(Reading time: 9 - 18 minutes)

இந்த செமஸ்டர்க்கான syllabus , டைம் டேபிள் பிரிப்பது சம்பந்தப்பட்ட மீட்டிங்..

HOD “செழியா இந்த முறை உன்னால் இந்த வேலை முடிக்க முடிந்ததா.. உன் ஆராய்ச்சி வேலையே உனக்கு சரியாக இருந்து இருக்குமே.. இல்லை என்றால் இன்றைக்கு உட்கார்ந்து முடித்து விடலாம்.. “

“ஒன்னும் பிரச்சினை இல்லை சார்.. அதை இந்த முறை மலர் மேடத்திடம் கொடுத்து விட்டேன்.. போன வருஷம் நாம் செய்த அட்டவணையை மாதிரிக்கும் கொடுத்து இருந்தேன்.. இப்போ எனக்கு ஒரு பதினைந்து நிமிடம் கொடுத்தீங்கன்னா , அவங்க முடிச்சத எடுத்துட்டு நாம டிஸ்கஸ் பண்ணலாம்” என,

“ஓகே.. நீங்க செக் பண்ணுங்க.. நான் அதுக்குள்ளே மத்தவங்க கிட்டே பேசிட்டு இருக்கேன்..” என்று அனுமதி வழங்கினார்.

மலர் அவனிடம் தான் முடித்த வேலையை கொடுக்க, அதை வாங்கி வேகமாக பார்வையிட்டவன்,

“பெர்பெக்ட்.. மலர்.. ஒன்னு ரெண்டு திருத்தங்கள் மட்டும் தான்.. அது கூட டைம் வசதிக்க்காகதான்.. இதை அப்படியே HOD இடம் காட்டாலம் வாருங்கள் “ என்று அவளை அழைத்துக் கொண்டு போனான்..

போகும் வழியில் சற்று தூரம் சென்று யாரும் அற்ற தனிமையில் நின்றவன், சுற்று முற்றும் பார்த்தான்.. அவன் நின்றதை கவனிக்காது நடந்தவள் அவனில் முட்டி நின்றாள். அவசரமாக விலக எத்தனித்தவளின் கைகளை பிடித்தவன்

“ஐ மிஸ் யு சோ மச்.. மை விழி.. “என்று கைகளும் மேலும் இறுக்கினான்..

அவனின் செயலை எதிர்பார்க்கதவள் ஆகையால் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள் மலர்.

தொடரும்!

Episode # 18

Episode # 20

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.