(Reading time: 17 - 33 minutes)

இப்போ எதுக்கு விலகிப்போகிற? என்று எரிச்சலுடன் கூறியவன், அவள் அருகில் வந்து அவளின் பின்னலை கையில் எடுத்து உன் முடி கூட என்னை மயக்குது பேபி.எப்படி இவவளவு நீள முடியை மெயின்டயின் பண்ற என்று கிறக்கத்துடன் கேட்டான்.

என் அம்மாவிற்கு முடியை கொஞ்சம் வெட்டிக்கொள்கிறேன் என்று கேட்டால், அவ்வளவு கோபம் வரும். அதனால் என்னால் வெட்டிக்கொள்ள முடியவில்லை என்று சலிப்புடன் கூறினாள்.

உன் அம்மாவிற்கு என்னை போல் உன் முடியின் மீது ஓர் மயக்கம் போல, அதனால் தான் வெட்டிக்கொள்ள விடல என்றவன், அதுசரி முடியை வெட்டிக்கொள்வதற்குக் கூட நீ உன் அம்மாவிடம் கேட்டுத்தான் செய்வாயா? என்று ஆவலுடன் பேச்சுக்கொடுத்தவாறு தன்னிடம் அவள் இயல்பாக இருக்கும் படி பார்த்துக்கொண்டான்.

அப்பொழுது அவனுடைய மொபைலில் அழைத்த வருண் கிளம்பிவிட்டீர்களா? என்று அம்மா கேட்கச் சொன்னார்கள், உங்கள் அம்மா அப்பா வருவதற்குள் நீங்கள் வந்துவிட்டால் நல்லது என்று அம்மா நினைகிறார்கள்.

உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் நீங்கள் அருகில் இருக்கும் போது பேசினால் சூழ்நிலை சுமூகமாக இருக்கும் என்று நினைகிறார்கள் என்றான்.

நாங்கள் ரெடி இதோ... கிளம்பிவிட்டோம் என்று சொல் வருண் என்றவன் போனை அனைத்து வைத்தான்.

ழையாவிடம் கிளம்பலாமா பேபி! என்று கேட்டான்.அதற்கு ழையா ம்.. என்று சொல்லியபடி அவனுடன் தன் வீட்டிற்கு போகும் ஆர்வத்தில் வேகமாக முன் செல்ல பார்த்தவளை கை பிடித்து கூட்டிவந்தவன் காரின் முன்பக்க கதவை திறந்து அவளை அமரச்சொன்னவன், சுற்றிவந்து டிரைவர் இடத்தில் அமர்ந்து, காரை எடுத்தான் புன்னகையுடன் காரின் எப் எம்ஐ இயக்கி பாடலை ஓடவிட்டான்.

தொடரும்

Episode # 16

Next episode will be published on 20th June. This series is updated fortnightly on Tuesdays at 12pm.

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.