(Reading time: 12 - 23 minutes)

நம்ம எதிர்காலம் கருதி நான் சில முடிவுகளை எடுத்திருக்கேன் கமல் இனி நான் நடனமாடப் போவதில்லை. சீக்கிரம் கல்யாணம் செய்து குடும்பம் குழந்தைகள்ன்னு வாழப்போறேன்.

வெரி குட். இது நல்ல முடிவுதான். சீக்கிரம் கல்யாணம், சொத்துக்கள் எல்லாம் உன் அத்தை குடும்பத்திற்கு நாம ஏற்கனவே பேசியதில் எந்த மாற்றமும் இல்லை, நீ இரண்டாவதாக சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை கண்மணி, உன்னை முதன் முதலில் சந்தித்து போது நீ என்னை ஈர்த்ததே உன் நடனத்தினால்தான் தானே, அதை எனக்காக நீ இழக்கக் கூடாது, மனைவியின் தனித்தன்மைகளை மறுக்கும் அளவிற்கு நான் கீழ்த்தரமானவன் நானில்லை மாயா. அதுவும் இந்த நடனம் உங்கம்மாவின் ஆசைன்னு நீ சொல்லியிருக்கிறே அப்படிப்பட்ட பரதத்தை ஏன் விடணுமின்னு சொல்றே மாயா?!

சொல்றேன் கமல், எனக்கு தாயாகவும், தந்தையாகவும், தனிமையை விரட்டற ஒரு நல்ல துணையாகவும் தான் உங்களை நான் பாக்குறேன். சந்துருவை எந்த மானமுள்ள பெண்ணும் கட்டிக்க மாட்டா. எனக்கு சொத்து வேண்டாம், நான் ஆடறதையும் நிறுத்திட்டு உங்களை கல்யாணம் செய்திட்டா என்னோட வாழ்க்கை முழுமையடைஞ்சிடும் கமல், என்னோட ஆசை இதுதான் கல்யாணம் ஒரு வருஷத்திற்குப் பிறகு, ஒரு குட்டி கமல் ஒரு குட்டி மாயா, போதும் இந்த ஜென்மம் பலனடைஞ்சிடும்.

உணர்ச்சிப் பெருக்கில் அவள் பேசிக்கொண்டே போவதை கண் இமைக்காமல் பார்த்தான் கமல், உனக்குள்தான் எத்தனை ஏக்கங்கள், தவிப்புகள் எதிர்பார்ப்புகள் இறுதி வரை பொய்க்காமல் பார்த்துப்பேன்.

ஏர்போர்ட்டிற்கு கார் வந்தது, கமல் இறங்க எத்தனிக்க, மாயா அவனை தன்பக்கம் இழுத்துக் கொண்டு அவனின் இதழோடு பேசினாள் . ஒரு முழுநிமிடம் இருவரும் பிரிந்தார்கள். இப்படி பிரிவு உபசாரம் தருவதாய் இருந்தால் நான் தினமும் வெளியூருக்குச் செல்லத் தயார் என்றவனின் விலாவில் இடித்து, பார்த்து பத்திரமாக போய்வாருங்கள் என்று கண்ணீர் தளும்பும் விழிகளோடு தலையசைத்தாள். இன்று என்னைக் கண்ணீரில் தள்ளிவிட்டாள். அதுதான் நான் மாயாவைக் கடைசியாகப் பார்த்தது.

ழப்பு பெரியதுதான் தயவு செய்து அதிலிருந்து மீண்டு வாருங்கள் கமல். அப்போதுதான் உங்கள் காயங்களுக்கு காரணமானவர்களை தண்டிக்க இயலும். மாயாவுக்கும் உங்களுக்குமான காதல் உங்களைத்தவிர வேறுயாருக்குத் தெரியும்.

அசோக்கிற்கு மட்டும் தான் எனக்கு அவனை விட்டா வேற யாரும் இல்லை, மாயாவுக்கு அவளிடன் காரியதரிசி வினிதாவும், லாயர் குமாரும் விசுவாசிகள்ன்னு என்கிட்டே சொல்லியிருக்கா.

உங்ககிட்டே அடிக்கடி சந்துருவோ பர்வதம்மாளோ மிரட்டுவதா சொல்லியிருக்காங்களா?

இல்லை ஸார். கூடுமானவரையில் மாயா வீட்டில் யாருடனும் பேச்சுக் கொடுப்பதில்லை, நடனம், இசை இதுமட்டும்தான் அவளின் உலகமாகி விட்டு இருந்தது?

இன்ஸ்பெக்டர் மிரட்டல்ன்னு சொன்னதும் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருது. இயக்குநர் கவின் ஒரு முறை மாயாவோட நடனத்தைப் பார்த்தாராம், அவருடைய படத்தில் நடிக்க வேண்டி முயன்று இருக்கிறார். மாயா தொடர்ந்து மறுத்து வரவே, ஆரம்பத்தில் அமைதியாய் கேட்டவர் பிறகு நீயெப்படி நடனம் ஆடுவேன்னு பார்க்கலாம். என்று மிரட்டியதா ஒருமுறை சொல்லியிருக்கா.

அப்படியா ? முதல்ல அந்த கவீனை விசாரிக்கலாம், அதற்கு பிறகு தகுந்த திட்டத்தோட மாயாவோட வீட்டுக்குள்ளே நுழையலாம் இன்ஸ்பெக்டர் பேச அசோக் கமல் இருவரின் நம்பிக்கை சிறகுகள் விரிந்தன.

தொடரும்

Epsiode # 03

Epsiode # 05

{kunena_discuss:1142}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.