(Reading time: 19 - 37 minutes)

“நான் என்ன சொல்லணும்” அப்போதும் ஹரிணி அந்தப் பேச்சினை தட்டி கழிக்கப் பார்த்தாள்.

ரஞ்சனி பிடிவாதமாய் அவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்க ஹரிணி அவள் முகத்தைப் பார்த்து, “என்னை பொறுத்த வரையில் இந்த ஆடை அலங்காரம் உனக்கு சுத்தமா பொருந்தவே இல்லை. உன் டிரஸ் மேக்அப் ரெண்டும் பொருந்தியே வரல. அழகு என்பது போடும் உடையில் நகையில் ஒப்பனையில் இல்ல ரஞ்சு. இட் இஸ் ஹவ் யு கேரி யுவர்செல்ப். உன்னோட கான்பிடன்ஸ், ஆட்டிடியுட், உன்னோட ஒரே ஒரு ஸ்மைல் திஸ் டிபைன்ஸ் யுவர் பியூட்டி” என்று சொன்னதும் ரஞ்சனிக்கு எப்போதும் போல கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

அப்புறம் என்ன சுற்றி இருந்தவர் தூபம் போட ஆரம்பித்தனர்.

“இப்படியா ஹர்ட் செய்வா”

“அவளுக்கு பிடிக்கலனாலும் நல்ல இருக்குன்னு சொன்னா என்னவாம். குறைந்தா போய்டுவா”

“உலகமகா திமிரு டி அவளுக்கு. நீ அழாத ரஞ்சு”

எல்லோரும் ரஞ்சனியை சமாதானம் செய்தனர். ஹரிணி ரஞ்சனி கண் கலங்கியதைப் பார்த்தும் தன் கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்கவில்லை.

“ரஞ்சனி என்னால மனசில் ஒன்று உதட்டில் ஒன்றுன்னு ரெண்டு விதமா பேச முடியாது. உனக்கு இது நல்லா தெரியும். நீயா கேட்கவும் தான் நான் சொன்னேன். உன்னோட இடத்தில நான் இருந்திருந்தா பர்ஸ்ட இன்னொருத்தர் கிட்ட கருத்தே கேட்டிருக்க மாட்டேன். அப்படி நான் கேட்ட ஐ வில் பீ ஓபன் டு எனி கமண்ட்ஸ்”

சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி சென்றுவிட்டாள்.

“ரஞ்சு. நீ என் ரூம்க்கு வந்திரு. நாம அட்ஜஸ்ட் செய்துக்கலாம். இவளோட இருக்க வேண்டாம்” கவிதா சொல்லவும் மறுத்தாள் ரஞ்சனி.

சிறிது நேரம் கண்மூடி அமர்ந்திருந்தாள். ஹரிணி போல தானும் இருக்க வேண்டும் என்று அவளுக்கு ஆசையாக இருந்தது.

எதையும் சட்டை செய்யாமல், மற்றவர் பேச்சுக்கு பயந்து சாகாமல் தன்னிஷ்ட படி இருக்க ஆசையாக இருந்தது.

ஆனால் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. அவளது அடிப்படை குணம் முரண்டு செய்தது.

ரஞ்சனியின் குணத்தை ஹரிணி நன்கு புரிந்து வைத்திருந்தாள். அவளோடு சற்று இணக்கமாகவே இருந்து வந்தாள்.

இந்நிலையில் ஹர்ஷவர்தன் பற்றிய விவாதங்களை ஹரிணி அசட்டை செய்ய ரஞ்சனியோ அதில் வெகுவாக ஆர்வம் கொண்டாள்.

மறுநாள் காலை அனைவரும் அனாடமி வகுப்பில் குழுமி இருந்தனர். அன்றும் டிசக்க்ஷன் வகுப்பு இருந்தது.

இறந்தவர் உடலை பார்மலினில் பதப்படுத்தி மாணவர்கள் செயல்முறையில் பயிலவென டேபிளில் கிடத்தியிருப்பார்கள். அதைக் கடாவர் CADAVER என்பர்.

முதல் நாள் அனாடமி வகுப்பு அனைவருக்கும் சற்றே அச்சமூட்டுவதாக இருந்தது. ஹரிணிக்கும் அவ்வாறே.

அன்று அவர்கள் புரபசர் கூறியதை மனதில் ஆழப் பதித்துக் கொண்டாள்.

“இதோ உங்கள் முன் உயிரற்று நீங்கள் பயில இங்கு இருக்கும் கடாவர்வர்கள். முன்பு மனிதர்களாக  நடமாடியவர்கள். சொந்த, பந்தங்கள், பதவி, பட்டம், சொத்து சுகம் எல்லாம் பெற்றிருந்திருந்திருப்பர். ஆனால் இன்று உங்கள் முன் இருப்பது ஓர் மனித உடல் மட்டுமே. பின்னாளிலும் நீங்கள் உயிருள்ள மனிதருக்கு சிகிச்சை அளிக்கும் போது நினைவில் கொள்ளுங்கள். அந்த மனிதர் ஆண், பெண், ஏழை, பணக்காரன் என யாராயினும் உங்களைப் பொறுத்த வரை ஒரு மனித உடல். அதன் பிணி தீர்ப்பதே உங்கள் கடமை”

இருப்பினும் மாணவர்கள் அவர்களின் கற்பனைக் குதிரையை பறக்க விடவே செய்தனர். சிலர் பேய் கதைகளைப் பரப்பினர். சிலர் அங்கிருந்த கடாவர்களுக்கு தாங்களாகவே கதை திரைக்கதை வசனம் எல்லாம் அமைத்தனர். அனாடமி டிசக்க்ஷன் வகுப்பு எப்போதும் சலசலப்பாகவே இருக்கும்.

அன்று உள்ளங்கையை டிசக்ட் செய்து கொண்டிருந்தனர் ஹரிணியும் அவள் டேபிள் மேட்ஸ்ஸும்.

“ஹேமந்த். ஓபன் தி புக். ஐ ஷால் ஸ்டார்ட் பர்ஸ்ட்” ஹரிணி சொல்ல ஹேமந்த் க்ரேஸ் அனாடமி புக்கை விரித்து வைத்தான்.

ஹேமமாலினி அதில் இருந்த பகுதிகளை உரக்க வாசிக்க புத்தகத்தில் இருந்த படத்தைப் பார்த்து கொண்டு  கையில் இருந்த ச்கேல்பல் என்ற சிறு கத்தி கொண்டு கடாவரின் உள்ளங்கையில் கீறினாள் ஹரிணி.

“ஒஹ் மை காட். ஷி ஜஸ்ட் கட் ஆப் ஹிஸ் லைப்லைன். தட்ஸ் வை ஹி ஸ் ஹியர்” தனது தலைக்கு மேல் கேலி இழையோட ஓர் குரல் கேட்கவும் சட்டென திகைப்படைந்த ஹரிணி கையில் இருந்த ச்கேல்பலை கீழ போட்டு விட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.