இல்லை சஞ்சய்! அது வர்க் அவுட் ஆகலை.  நானும் சரயூவும் போய் இதே மாதிரி கம்மல் செய்ய ஆர்டர் கொடுத்திருந்தோம்.  அது ரெடியாடிச்சுனு கடைக்காரங்க காலைலியே ஃபோன் பண்ணி சொன்னாங்க.  சந்தோஷமா அதை வாங்கலாம்னு போனா, அந்த கம்மலோட அளவு வேற, டைமன்ட் கூட வேற மாதிரி இருந்தது.  ரெண்டு கம்மலையும் ஒன்னு சேர்த்தி பார்த்த போது, சுத்தமா ஒத்து போகலை.  சரயூ ரொம்ப கோபமா அந்த கடைக்காரனை பேசிட்டா”

“கடைக்காரன் பாவம்! இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சானோ?” என்று ரூபின் சொன்னதுதான் தாமதம், எல்லோரும் அவனை முறைத்தனர்.

‘ஒருத்தன் முறைச்சாலே, அடுத்து என்ன நடக்குமோனு உயிரை கையில புடிச்சிட்டிருக்கனு… இப்படி எல்லாரு முறைக்கிறாங்களே… சரி சரண்டர் ஆகிட வேண்டியதுதா’

“சரி சரி! நீ சொல்லு சௌம்யா” என்று திடமான குரலில் சொன்னாலும் கண்களில் மன்னிப்பை வேண்டினான் ரூபின்.  ‘இருக்கு உனக்கு’ என்று அனல் பறக்கும் கண்களால் செய்தி அனுப்பினாள் சௌம்யா.

“அவளும் பாவம்! வேற என்ன செய்ய முடியும்?! ஆர்டர் கொடுக்க போனப்போ ரொம்ப நம்பிக்கையா பேசின கடைக்காரன், இப்படி சம்மந்தமே இல்லாத மாதிரி ஒரு கம்மலை செய்து கொடுத்தால், சரயூ என்ன செய்றது? ஆனாலும், முதல்ல பொறுமையா, ஏன் இந்த கம்மல் வேற மாதிரி வந்திருக்குனு கேட்டதுக்கு… ஆர்டர் கொடுத்த மாடல் பீஸ் மாதிரியே செய்தாலும், கொஞ்ச ஏறக்குறையதா வரும்னு சொன்னான்.  அதோட நிறுத்தியிருந்தா கூட சும்மா வந்திருக்கலாம்”

தொழில் வகையில் கடைக்காரன் சொன்னது தவறாக படவில்லை.  என்னதான் ஒரு பேப்பரை ஜெராக்ஸ் செய்தாலும், அது ஒரிஜினல் காபி ஆகாதே!

“வேற என்ன சொன்னா?”

“இந்த கடைனு இல்லை, எங்க போனாலும் இப்படிதானு, அவன் சொல்லி முடிக்கவும் சரயூ அவனை நல்லா திட்ட ஆரம்பிச்சிட்டா.  இவன் செய்ய முடியலைனா அதோட விடாம யாராலையும் செய்ய முடியாதுனு நெகடிவா பேசின பிறகு, அவனை சும்மா விட்டுட்டு வர எனக்கும் பிடிக்கலை.  ஸோ நானும், என் பங்குக்கு கொஞ்ச பேசிட்டு வந்துட்டோம்”

“அதே மாதிரி கம்மல் செய்திரலாம்னு இருந்த நம்பிக்கையும் போச்சு! சரயூ ரொம்பவே வருத்த படுறா” தோழியின் வேதனையை குறைக்க முடியாது சௌம்யாவும் சோர்ந்தாள்.  

“சரூ! நீ அதை ஏன் மூக்குத்தியா மாத்த கூடாது?”

“இந்த ஐடியாவை சௌம்யா கூட சொன்னா.  சரயூ மூக்கு குத்திக்க மாட்டேன்னிட்டா” என்றான் வேதிக்.

வேறு யோசனையேதும் தோன்றாமல் எல்லோரும் அமைதியாயினர்.  சிறிது நேர மௌனத்திற்கு பின் ஜெய் சரயூவின் முன் எழுந்து நின்றான்.

“சரூ, அதை எங்கிட்ட கொடு!”

பாட புத்தகத்தில் கொஹினூர் வைரத்தை குறித்து அறிந்தவள், அதன் வரலாறு மற்றும் பிற தகவல்களை ஆராய்ந்து ஆச்சரியபட்டாள் சரயூ.  அந்த வாரம் முழுவதும் அதை பற்றியே பேசிய மகளை கவனித்த ரவிகுமார், அந்த பரிசை அளித்தார்.  ஒற்றை வைரக்கல்லை பூவாக்கி சுற்றி கொடியோடிய ப்லாடினத்தில், மிகவும் நுண்ணிய வேலைபாட்டுடன் ஜொலித்தது அந்த ஜோடி கம்மல்.  மிகச்சிறியதாக இருந்த அதை சாதாரணமாக பார்ப்போருக்கு, ஒற்றைக் கல் பதித்த சிறு கம்மலாக தெரியும்; உற்று பார்த்தால் ஒழிய பூவைச் சுற்றிய கொடி தெரியாது.    

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.