(Reading time: 17 - 33 minutes)

திரும்பவும் தொலைபேசி ஒலி எழுப்பவும் தயக்கத்துடன் காதில் எடுத்து வைத்தவளிடம் ஓகே ழையா உன் இஷ்டம் போல் நீ தூங்கலாம் ஆனால் அதற்கு முன் சாப்பிட்டுவிட்டுத் தூங்கு என்றவன் இச் என்ற சத்தத்துடன் தன் முத்தத்தை கொடுத்துவிட்டு தொடர்பைத் துண்டித்தான்.

இங்கு ழையாவிற்கு தூக்கம் பறந்து ஓடிவிட்டது. முகம் கழுவி கீழே சென்றவளை பார்த்ததும் வாயில் இருந்த அத்தனை பற்களும் தெரிவதுபோல் சிரித்த கஸ்தூரி, “அய்யா சொன்னதும் தட்டாமல் சாப்பிடவந்துவிட்டார்கள் “என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அவளுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.

ழையாவும் தனியாகச் சும்மா உட்கார்ந்துகொண்டு இருந்தால் தேவையில்லாத எண்ணம் வந்து பாடாய் படுத்தும் எனவே கீழே இறங்கிவந்தாள். வரும் போது மஹிந்தன் இல்லாததாலும் கவனத்தை திசை திருப்பும் நோக்குடனும் வீட்டின் அழகை கண்களால் சுற்றிப் பார்த்து அதிசயத்துடன் பார்த்தாள்.

அவள் நேற்று இங்கு வரும் போது அவள் மனதிற்குள் பலவித பயம் மிரட்சி இருந்ததாலும் இன்று காலை பேட்டி எடுக்கப் போவதனால் வந்த டெண்சனாலும் பின், மஹிந்தன் போனபின் நேற்று இரவு சரியாக் தூங்காததாலும் மனச் சோர்வினாலும் எதையும் ஆராய்ந்து பார்க்காமல் உடைமாற்றிப் படுத்தவள் தூங்கிவிட்டாள்.

இப்பொழுதுதான் அவள் இருக்கும் வீட்டின் அழகை கவனித்தாள். பளிங்கு மாளிகையாக அது இருந்தது. வீட்டின் ஹாலில் மையத்தில் தொங்கவிட்டுருந்த சாண்டில்யன் விளக்கின் அழகும் உயர்ந்த சீலிங்கும் வரவேற்ப்பு அறையில் இருந்து தொடங்கிய படிக்கட்டின் அழகான வேலைப் பாடுள்ள மரத்தால் ஆனா கைப்பிடி, படிக்கட்டின் ஒருபுறம் ஆரம்பித்து மாடியின் தளத்துடன் வந்து முடியாமல் மாடிக்கு பால்கனிதடுப்பாக, அவ்விசாலமான வரவேற்பறையின் மேல் வட்டவடிவில் ஓடி மற்றோற் படிக்கட்டின் கைப்பிடியாக இறங்கி கீழே சென்று முடிந்திருந்தது. கீழே சென்றவள் அங்கு மாட்டப்பட்ட சட்டங்களுக்குள் அடங்கியிருந்த ஓவியங்களை பார்த்தபடி இறங்கியவள், அழகான தங்கநிற பிரேமினுள் இருந்த அவளின் ஓவியத்தை அப்பொழுதுதான் உற்றுப் பார்த்தாள். முதல் பார்வைக்கு புகைப் படம் போலவே இருந்த அந்த படத்தை நெருங்கி பார்த்ததும் தான் தெரிந்தது அது அவளின் புகைப் படம் அல்ல தனது ஓவியம் என்பதை உணர்ந்தவள், ஆர்ட் பை மஹிந்தன் என்று இருந்த எழுத்தை கண்டதும் அசந்து போனாள்

ஏனெனில், முதல்நாள் அவள் வேலைக்கு வர சிரத்தையுடன் அவள் தேடிப்பிடித்துவாங்கிய உடையில் அது இருந்தது.

“இந்த அளவிற்கா அவனின் மனதில் நான் பதிந்துள்ளேன்!” என்ற அலை மனதில் அடித்தது.

கஸ்தூரி, அம்மா! சாப்பாடு எடுத்துவைத்துவிட்டேன். ஆறிவிடும் வாருங்கள் என்று கூப்பிடவும் சாப்பாடுமேசை நோக்கிச் சென்றாள்.

அங்கு ழையாவுடன் பேசிவிட்டு தொடர்பைத் துண்டித்தவன் முகத்தில் புன்சிரிப்பு குடியேறியது அவன் மீட்டிங்கில் மலர்ச்சியான முகத்துடன் கலந்து கொண்டு தன் பெயரில் அதிகம் ஷேர் உள்ளதை அறிவித்து அதற்குரிய ஆவணங்களைக் காண்பித்தான். எப்பொழுதும் இது போன்ற இக்கட்டான சூழ்நிலை வராது என்று கூறி, அங்கு பிசினஸ் பார்டிக்கு ஏற்பாடு செய்தவன் பார்டியில் பங்கெடுக்காமல் தனக்கு வேலை இருப்பதாக கூறிவிட்டு தனது தந்தையிடம் விடை பெற்றான்.

உடனே அவர், “ஐ அம் பிரவ்டு ஆப் யூ மை சன்” என்றார்.

பார்டியில் கலந்துகொள்ள வந்திருந்த அவனின் தந்தையின் பிரண்டு, “உன்னை என் மருமகள் பார்டியில் கலந்துகொள்ளவிடாமல் இழுக்கிறாள் போல” என்று கூறி சிரித்தார்.

உடனே மஹிந்தன் நீங்கள் இப்பொழுதும் ஆண்டி கூப்பிடதும் ஓடிவிடுகிரீர்கள்.நான் புதுமாப்பிள்ளை போகாமல் இருப்பேனா? என்று கூறினான். நீ கிளம்பு மஹி. கவிழையா தனியாக இருக்கிறாள் என்று விடை கொடுத்தார்.

அவன் என்னதான் வேகமாக வந்தாலும் இரவு மணி பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது.தன் ரூமிற்கு வந்தவன் சத்தம் இல்லாமல் ரெப்ரஸ் ஆகிவிட்டு, தன் படுக்கையில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்த ழையாவைப் பார்த்தான்.

தூக்த்தில் கூட ஆடை சிறிதும் குலையாமல், ஒருக்களித்து வெள்ளைநிற மெத்தையில் அவள் உறங்கும் அழகை ரசித்துப்பார்த்தான்

அப்பொழுது முன்பு ஒருமுறை தன் வீட்டு மாடியில் தன்ரூமில் இருக்கும் போது வந்த ஐஸ்வர்யா அவளின் அங்கங்கள் பளிச்சிட தன் முன் படுத்த நியாபகம் வந்தது

உடனே சை.... அவள் கூடபோய் என் பேபியை கம்பேர் செய்து பார்பாதா? ம்...கூம் என்று தலையசைத்தவன் அவளின் அருகில் நெருங்கிப் படுத்தான்.

அவ்வளவு நேரம் தூக்கம் வராமல் புரண்டு படுத்தவள் அப்பொழுதுதான் கண் அசந்து இருந்ததாள். தன் அருகில் அவன் நெருங்கிப் படுத்ததும் உள்ளுணர்வின் உந்துதலால் கண்திறந்து பார்த்தவளின் முகத்தின் அருகில் அவனின் முகத்தைப் பார்த்தவள் தூக்கம் களைந்து எந்திரிக்க முயன்றால், ஆனால்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.